Tuesday, July 7, 2009

தங்கம் விலை அதிகரிக்கும்

மத்திய பட்ஜெட்டில் தங்கக் கட்டிகள் இறக்குமதி மீதான சுங்க வரி அதிகரிக்கப்பட்டிருப்பதால் தங்கம் விலை அதிகரிக்கும். நேற்று சமர்ப்பிக்கப் பட்ட பட்ஜெட்டில், 10 கிராம் தங்கக்கட்டி இறக்குமதிக்கு வரி, 200 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது வரை, 100 ரூபாய் மட்டுமே இருந்தது. மேலும், தங்க ஆபரணம் உட்பட மற்ற தங்கம் சம்பந்தப்பட்ட பொருட் கள் இறக்குமதி என்றால், அதற்கு 10 கிராமுக்கு 500 ரூபாய் இறக்குமதி வரி வசூலிக்கப்படும்.
இதுவரை இருந்த இறக்குமதி சுங்க வரி போல இது இருமடங்காகும். அதே போல வெள்ளி ஒரு கிலோ இறக்குமதி செய்தால், அதன் மீதான சுங்க வரி, 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே சமயம் பிராண்ட் முத்திரை கொண்ட ஆபரணத் தங்க நகைகள் மீதான எக்சைஸ் வரி முற்றிலும் நீக்கப்பட்டிருக்கிறது.
பட்ஜெட் தாக்கல் உரையில், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, 'தங்கம், வெள்ளி மீதான சுங்கவரி அதிகரிப்பு பெண்களிடையே என் மீது அதிருப்தியை அதிகரிக்க வழி செய்யும்' என்றார். அதற்காகத் தான், ஆபரணத் தங்கம் மீதான எக்சைஸ் வரியை முற்றிலும் நீக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். தங்கம் மீதான சுங்கவரி உயர்வு குறித்து அகில இந்திய தங்கம் விற்பனையாளர் கூட்டமைப்பு தலைவர் ஷீல் சந்த் ஜெயின் கூறுகையில், 'தங்க வர்த்தகத்தைப் பாதிக்கும், அதே சமயம் ஆபரணத் தங்கம் மீதான எக்சைஸ் ரத்தால் அதிகம் பேர் பயனடையப் போவதில்லை' என்றார்.
நன்றி : தினமலர்


No comments: