Friday, April 3, 2009

அதிகம் விலை கொடுக்க முன்வருபவருக்கே சத்யம் கம்ப்யூட்டர்ஸ் : போர்டு முடிவு

அதிகபட்ச ஏலத்தொகையில் 90 சதவீதம் வரைக்கும் யாரும் கேட்கவில்லை என்றால், யார் அதிக விலைக்கு கேட்கிறார்களோ அவர்களுக்கு சத்யத்தை கொடுத்து விடுவது என்று அதன் போர்டு முடிவு செய்திருக்கிறது. இதற்காக இன்னொரு முறை ஏலம் அறிவிக்கப்பட மாட்டாது என்று அது தெரிவித்திருக்கிறது. சத்யத்தை வாங்க விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருந்தவர்களின் டெக்னிக்கல் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு விட்டன .அவைகள் திருப்தி அளிப்பவைகளாகத்தான் இருக்கின்றன. இனிமேல் அவர்கள் என்ன விலைக்கு கேட்கிறார்கள் என்ற விபரத்தை மட்டுமே பார்க்க வேண்டும் என்றார் நீதிபதி பரூச்சா. சத்யத்தின் 51 சதவீத பங்குகளை விற்கும் வேலையை சரிபார்க்க இவரைத்தான் மத்திய அரசு நியமித்திருக்கிறது. சத்தயத்தின் பங்குகளை விற்கும் விதம் மாற்றப்பட்டிருப்பதால், இந்த விபரங்கள் செபிக்கும் தெரிவிக்கப் பட்டிருக்கின்றன. சத்யத்தை வெளிப்படையான ஏலம் ( ஓப்பன் பிட் ) மூலம் தான் விற்க வேண்டும் என்று, அதனை வாங்க முதலில் விருப்பம் தெரிவித்து விட்டு பின்னர் பின்வாங்கிய பி.கே.மோடியின் ஸ்பைஸ் குரூப் சொன்னது. சத்யம் ஓப்பன் பிட் மூலமாக விற்கப்பட்டால் மீண்டும் அதனை வாங்கும் முயற்சியில் ஈடுபடுவோம் என்றும் சொல்லியது. இப்போது அது மீண்டும் சத்யத்தை வாங்கும் முயற்சியில் ஈடுபடுமா என்று கேட்டபோது, நாளை சனிக்கிழமை நடக்க இருக்கும் எங்கள் போர்டு மீட்டிங்கில் இதனை தீர்மானிப்போம் என்றனர். அதிக பட்ச ஏலத்தொகையில் 90 சதவீதம் வரையுள்ள தொகைக்கு ஒருவேளை ஒன்றுக்கு மேற்பட்டவார்கள் கேட்டிருந்தால், அவர்களை நேரில் வரச்செய்து ஏலம் விடப்படும். அதில் அதிகபட்ச தொகைக்கு யார் கேட்கிறார்களோ அவர்களுக்கு சத்யம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நன்றி : தினமலர்


No comments: