Friday, April 3, 2009

11 மாதங்களில் ஆயுள் காப்பீட்டுத்துறை வளர்ச்சி வெறும் 0.06 சதவீதம்தான்

பொருளாதார மந்த நிலை காரணமாக இந்தியாவில் பல துறைகளில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. அந்த வரிசையில் ஆயுள் காப்பீட்டு துறையும் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் வெளியான தகவல் அதனை உறுதி படுத்துகிறது. கடந்த 2008 ஏப்ரலில் இருந்து 2009 பிப்ரவரி வரையில் எடுத்த கணக்கெடுப்பில், ஆயுள் இன்சூரன்ஸ் துறை வெறும் 0.06 சதவீதம் மட்டுமே வளர்ந்துள்ளது என்பது தெரிய வந்திருக்கிறது. ஏப்ரல் - பிப்ரவரி 11 மாதத்தில் அந்த துறையில் வந்த பிரீமியம் தொகை ரூ.72,017.17 கோடி மட்டுமே. இது அதற்கு முந்தைய வருட காலத்தில் ரூ.71,971 கோடியாக இருந்தது. 0.06 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்திருக்கிறது. கடந்த 11 மாத காலத்தில் அதிகம் நஷ்டமடைந்திருப்பது பஜாஜ் அலியான்ஸ் நிறுவனம்தான். அதன் வளர்ச்சி 28.29 சதவீதம் குறைந்திருக் கிறது. அதற்கு அடுத்ததாக அவிவா 27 சதவீதம், ஐசிஐசிஐ புருடென்ஷியல் 12.4 சதவீதம், ஹெச்டிஎஃப்சி ஸ்டாண்டர்டு லைஃப் 6.34 சதவீதம், எல்.ஐ.சி.,4.03 சதவீதம் குறைந்திருக்கிறது. பொதுவாக இன்சூரன்ஸ் துறையில் அதிகம் வர்த்தகம் நடப்பது நிதி ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில்தான். ஆனால் இந்த நிதி ஆண்டின் கடைசி இரண்டு மாதங்களில் எதிர்பார்த்த வர்த்தகம் நடக்கவில்லை. எனவே மார்ச்சிலும் அதிகம் எதிர்பார்க்க முடியாது என்கிறார்கள்.

நன்றி : தினமலர்


No comments: