கச்சா எண்ணெய் விலை சர்வதேச அள வில் வெகுவாக சரிந்த போதும், அதன் தாக் கம் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலிக்கவில்லை. மாறாக தொழில் வளர்ச்சி புள்ளிவிவரத்தை காரணம் காட்டி, பங்குச் சந்தை புரோக்கர்களின் கைங்கரியத்தால் சரிவு ஏற் பட்டது.சர்வதேச அளவில் கடந்த வாரத்திலிருந்து கச்சா எண்ணெய் விலை சரிந்த போ தெல் லாம் இந்திய பங்குச் சந்தைகளில் நல்ல ஏற் றத்தைப் பார்க்க முடிந்தது. ஆனால், நேற்று கச்சா எண்ணெய் விலை பேரல் 113 டாலர் வரை குறைந்து வந்தது. இப்படி குறையும் சமயத்தில் தங்கத்தின் விலை குறைந்து, பங் குச் சந்தையில் ஏற்றத்தைப் பார்க்க முடியும்.தங்கத்தின் விலை கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்த போதும், பங்குச் சந்தை மட்டும் சறுக்கியது. ஐரோப்பிய மற்றும் ஆசிய சந்தைகளில் ஏற்பட்ட சரிவை காரணமாகக் கூறினாலும், இந்திய தொழில் உற்பத்தி புள்ளிவிவரம் வெளியானதை கையில் எடுத்துக் கொண்டு பெரும்பாலான ஆபரேட்டர்கள் தங்கள் வேலையை காண்பித்து விட்டனர்.கடந்த ஜூன் மாதம், தொழில் உற்பத்தி வளர்ச்சி 5.4 சதவீதமாக இருந்ததாக புள்ளி விவர பட்டியல் வெளியானது. மே மாதத்துடன் ஒப்பிடும் போது முன்னேற்றம் இருந்தாலும், கடந்த ஆண்டு ஒப்பிடும் போது இதே மாதத்தில்8.9 சதவீதமாக இருந்தது. கடைசியில் வர்த்தக முடிவில் 291.79 புள்ளிகள் சரிந்து மும்பை பங்குச் சந்தை 15,212 புள்ளிகளில் நிலை பெற்றது. தேசிய பங்குச் சந்தை68 புள்ளிகள் சரிந்து 4,552 புள்ளிகளில் நிலை பெற்றது.இப்போதெல்லாம் தொடர்ந்து ஆயிரம் புள்ளிகள் வரை ஏறினாலே, லாபம் கருதி விற்க வருவது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தான். இவர்கள் தான் தற்போதைய ஏற்ற இறக்கத்திற்கு காரணம். தாங்கள் வாங்கிய பங்குகளின் விலை 10 முதல் 20 சதவீதம் ஏறியிருந்தாலே விற்று விடுகின்றனர்.இப்போதைய நிலையில் 15,800 புள்ளிகளுக்குள் மும்பை பங்குச் சந்தை ஏறுவதும், பின்னர் இறங்குவதுமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதை, தொடர்ந்து சில நாட்களுக்கு சிறு முதலீட்டாளர்கள் கண்காணித்தாலே, சூட்சுமத்தை புரிந்து கொண்டு விடலாம்.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment