Friday, April 3, 2009

ராணி எலிசபெத்தை சந்தித்த போது மரபை மீறி நடந்துகொண்ட மிச்சல் ஒபாமா

ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள லண்டன் சென்ற அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் அவரது மனைவி மிச்சல் ஒபாமாவும் பக்கிங்ஹாம் அரண்மணைக்கு சென்று, இங்கிலாந்து ராணி எலிசபெத்தை தனிப்பட்ட முறையில் சந்தித்தனர். ஒருவருக்கொருவர் பரிசுகளை பரிமாறிக்கொண்டனர். இதில் ஒன்றும் பிரச்னை இல்லை. ஆனால் ராணி எலிசபெத்தை சந்திக்க செல்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் என்று நிறைய இருக்கின்றன. இந்த மரபைத்தான் மிச்சல் ஒபாமா மீறி நடந்துகொண்டார் என்று பிரச்னை ஆகி இருக்கிறது. ராணியை சந்திக்க செல்பவர்கள் ஆண்கள் என்றால் தலையை லேசாக குனிந்து வணக்கம் சொல்ல வேண்டும். பெண்கள் என்றால் ஒரு முழங்காலை மடக்கி வணக்கம் தெரிவிக்க வேண்டும். சந்திக்க வருபவர்கள் யாராக இருந்தாலும் இதை கடைப்பிடிக்க வேண்டும். இந்த மரபை ஒபாமாவின் மனைவி மிச்சல் ஒபாமா கடைப்பிடித்ததாக சொல்லப்படுகிறது. அதேபோல் ராணியை யாரும் தொட்டு பேசக்கூடாது. ஆனால் மிச்சல் ஒபாமா இந்த மரபை மீறி, ராணியின் முதுகில் தொட்டு, அவரை லேசாக அணைத்து சென்றதாக தெரிகிறது. இது மரபை மீறிய செயலாக பிரிட்டனில் கருதப்பட்டு பிரச்னையை ஏற்படுத்தி இருக்கிறது.
நன்றி : தினமலர்


2 comments:

ரங்குடு said...

ஒரு சந்தேகம் அண்ணே. ராணியை யாரும் தொடக் கூடாதுன்னா, ராஜா கூடவா? அப்படின்னா வாரிசுகள்?

பாரதி said...

கேள்வி கொச்ஞ்சம் விவகரமாதான் இருக்கு.

வருகைக்கு நன்றி