நன்றி : தினமலர்
Thursday, April 2, 2009
பணவீக்கம் சிறிதளவு உயர்ந்து 0.31 சதவீதமாகியது
மார்ச் 21 ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 0.31 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இது, இதற்கு முந்தைய வாரத்தில் 0.27 சதவீதமாகத்தான் இருந்தது. மிக குறைந்த அளவான 0.04 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் பணவீக்கம் 7.8 சதவீதமாக இருந்திருக்கிறது. டீ, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய், குளிர்பானங்கள், ஆயில்கேக், வாசனை திரவியங்கள் போன்ற உணவுப்பொருட்களும், ரப்பர், பிளாஸ்டிக், பி.வி.சி.பைப்கள் போன்றவைகளின் விலை உயர்ந்திருப்ப தால் பணவீக்கம், கடந்த வாரத்தை விட சிறிதளவு உயர்ந்து விட்டது என்கிறார்கள். கடந்த வாரத்தை விட இந்த வாரத்தில் தேயிலையின் விலை 48 சதவீதமும், பாக்கெட் செய்யப்பட்ட தேயிலை விலை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரின் விலை 22 மற்றும் 10 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment