Friday, April 3, 2009

மார்ச் மாதத்தில் ரூ.7,000 கோடி முதலீட்டை இழந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள்

பரஸ்பர நிதி என்று சொல்லப்படும் மியூச்சுவல் பண்ட்டின் முதலீடு, மார்ச் மாதத்தில் ரூ.7,000 கோடிக்கு மேல் குறைந்திருக்கிறது. எனவே இப்போது மியூச்சுவல் ஃபண்ட்டின் மொத்த முதலீடு ரூ.5 லட்சம் கோடிக்கும் கீழே சென்று விட்டது. ஆனால் மற்ற எல்லா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் மார்ச் மாதத்தில் முதலீட்டை இழந்திருக்கும்போது, ஹெச்.டி.எஃப்.சி.பேங்க் மட்டும் ரூ.1,000 கோடி முதலீட்டை கூடுதலாக பெற்றிருக்கிறது. மார்ச் மாதத்தில் இந்தியாவில் இருக்கும் 34 மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் ( ' அசட் அன்டர் மேனேஜ்மென்ட் ' - ஏ யு எம் ) முதலீடு ரூ.7,709.10 கோடி ( 1.54 சதவீதம் ) குறைந்து ரூ.4,93,264.28 கோடியாகி விட்டது என்று அசோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் பண்ட் இன் இந்தியா தெரிவித்திருக்கிறது. பிப்ரவரி மாதத்தில் மியூச்சுவல் பண்டில் செய்யப்பட்டிருந்த மொத்த முதலீடு ரூ.5,00,973.38 கோடியாக இருந்தது. இந்தியாவின் பிரபல முதலீட்டு நிறுவனங்களான ரிலையன்ஸ் எம்.எஃப், ஐசிஐசிஐ புருடென்ஸியல், யு.டி.ஐ.எம்.எஃப், மற்றும் எல்.ஐ.சி.எம்.எஃப்., ஆகியவை மட்டும் மொத்தமாக ரூ.4,3058.53 கோடியை மார்ச் மாதத்தில் இழந்திருக்கிறது. ஆனால் ஹெச்.டி.எஃப்.சி பேங்க் மற்றும் கூடுதலாக ரூ.1,092.05 கோடி முதலீட்டை பெற்றிருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: