உணவு மற்றும் உணவு பொருட்களை வாங்க ஐ.என்.ஜி., வைசியா வங்கி பிரத்யேகமாக 'மீல் கார்டு' அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்டை உபயோகித்து எந்த ஒரு உணவு மற்றும் பிவரேஜஸ் கடைகளில் உணவு, உணவு பொருட்களை ( பலசரக்கு பொருட்களை), குளிர் பானங்கள், காபி, டீ உள்ளிட்ட பல வகை பிவரேஜஸ்களை வாங்கி கொள்ளலாம். ஐ.என்.ஜி., வைசியா வங்கி சமீபத்தில் ஆஸ்பைரா என்ற பெயரில் சம்பள கணக்கு ஒன்றை துவங்கியது. இதனை சார்ந்து இப்போது மீல் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மீல் கார்டை பயன்படுத்தி கார்டில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குள் பொருட்களை வாங்கி கொள்ளலாம். இந்த கார்டுகளுக்கு ரகசிய பின் நம்பர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் பழைய மீல் வவுச்சர்களில் இருந்த நடைமுறை சிக்கல்கள் களையப்படும் என வங்கி அதிகாரி சோனாலி பாண்டா தெரிவித்துள்ளார். பின் நம்பர் அடிப்டையில் பிளாஸ்டிக் கார்டுகள் கொடுக்கப்படுவதால் இவற்றை திருட முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment