தென் ஆப்ரிக்காவின் எம்.டி.என்., நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை எதையும் நாங்கள் நடத்தவில்லை என்று பார்தி ஏர்டெல் நிறுவன சேர்மன் சுனில் மிட்டல் தெரிவித்தார். எம்.டி.என்., நிறுவனத்தை வாங்கிக்கொள்ளும் முயற்சியில் கடந்த மே மாதத்தில் ஈடுபட்ட ஏர்டெல், பின்னர் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் அந்த முயற்சியில் ஈடுபடவே பின்வாங்கி விட்டது. இந்நிலையில் ஏர்டெல், மீண்டும் எம்.டி.என்.,உடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது என்று பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்திகளுக்கு பதிலளிக்கவே, அதனுடன் நாங்கள் பேச்சுவார்த்தைஎதையும் நடத்தவில்லை என்று தெரிவித்திருக்கிறார். வருடாந்திர பங்குதாரர்கள் கூட்டத்தில் பேசிய சுனில் மிட்டல், பார்தி ஏர்டெல் நிறுவனம், விரைவில் வர இருக்கும் 3ஜி டெக்னாலஜியை பெறும் முயற்சியில் ஈடுபடும் என்றார்.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment