துபாயில் ரியல் எஸ்டேட் நிலவரம் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்து வருகிறது. கடந்த திங்கள் அன்று ஒரே நாளில் 560 கோடி ரூபாய்க்கு மனை பரிமாற்றம் நடந்துள்ளது; அதில் ஒரு மனை 20 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது. துபாயில் கட்டுமான பணிகள் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு நடந்து வருகின்றன. பல இடங்களில் மனைகள் கிடைப்பது அரிதாகி வருகிறது. சமீப காலமாக வர்த்தக பயன்பாட்டுக்கு மட்டுமின்றி, தனி நபர் வாங்கும் மனைகளும் அதிகரித்து வருகின்றன.
கடந்த செவ்வாயன்று முடிந்த 20 விற்பனைகளில் மிக அதிக விலையில், அல் பஷ்ரா பகுதியில் 20 கோடி ரூபாய்க்கு ஒரு மனை விற்பனை ஆகியுள்ளது. மிர்டிப் பகுதியில் எட்டு கோடி ரூபாய்க்கு ஒரு மனை விற்பனை ஆகியுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்டில் துபாயில் தான் அதிக அளவில் ரியல் எஸ்டேட் வர்த்தகம் நடந்து வருகிறது. வானளாவ கட்டடங்கள் கட்டப்படுவதும் அதிகரித்து வருகிறது; தனி நபர் மனை வாங்கி வீடு கட்டும் நடவடிக்கைகளும் அதிகமாகி வருகின்றன. கோடிக்கணக்கில் மதிப்புள்ள மனைகள் விற்பனை ஒரு நாளைக்கு 35 முதல் 50 வரை நடந்து வருகின்றன.
இந்தியாவை போலவே ரியல் எஸ்டேட் வர்த்தகம் பல மடங்குக்கு உயர்ந்து வருகிறது. இதுகுறித்து, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கூறுகையில்,'வர்த்தக ரீதியாக சர்வதேச கட்டடங்கள் கட்டப்படுவது அதிகரித்து வருகிறது. இதனால், ரியல் எஸ்டேட் நிலவரம் அதிகரித்து வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் துபாயில் வீட்டு மனைகளுக்கு பற்றாக்குறையாகி விடும் அளவுக்கு நிலைமை அதிகரித்து வருகிறது' என்று தெரிவித்தன.

நன்றி : தினமலர்
1 comment:
படத்தில் உள்ள மாதிரி ஆட்கள் அந்த தூக்கியில் நிற்கலாமா? துபாய் அரசு அனுமதிக்கிறதா?
சிங்கையில் எனக்கு தெரிந்து அனுமதியில்லை.
Post a Comment