இதற்கு தீபக் பரேக் அளித்த பேட்டி வருமாறு: இப்போதுள்ள வட்டி விகிதங்கள் ஏற்கனவே உச்சகட்டத்தில் உள்ளன. இந்நிலையில், மேலும் 0.5 சதவீதம் உயருமோ என்ற அச்சம் சந்தை வட்டாரத்தில் நிலவுகிறது. இது குறித்து பயம் தேவையில்லை. கடந்த சில வாரங்களாக ஏறிய பணவீக்கம் கணிசமாக குறையத்துவங்கியுள்ளது. எனவே, வட்டி விகிதம் அதிகரிக்கும் என்ற பயம் தேவையில்லை. கண்டிப் பாக பணவீக்கம் கட்டுக்குள் வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. வர்த்தக ரீதியான ரியல் எஸ்டேட் சந்தை தொடர்ந்து நீண்ட கால அடிப்படையில் நன்றாக இருக்கும். இதில் அச்சம் கொள்ள தேவையில்லை. ரியல் எஸ்டேட் துறை சந்தையில் பங்கேற்க வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வமாக உள்ளனர். நேரடி அன்னிய முதலீடு மற்றும் பங்குச் சந்தையில் ரியல் எஸ் டேட் நிறுவன பங்குகளை வாங்குவதில் கணிசமான வெளிநாட்டு முதலீடு அதிகரித்துவருகிறது. அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் வீடு மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் அன்னிய நேரடி முதலீடு 20 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும். இதில், புது பங்கு வெளியீடு மீண்டும் வரவேற்பை பெற சில காலம் ஆகலாம். வீட்டுக்கடன் வழங்கியதில் எச்.டி.எப்.சி.,யை பொ ருத்தமட்டில் இந்த நிதியாண் டின் முதல் நான்கு மாதங்களில் கடன் பெற்றோர் சதவீதம் கடந் தாண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 28 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தான் சற்று தொய்வு ஏற்பட்டு 22 சதவீதமாக இருந்தது. இந்தாண்டில் இனி வரும் மாதங்களில் 24 சதவீதத்திலிருந்து 25 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இரண்டாம், மூன்றாம் தர நகரங்களில் ரூ.15 லட்சம் முதல் ரூ.17 லட்சம் வரை கடன் வாங்குவோர் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. வீடுகளின் தேவை குறைந்தபாடில்லை. வீடுகளின் விலை சரியாக நிர்ணயிக் கப்பட்டால், அதன் தேவைக்கு ஏற்ப கிராக்கி தொடரும். இன்றைய நிலையை வைத்து வீடுகள் அல்லது மனைகளுக்கு அதிக பட்ச விலை என்ற போக்கு தொடர வாய்ப்பில்லை. விலை குறையும் என்று கருதி வாங்குவதா அல்லது வேண்டாமா என்று குழம்ப வேண்டாம். பிடித்தால் வாங்க வேண்டியது தான். ஆனால், எதிர்காலத்திலும் வீட்டு வசதி தேவை அதிகமாக இருக்கிறதே தவிர குறைய வாய்ப்பு இல்லை. 15 ஆண்டுகளுக்கான வீட்டுக் கடன் வசதி வட்டி விகிதம் ஏறி இறங்கி மாறுபாட்டுடன் இருக்கும். ரியல் எஸ்டேட் துறை தற்போது தான் ஒரு இணக்கமான சூழ்நிலையை எட்டிவருகிறது. விரைவில் இது மேல் நோக்கிச் செல்ல வாய்ப்பு உள்ளது. இவ்வாறு தீபக் பரேக் கூறினார்.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment