Thursday, April 2, 2009

2016ம் வருடத்துடன் மாருதி 800, ஆம்னி தயாரிப்பது நிறுத்தப்படும்

இந்தியாவில் தனியார் வாகன சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, தொடர்ந்து அதிகம் விற்கும் கார் என்ற பெயரை தக்க வைத்திருக்கும் மாருதி 800 கார், 2016ம் வருடத்திற்கு பிறகு கிடைக்காது. அடுத்த வருடத்தில் இருந்து அதன் தயாரிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு, 2016ம் வருடத்துடன் அது முழுவதுமாக நிறுத்தப்பட்டு விடும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. வாகனங்கள் வெளியிடும் புகை குறித்த புதிய வரைமுறைகள் அப்போது இந்தியாவில் தீவிர நடைமுறையில் இருக்கும் என்று எதிர்பார்ப்பதால், இந்த காரின் தயாரிப்பது நிறுத்தப்படும் என்று மாருதி சுசுகி இந்தியா தெரிவித்திருக்கிறது. மாருதி 800 காருடன், அவர்களது இரண்டாவது பழைய வாகனமான ஆம்னி தயாரிப்பும் நிறுத்தப்படுகிறது. அடுத்த வருடத்தில் இருந்தே இந்தியாவில் 11 நகரங்களில் மாருதி 800 மற்றும் ஆம்னி வேன்கள் கிடைக்காது. அடுத்த வருடத்தில் இருந்து வாகனங்கள் புகை வெளியிடுவது குறித்து மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் ' பாரத் ஸ்டேஜ் - 4 எமிஸன் ' வரைமுறை ( இது யூரோ - 4 எமிஸன் வரைமுறைக்கு நிகரானது ) டில்லி, மும்பை, ஐதராபாத், பெங்களுரு உள்பட 11 நகரங்களில் நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அந்த 11 நகரங்களிலும் மாருதி 800 மற்றும் ஆம்னி வேன்கள் விற்பனை நிறுத்தப்படுகிறது. அடுத்த வருடம் 11 நகரங்களில் மட்டும் நடைமுறைப் படுத்தப்படும் யூரோ - 4 எமிஸன் வரைமுறை, 2015 - 16 வாக்கில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் சொல்லப்படுகிறது. அப்போது மாருதி 800 மற்றும் ஆம்னி வேன்களின் விற்பனை முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விடும் என்றார் மாருதி சுசுகி இந்தியாவின் சேர்மன் ஆர்.சி.பார்கவா.
நன்றி : தினமலர்


No comments: