Thursday, April 2, 2009

ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸின் ஜாம்நகர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ

குஜராத் மாநிலம் ஜாம் நகரில் இருக்கும் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸூக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று திடீரென தீ பிடித்துக்கொண்டது. இது குறித்து அந்த நிறுவனத்தின் அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது, இது லேசான தீ விபத்து தான் என்றும், தீ உடனடியாக அணைக்கப்பட்டு விட்டது என்றும், இதனால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தனர். அங்கு உற்பத்தி வழக்கம்போல் நடந்து வருவதாகவும், ஏற்றுமதியும் வழக்கம் போல் நடப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். நாள் ஒன்றுக்கு 5,80,000 பேரல்கள் எண்ணெய்யை சுத்திகரிக்கும் திறன் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் கடந்த டிசம்பர் 2008 ல் தான் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் நிறுவனத்தால் அமைக்கப்பட்டது. முற்றிலும் ஏற்றுமதிக்காக இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டுள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் கச்சா எண்ணெய்யை எரிபொருளாக மாற்றும் இடத்தை கோக்கர் என்கிறார்கள். அந்த இடத்தில் தான் நேற்று தீ பிடித்தது. கோக்கர் தான் கச்சா எண்ணெய்யை எரிபொருளாக, அதாவது பெட்ரோலாக, டீசலாக, நாப்தாவாக மாற்றும்.
நன்றி :தினமலர்


No comments: