நன்றி : தினமலர்
Wednesday, August 12, 2009
மத்திய கிழக்கு நாடுகள் சந்தையில் பலமான எதிர்கால வியாபார திட்டம் : வோல்டாஸ் வியூகம்
மத்திய கிழக்கு நாடுகளின் சந்தையில் வர்த்தக போட்டியில் வென்று தனக்கென தனிச்சிறப்பான இடம் பிடிக்க டாடா குரூப்சின் வோல்டாஸ் நிறுவனம் அதிகம் முயன்று வருவதாக அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மும்பையில் நடந்த வோல்டாஸ் கம்பெனியின் வருடாந்திர பொது கூட்டத்தில், பங்குதாரர்கள் மத்தியில் பேசிய வோல்டாஸ் சேர்மன் இஷாத் ஹூசைன் இத் தகவலை தெரிவித்தார். இதற்காக சவுதியில் ஒரு சப்சிடிரி கம்பெனி நிறுவ திட்டமிட்டுள்ளதாகவும் ஏற்கனவே அபுதாபியில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலையில் பணிகள் துவங்கி விட்டதாகவும் தெரிவித்தார். சர்வதேச பொருளாதர நெருக்கடியில் பாதிக்கப்படாத நாடுகள் என்ற வரிசையில் கதார், அபுதாபி, சவுதிஅரேபியா ஆகிய மத்திய கிழக்கு நாடுகளில் பெரிய அளவிளான திட்டங்களை செயல்படுத்த இந்நாடுகள் ஆயத்தமாக இருக்கின்றன. இந்நிலையில் வோல்டாசின் சர்வதேச திட்டங்கள் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் சீராக இயங்கி வருகின்றன. சர்வதேச நிதி சுழலையும் மீறி , வோல்டாஸ் கடந்த நிதி ஆண்டில் ரூபாய் 1,334 கோடிக்கு வர்த்தக ஆர்டர்கள் பெற்று தனது பலத்தை நிரூபித்துள்ளது என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment