Friday, August 22, 2008

இனி தவனை முறையிலும் ஐபோன் வாங்கலாம் : வோடபோன் ஏற்பாடு

இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய மொபைல் சேவை நிறுவனமான வோடபோன் நிறுவனம், இந்தியாவில் இன்று ஆப்பிள் ஐபோன் விற்பனையை துவங்கி இருக்கிறது. வோடபோன் விற்பனை செய்யும் ஐபோன் ரூ.31,000 மற்றும் ரூ.36,000 விலையில் இருப்பதால், அவ்வளவு தொகை கொடுத்து வாங்க முடியாதவர்களுக்கான தவனை முறையில் ஐபோன் வாங்கவும் அந்த நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கிறது. இதற்காக வோடபோன் நிறுவனம், ஆக்ஸிஸ் பேங்க் மற்றும் பார்க்ளேஸ் வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஆறு அல்லது 12 மாத தவனையில் ஐபோனை விற்பனை செய்ய ஏற்பாடு செய்திருக்கிறது. அதாவது ஐபோனை தவனை முறையில் வாங்க விரும்புபவர்கள் இந்த மூன்று பேங்க்களில் ஏதாவது ஒன்றின் கிரிடிட் கார்டு மூலமாக வாங்கிக்கொள்ள வேண்டும். அதற்கான தொகையை 6 அல்லது 12 மாத தவனைகளில் ( இ எம் ஐ ) செலுத்த வேண்டும். இதற்கான வட்டி, மற்ற கடனுக்கு விதிக்கப்படும் வட்டியை விட குறைவாக இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஐ சி ஐ சி ஐ வங்கியுடனும் இது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது குறித்து நாட்டின் மிகப்பெரிய கிரிடிட் கார்டு நிறுவனமான சிட்டி பேங்க்குடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை என்று சொல்லப்படுகிறது. வோடபோனை பொருத்தவரை நாட்டின் 50 முக்கிய நகரங்களில் 250 கடைகளில் ஐபோன் விற்கப்படுகிறது. இது தவிர ஆப்பிள் நிறுவனமும் இந்தியாவில் இருக்கும் அதன் ஸ்டோர்களில் ஐபோனை வைத்திருக்கிறது. டில்லி, மும்பை, கோல்கட்டா மற்றும் பெங்களுருவில் இருக்கும் வோடபோன் வாடிக்கையாளர்கள் ரூ.5,000 அட்வான்ஸ் கொடுத்து புக் செய்து வைத்தால் அவர்களுக்கு இன்றிரவு ஐபோன் கொடுக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இம்மாதிரி இதுவரை 2,000 பேர் அட்வான்ஸ் கொடுத்துள்ளார்களாம். ஏர்டெல் நிறுவனமோ இதுவரை 2,00,000 பேரிடமிருந்து ஆர்டர் வாங்கி வைத்திருப்பதாக சொல்கிறது. அவர்கள் நாளைதான் ஐபோனை விற்பனை செய்கிறார்கள். இந்தியாவில் 65 நகரங்களில் ஏர்டெல் ஐபோனை விற்பனை செய்கிறது. இது தவிர ஐபோன் வாங்குபவர்களுக்கு 50 எம்பி வரை இலவசமாக டவுன்லோட் செய்து கொடுக்கிறார்கள்.இது தவிர வேறு சில சலுகைகளையும் அது அதன் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறது. ஆனால் வோடபோனை போல ஏர்டெல் நிறுவனத்திற்கு இ எம் ஐ மூலம் ஐபோனை விற்பனை செய்யும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. அமெரிக்காவை விட இந்தியாவில் ஐபோனின் விலை மிக அதிகமாக இருக்கிறது. அமெரிக்காவில் 199 டாலருக்கு ( சுமார் ரூ.8,300 ) ஐபோன் கிடைக்கிறது. இது தவிர வருடத்திற்கு 99 டாலரும் ( சுமார் ரூ.4,200 ) சேவை கட்டணம் செலுத்த வேண்டும். அமெரிக்காவில் விலை குறைவாக இருக்கிறதே என்று அங்கு ஐபோனை வாங்கி அதை இந்தியாவில் பயன்படுத்த முடியாது. எனென்றால் அங்கு வாங்கும் ஐபோன்கள் இங்கு வேலை செய்யாது. இங்கு வேலை செய்யாதவாறு அது லாக் செய்யப்பட்டிருக்கும்.
நன்றி : தினமலர்


9 comments:

Unknown said...

நீங்கள் சொல்வதை போல் ஆப்பிள் போன் லாக் செய்தலும்
அதை மென்பொருள் வைத்து வேலை செய்விக்க ஆகும்
http://www.pcadvisor.co.uk/news/index.cfm?newsid=10759

http://www.engadget.com/2007/09/12/first-free-open-gui-iphone-unlock-software-tested-it-works/

மங்களூர் சிவா said...

/
sharevivek said...

நீங்கள் சொல்வதை போல் ஆப்பிள் போன் லாக் செய்தலும்
அதை மென்பொருள் வைத்து வேலை செய்விக்க ஆகும்
http://www.pcadvisor.co.uk/news/index.cfm?newsid=10759

http://www.engadget.com/2007/09/12/first-free-open-gui-iphone-unlock-software-tested-it-works/
/

அதானே நம்ம ஆளுங்களா கொக்கா??
:)))))))))

மங்களூர் சிவா said...

அமெரிக்கால 8000 விக்கிற போன் இங்க 30,000 மா??

சொக்கா இவனுங்க கொள்ளைக்கு ஒரு அளவே இல்லையா??

பாரதி said...

sharevivek,மங்களூர் சிவா வருகைக்கு நன்றி

//சொக்கா இவனுங்க கொள்ளைக்கு ஒரு அளவே இல்லையா??//

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர் இருக்கவேண்டும் அல்லவா?

சயந்தன் said...

ஐபோனை வாங்கி அதை இந்தியாவில் பயன்படுத்த முடியாது. எனென்றால் அங்கு வாங்கும் ஐபோன்கள் இங்கு வேலை செய்யாது. இங்கு வேலை செய்யாதவாறு அது லாக் செய்யப்பட்டிருக்கும்.//

அதெல்லாம் உடைத்து நொருக்கி விடலாம். அதற்கென மென்பொருட்கள் வந்துவிட்டன. அப்பிள் தரும் applicatons தவிர third party applications வரை நாம் போட்டுகொள்ள முடியும்.

கடந்த ஒரு வருசமா நான் லாக் உடைத்த ஐபோன்தான் பயன்படுத்துகிறேன். :)

வடுவூர் குமார் said...

இங்கும் நேற்று இரவு முதல் விற்பனை தொடங்கிவிட்டது.இன்று காலை பேப்பரை பார்த்தால்...
இந்த தொலைப்பேசியில்
SMS forward பண்ணமுடியாதாம்
Bluetooth-- headset டோட மட்டும் தான் வேலை செய்யுமாம்.அடுத்த போனுடன் இணைக்கமுடியாதாம்.
கண்னி மூலம் இதன் உள் இருக்கும் கோப்புகளை பார்க்கமுடியாதாம்.
பேட்டரி கயட்டி நீங்களே மாற்றமுடியாதாம்,அவர்களிடமே 122 வெள்ளி கொடுத்து மாற்றவேண்டுமாம்.
இதெல்லாம் பார்த்தபிறகு,அட! போங்கையையா என்று தான் சொல்லமுடிகிறது.

பாரதி said...

சயந்தன்,வடுவூர் குமார் வருகைக்கு நன்றி


ஐபோன் தொடர்பான மற்றும் ஒரு பதிவு
http://parthy76.blogspot.com/2008/08/blog-post_8557.html

கூடுதுறை said...

இன்னும் 3 லிருந்து 6 மாதம் காத்திருந்தால் இங்கேயே யுஎஸ் விலையைக்கூட குறைவாக கிடைக்கும்... இப்போதே அவசரப்படவெண்டியதில்லை....

இதேல்லாம் ஆரம்ப ஜோர்தான்...

சிவாஜி படம் போல இருக்கும் என குசேலனை நினைத்த கதைதான்....

பாரதி said...

//இன்னும் 3 லிருந்து 6 மாதம் காத்திருந்தால் இங்கேயே யுஎஸ் விலையைக்கூட குறைவாக கிடைக்கும்... இப்போதே அவசரப்படவெண்டியதில்லை....//


சரியா சொன்னிர்கள்.