நன்றி : தினமலர்
Monday, July 6, 2009
2008 - 09 ல் வளர்ச்சி விகிதம் 6.7 சதவீதமாக குறைந்திருக்கிறது : பிரணாப் முகர்ஜி
2009 - 10 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, கடந்த மூன்று நிதி ஆண்டுகளாக சராசரியாக 9 சதவீதமாக இருந்த இந்தியாவின் வளர்ச்சி விகிதம், 2008 - 09 நிதி ஆண்டில் 6.7 சதவீதமாக குறைந்திருக்கிறது என்றார். அவர் மேலும் தெரிவித்ததாவது : விரைவில் மீண்டும் 9 சதவீத வளர்ச்சியை அடைய தேவையான திட்டங்களை அரசு தீட்டி, அதற்கு ஏற்றபடி செயல்படும் என்றார். இந்த நிதி ஆண்டில் ஏழைகளுக்கு வீடு மற்றும் அடிப்படை தேவைகளை பூர்த்த செய்ய ஏற்படும் செலவுக்காக ரூ.3973 கோடி ஒதுக்கப்படுகிறது. ஜவஹர்லால் நேரு அர்பன் மறுவாழ்வு திட்டத்திற்காக ஒதுக்கப்படும் நிதி ரூ.12,887 கோடியாக உயர்த்தப்படும். விவசாய வளர்ச்சி 4 சதவீதமாக இருக்கும் என்று உத்தரவாதம் கொடுக்கலாம். விவசாய மற்றும் தொழில் வளர்ச்சிக்காக திட்டங்கள் தீட்டப்படும். 2008 ம் ஆண்டு, பொருட்கள் மற்றும் சர்வீஸ் துறையின் வர்த்தகம் இரட்டிப்õகி இருக்கிறது. உலக பொருளாதாரத்தில் இன்னும் ஸ்திரமற்ற தன்மையே நிலவி வருகிறது. இந்த ஒரு பட்ஜெட்டால் மட்டுமே நமது எல்லா பிரச்னைகளையும் சரி செய்து விட முடியாது. வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்ந்து வரும் மக்களின் எண்ணிக்கை, 2014 க்குள் பாதியாக குறைக்கப்படும். 2009 - 10 நிதி ஆண்டில் நிதி பற்றாக்குறை 6.8 சதவீதமாக இருக்கும். 2014 க்குள் உள்கட்டமைப்பு துறையில் முதலீடு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும். முதல் முறையாக பட்ஜெட் தயாரிக்கும் முன் மாநில நிதி அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறேன். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீண்டும் இந்தியாவில் முதலீடு செய்ய வந்திருக்கிறார்கள். பிபிபி முறையில் குறிப்பிட்ட துறையில் முதலீட்டை பெறுக்குவதில் மத்திய அரசு வெற்றி பெற்றிருக்கிறது. ஹைவேஸ் மற்றும் ரயில்வே வளர்ச்சிக்காக ஒதுக்கப்படும் நிதி 23 சதவீதம் உயர்த்தப்படுகிறது. விவசாயிகள், அவர்களது கடனில் 75 சதவீதத்தை அடைக்க, அதிகபட்டமாக டிசம்பர் 31, 2009 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment