இது 61வது தொழிற்சாலை. எங்கள் குழுமம், ஒன்பது வகையான கார்களைத் தயாரித்து, 150 நாடுகளில் விற்பனை செய்கின்றன. ஓக்ஸ் வேகன் குழுமத்தின் 66 சதவீத உற்பத்தி, ஜெர்மனியைத் தவிர இதர நாடுகளில் உற்பத்தியாகிறது. இந்தியாவில் தற்போது 120 டீலர்கள் உள்ளனர். கடந்த 2001ம் ஆண்டு அவுரங்கபாத்தில் அமைக்கப்பட்டுள்ள எங்களது தொழிற்சாலையில் இருந்து ஸ்கோடா, ஓக்ஸ் வேகன் மற்றும் ஆடி வகை கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதற்கு அடுத்தபடியாக புனே கார் தயாரிப்பு தொழிற்சாலை 3,800 கோடி ரூபாய்(580 மில்லியன் யூரோ) முதலீட்டில் நிறுவப்பட்டுள்ளது.
ஜெர்மனிய நிறுவனங்கள் சார்பில், இந்தியாவில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளில் இந்த முதலீடு தான் அதிகமானதாகும். புனே தொழிற்சாலையில் இருந்து ஆண்டுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்ய முடியும்; 2,500 தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறவுள்ளனர்.
இந்தியா மாற்றத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. நாட்டை முன் னேற்றத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டுமென இந்திய மக்கள் நினைக் கின்றனர். அதற்காக உழைக்கவும் துவங்கி விட்டனர். இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான மக்கள், தங்களுக்கென்று சொந்தமாக ஒரு கார் இருக்க வேண்டுமென விரும்புகின்றனர். இதனால், இந்தியாவின் ஆட்டோ மொபைல் சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. அடுத்த ஐந்தாண்டுகளில், ஆண்டுக்கு 20 லட்சம் கார்கள் தேவையாய் இருக் கும். ஜெர்மனிய தொழில் நுட்பமும், இந்திய திறமையும் இணையும் இந்தத் தொழிற்சாலை மிகப் பெரிய வெற்றியைப் பெறும். ஓக்ஸ் வேகன் நிறுவன தலைவர் ஜெயெர்க் முல்லர், துணைத் தலைவர்கள் டெட்லெப் விட்டிங், கே.கே.சுவாமி, நிர்வாகக் குழு உறுப்பினர் அல்ரிச் ஹெகன் பெர்க் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment