நன்றி : தினமலர்
Saturday, August 22, 2009
நீக்கப்பட்ட விமானிகளை உடனடியாக பணியில் சேர்த்துக் கொள்ள வலியுறுத்தி ஜெட் ஏர்வேஸ் பைலட்டுகள் ஸ்டிரைக்
செப்டம்பர் 7ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் இறங்குவோம் என ஜெட் ஏர்வேஸ் விமானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்த முறையான நோட்டீஸை ஜெட் நிர்வாகத்துக்கு ஏற்கெனவே நேஷனல் ஏவியேட்டர்ஸ் கில்டு அனுப்பியுள்ளது. ஜெட் நிர்வாகத்தில் நீக்கப்பட்ட ஜி பலராமன் மற்றும் சாம் தாமஸ் ஆகிய விமானிகளை உடனடியாக பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இல்லாவிட்டால் இந்த வேலை நிறுத்தத்தை தவிர்க்க முடியாது என்றும் ஏற்கெனவே ஜெட் ஏர்வேஸ் விமானிகள் தெரிவி்த்திருந்தனர். விமானிகள் கில்டில் இந்த இரு விமானிகளும் சேர்ந்ததைக் காரணம் காட்டித்தான் அவர்களை பணிநீக்கம் செய்தது ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலேயே விமானிகள் கில்டு ஸ்டிரைக் நோட்டீஸ் கொடுத்திருந்தது. 700 விமானிகள் இந்த ஸ்டிரைக்கில் பங்கேற்கப் போவதாகவும் அறிவித்திருந்தனர். ஆனால் இதற்கு ஜெட் நிர்வாகம் இதுவரை எந்த ரியாக்ஷனும் காட்டாமல் உள்ளது. இதைத் தொடர்ந்தே இன்று இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது விமானிகள் கில்டு.
Labels:
விமானம்,
வேலை இழப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment