நன்றி : தினமலர்
Friday, August 14, 2009
உருகாத சாக்கலேட்டுகள் : வெப்ப பிரதேசங்களுக்காக பேரி கேல்பாட் நிறுவனம் புது முயற்சி
சாக்கலேட்டுகளுக்கு ஆசைப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால் சற்று வெப்பம் அதிகமாக இருக்கும் நாடுகளில் பிரிட்ஜ் இல்லையென்றால் சக்கலேட்டு கூலாக மாறி விடுகிறது. சாக்கலேட் பிரியர்கள் சந்திக்கும் இந்த அசவுரியகத்திற்கு பை சொல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது வெப்பத்தை தாக்கு பிடிக்கும் புதிய ரக சாக்கலேட்டுகள். சாக்கலேட் இன்டஸ்டிரீயில் தனக்கு என தனி முத்திரை கொண்டதுரி கேல்பாட் நிறுவனம். இந்த நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் சுமார் 55 டிகிரி வரை வெப்பத்தை தாங்கும் திறன் கொண்டதாக உள்ளன. கூடுதல் சந்தோஷம் என்னவென்றால், இம்மாதிரியான சாக்கலேட்டுகள் லோ கலோரி கொண்டதாகவும் தயாரிக்கப்பட்டுள்ளன . சாக்கலேட் விற்பனை குறித்து தெரிவித்த பேரி கேல்பாட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஹான்ஸ் ரையன்ஸ் : மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் சாக்கலேட் பிரியர்கள் சற்று குறைவு தான் . அதற்கு சாக்கலேட்டுகள் உருகி விடுவதும் ஒரு காரணம் என்றார். பிரிட்டன், பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகள் தான் அதிக அளவில் சாக்கலேட்டுகளை எக்ஸ்போர்ட் செய்வதாக கூறிய அவர் புதிய க்ளையன்டுகளை இணைப்பதற்காகத்தான் இம்மாதிரியான புதுமைகள் புகுத்தப்படுவதாகவும் கூறினார். புதிய உருகாத சாக்கலேட்டுகளுக்கு பேரி கேல்பாட் நிறுவனம் ' வால்கனோ' என்று பெயர் வைத்துள்ளது. இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த சாக்கலேட்டுகள் வெப்பத்துக்கு தான் ரெசிஸ்டன்ட் , ஆனால் வாயில் போட்டவுடன் எச்சில் பட்ட நிமிடத்தில் கரைந்து விடுமாம். எனவே சாக்கலேட்டின் தன்மை மாறாமல், வெப்பத்துக்கும் தாக்குப்பிடிக்கும் இந்த புதிய படைப்புக்கு அமோக வரவேற்பு இருக்கும் என பேரி கேல்பாட் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. உருகாத சாக்கலேட் தயாரிப்பு சக்சஸ் ஆனவுடன், ஆரோக்யமான, சத்து நிறைந்த சாக்கலேட்டுகளை உருவாக்கும் திட்டத்தில் களமிறங்குகிறது பேரி கேல்பாட்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment