Thursday, April 2, 2009

கே.ஜி.படுகையில் எரிவாயு உற்பத்தியை ஆர்.ஐ.எல்., துவங்கியது : இந்தியாவின் இறக்குமதி பில் பெருமளவு குறையும்

கே.ஜி.( கிருஷ்ணா - கோதாவரி ) ஆற்றுப்படுகையில் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸூக்கு சொந்தமான இருக்கும் எண்ணெய் கிணற்றில் இருந்து எரிவாயு உற்பத்தி துவங்கியதை அடுத்து, இந்தியாவின் எரிவாயு இறக்குமதி பில் 9 பில்லியன் டாலர்கள் ( சுமார் 48,000 கோடி ரூபாய் ) வரை குறையும் என்று மத்திய பெட்ரோலிய துறை செயலாளர் ஆர்.எஸ்.பான்டே தெரிவித்தார். கே.ஜி. ஆற்றுப்படுகையில் உற்பத்தி துவங்கப்பட்டு விட்டதாக நேற்று ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் எங்களிடம் தெரிவித்தது என்று ஆர்.எஸ்.பான்டே தெரிவித்தார். ஆரம்பத்தில் அவர்கள் நாள் ஒன்றுக்கு 2.5 மில்லியன் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டர் எரிவாயு உற்பத்தி செய்கிறார்கள் என்றும், பின்னர் நாளையே அது 5 மில்லியனாக அதிகரிக்கப்படும் என்றும் பான்டே கூறினார். அங்கு, அவர்களுக்கு இருக்கும் 15 கிணறுகளில், முதல் கிணற்றில் இருந்து தான் இப்போது எரிவாயு எடுக்கப்படுகிறது. அதிலிருந்து முழு அளவிலான உற்பத்தி இன்னும் மூன்று அல்லது நான்களில் நடக்கும். இன்னும் 15 நாட்களில் அதன் கடைசி கிணற்றில் இருந்தும் உற்பத்தி துவங்கிவிடும் என்று ஆர்.ஐ.எல்., தெரிவித்திருக்கிறது. இன்னும் நான்கு மாதங்களில் அங்கிருந்து கிடைக்கும் மொத்த எரிவாயுவின் அளவு 40 மில்லியன் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டராக இருக்கும் என்றும், இன்னும் ஒரு வருடத்தில் அது 80 மில்லியன் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டராக இருக்கும் என்றும் ஆர்.ஐ.எல்., தெரிவித்ததாக பான்டே தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


No comments: