Friday, August 29, 2008

ரூ.14,999 க்கு லேப்டாப் : ஜெனித் அறிமுகப்படுத்தியது

இந்தியாவின் பெர்சனல் கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஜெனித், அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து ரூ.14,999 க்கு லேப்டாப்பையும் ரூ.11,999 க்கு டெஸ்க்டாப் கம்ப்யூட்டரையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது. டெக்ஸ்டாப் கம்ப்யூட்டரில் மூன்று மாடல்களில் இருக்கின்றன. இந்த மாடல்கள் எல்லாம் எக்கோஸ்டைல் என்ற பெயரில் வெளிவருகின்றன. இந்த கம்ப்யூட்டர்களில் உடலுக்கு தீங்கு செய்யும் சாதனங்கள் எதுவும் இல்லை என்றும், இது மற்ற கம்ப்யூட்டர்கரை விட 30 சதவீதம் குறைவான மின்சாரத்தில் வேலை செய்யும் என்று சொல்கிறார்கள். இவைகள் மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் விஸ்டா, மைக்ரோசாப்ட் எக்ஸ் பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை கொண்டிருக்கும். ரூ.14,999 க்கு விற்கப்படும் எக்கோஸ்டைல் லேப்டாப்தான் மார்க்கெட்டில் மிக குறைந்த விலையில் கிடைக்கும் மைக்ரோசாப்ட் ஆப்பரேட்டில் சிஸ்டத்தை கொண்டுள்ள லேப்டாப் என்று சொல்கிறார்கள். மைக்ரோசாப்ட் இந்தியாவின் சேர்மன் ரவி வெங்கடேசன் இதுகுறித்து பேசியபோது, எங்களது நோக்கமே மக்களுக்கு அவர்களால் வாங்கக்கூடிய விலையில் கம்ப்யூட்டரை கொடுக்க வேண்டும் என்பதுதான் என்றார்.
நன்றி : தினமலர்


5 comments:

Anonymous said...

Good good good......

ISR Selvakumar said...

நல்ல செய்தி! விரைவில் வாங்குவேன்

பாரதி said...

goooooood girl r.selvakkumar வருகைக்கு நன்றி

நவநீதன் said...

நினைவகத்தின் அளவு (அதாங்க... memory), பயன்படும் வேகம் (அதாங்க... Operating Speed), சிறப்புக்கள் (அதாங்க... Features) இதை பற்றி எல்லாம் தெரிந்து கொள்ள இணைப்பைக் (அதாங்க... Link)கொடுக்க முடியுமா?

பாரதி said...

நவநீதன் வருகைக்கு நன்றி

இதோ லிங்க்

http://www.techtree.com/India/News/Zenith_EcoStyle_Low-Cost_PC_Laptop/551-92674-581.html?up2cat=72