Saturday, August 2, 2008

பாதுகாப்புக்காக கோடிகளை இறைக்கும் தனியார் நிறுவனங்கள்


உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையாலும், அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்து வருவதாலும், பல்வேறு நிறுவனங்களும் பாதுகாப்புக்காக, கோடி கோடியாக செலவிட்டு வருகின்றன. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ள தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த குண்டு வெடிப்புச் சம்பவங்களால், நாடே அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ள தொழில்துறை மீது பயங்கரவாதிகள் குறிவைத்து இருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே சுதாரித்துக் கொண்ட பல்வேறு நிறுவனங்களும், பாதுகாப்பு மேலாண்மை மற்றும் பயங்கரவாத தாக்குதல் காப்பீடு போன்றவற்றில் தீவிர கவனம் செலுத்திவருகின்றன. சமீப ஆண்டுகளில் தனியார் நிறுவனங்கள், பாதுகாப்புக்காக செலவிடும் தொகையை பெரிதும் அதிகரித்தள்ளன. 97 சதவீத நிறுவனங்கள் பாதுகாப்பை மிக முக்கியமானதாக கருதுகின்றன. பாதுகாப்புக்காக தனியார் நிறுவனங்கள் செலவிடும் தொகை பற்றிய புள்ளி விவரங்கள் இல்லாவிட்டாலும், நடுத்தரமான ஒரு நிறுவனம், ஆண்டு ஒன்றுக்கு ஏழு கோடி ரூபாய் வரை செலவிடுவதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால், பாதுகாப்பு துறையில் உள்ள நிறுவனங்களுக்கு அதிக வருவாய் கிடைத்து வருகிறது. குருப் 4 செக்யூரிட்டீஸ் நிறுவனம், பயிற்சி பெற்ற ஒரு லட்சத்து 50 ஆயிரம் பாதுகாவலர்களை பணியில் அமர்த்தி உள்ளது. தற்போது நாடு முழுவதும், 50 லட்சம் தனியார் பாதுகாவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இத்துறையில் ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் புரளுகிறது. தனியார் நிறுவனங்கள் மூலம் தங்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தி கொண்டாலும், ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்கள் இல்லாதது பல்வேறு நிறுவனங்களுக்கும் ஒரு குறையாகவே இருக்கிறது. தனியார் நிறுவன பாதுகாவலர்கள் ஆயுதம் ஏந்தி பாதுகாப்பு அளிக்க, இந்திய சட்டம் இடம் கொடுக்கவில்லை. இதனால், பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் போதெல்லாம், போலீஸ் பாதுகாப்பை கோர வேண்டிய நிலை உள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் முக்கிய காரணமாக உள்ள கம்ப்யூட்டர் நிறுவனங்களை கருத்தில் கொண்டு, இவற்றுக்கு விரைவில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நன்றி : தினமலர்



4 comments:

ராஜ நடராஜன் said...

பாதுகாப்பு அதிகரிச்சா நல்லதுதான்.ஆனா என்னப் பிரச்சினையின்னா டிபார்ட்மெண்டுக்குள்ளே போறதுக்கு நேரமாகும்.அதுக்கு ஒரு 10 நிமிசம் வீட்டுல இருந்து முன்னாடியே கிளம்ப வேண்டி வரும்.பங்குசுவாலிட்டி என்னன்னு மீண்டும் டாடாவை வரச்சொல்லி பாடம் நடத்தவேண்டியிருக்கும்:)

கோவை விஜய் said...

இன்றய பயங்கரவாதம் தன் கொடுங்கரங்களால் செய்யும் கொடுமைகளை தடுக்க வேறு வழியில்லையே!

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

வினவு said...

http://vinavu.wordpress.com

பாரதி said...

ராஜ நடராஜன்,கோவை விஜய், Vinavu வருகைக்கு நன்றி