Saturday, August 2, 2008

ஜூன் மாதத்தில் இந்தியாவின் குரூட் ஆயில் இறக்குமதி 53.4 சதவீதம் அதிகரிப்பு



சர்வதேச சந்தையில் தொடர்ந்து உயரத்தில் இருக்கும் கச்சா எண்ணெய் விலையால், ஜூன் மாதத்தில் இந்தியா இறக்குமதி செய்த குரூட் ஆயிலின் பில் தொகை கடந்த வருடத்தை விட 53.4 சதவீதம் உயர்ந்து 9.03 பில்லியன் டாலராகி விட்டது. இதுவே கடந்த வருடம் ஜூன் மாதத்தில் 5.89 பில்லியன் டாலராகத்தான் இருந்தது. இந்த ஆண்டு ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இந்தியாவின் குரூட் ஆயில் இறக்குமதி 50.2 சதவீதம் அதிகரித்து, அதன் பில்தொகை 25.52 பில்லியன் டாலராக இருந்தது. இது இதற்கு முந்தைய ஆண்டில் 16.99 பில்லியன் டாலராகத்தான் இருந்தது. இந்த உயர்வு எதனால் ஏற்பட்டது என்றால் இந்த வருடம் முதல் காலாண்டில் இந்தியாவின் டிரேட் பெஃபிசிட் 41.7 சதவீதம் அதிகரித்து 30.42 பில்லியன் டாலராக இருந்ததால்தான் என்கிறார்கள். இந்த வருடம் ஏப்ரல் - ஜூன் மாதத்தில் இந்தியா வாங்கும் பேஸ்கட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 118.50 டாலராக இருந்தது. இதுவே கடந்த வருடம் ஏப்ரல் - ஜூன் மாதத்தில் 77.25 டாலராகத்தான் இருந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 123.35 டாலராக இருக்கிறது.


நன்றி : தினமலர்


No comments: