நன்றி : தினமலர்
Friday, August 14, 2009
தொடரும் கோவை விசைத்தறி ஊழியர்கள் வேலைநிறுத்தம் : முடங்கி கிடக்கும் 2 லட்சம் யூனிட்டுகள்
கோவை மாவட்டம் விசைத்தறி ஊழியர்கள் வேலைநிறுத்தம் 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து நடந்து வருகிறது. சுமார் 16,000 பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். விசைத்தறி யூனிட்டுகள் ஸ்டிரைக் காரணமாக முடங்கி கிடப்பதால், நாள் ஒன்றுக்கு சுமார் 15 முதல் 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது . கோவை மண்டலத்தில் உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி யூனிட்டுகள் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் முடங்கி கிடக்கின்றன. விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் அளிக்கும் ஜாப் ஒர்க்கை எடுத்து செய்யும் இந்த யூனிட்டுகள், யார்னை துணியாக மாற்றித்தருகின்றன. ஒரு மீட்டர் யார்னை துணியாக மாற்ற 12 முதல் 20 ரூபாய் வரை பெறப்பட்டு வந்தது. தற்போது அதற்கு அளிக்கப்படும் கூலி 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து தான் வேலைநிறுத்தம் நடந்து வருகிறது. மேலும் தமிழ்நாடு மின்சார வாரியம் விதித்துள்ள சுமார் 80 லட்சம் அபராதத்தையும் திரும்பப்பெறுமாறு கோரிக்கை வைத்துளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை மண்ட,த்தில் தயாரிக்கப்படும் 60 சதவீதம் துணி ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக ஆப்ரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால் தற்போது வேலைநிறுத்தம் நீடிப்பதால், ஏற்றுமதி 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment