நன்றி : தினமலர்
Wednesday, August 12, 2009
இந்தியா புல்ஸ் ஷேர் டிரேடிங் நிறுவன துணை தலைவர் கைது
இந்தியாபுல்ஸ் ஷேர் டிரேடிங் நிறுவனத்தின் துணை தலைவர் சித்தார்த்த தாகா கைது செய்யப்பட்டுள்ளார். ஆன்லைன் மூலம் ஷேர் டிரேடிங்கில் மோசடி செய்த குற்றத்துக்காக சித்தார்த்தை போலீசார் கைது செய்துள்ளதாக தெரிகிறது. சித்தார்த் அரவது நிறுவனத்தில் பணிபுரியும் சார்டர்ட் அக்கவுண்டன்ட் ஒருவரின் டிரேடிங் அக்கவுண்ட் மூலம் முறைகேடாக வர்த்தகத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 6ம் தேதியன்று நடந்த வர்த்தகத்தின் போது ஒரு குறிப்பிட்ட பங்கின் மீதான வர்த்தக பரிமாற்றத்தில் மட்டும் 46 லட்சம் மோசடி செய்துள்ளார் சித்தார்த். இந்த ஊழலில் சித்தார்த்தின் சக ஊழியர்களுக்கு பங்கு இருக்குமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோசடியால் பாதிக்கப்பட்ட சார்டர்ட் அக்கவுண்டன்ட சக்ரபர்த்தி , தனது அக்கவுண்டை ஆக்சரு் செய்ய முடியாமல் போனதால் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் வங்கியை அணுகிய போது, அவரது அக்கவுண்டை பயன்படுத்தி வர்த்தகம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
Labels:
பங்கு சந்தை,
வர்த்தகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment