நன்றி : தினமலர்
Friday, August 21, 2009
வெளிநாட்டு மாணவர்களுக்கு ஸ்டிரிக்ட் விசா விதிமுறைகள் : ஆஸ்திரேலிய அரசு கிடுகிப்பிடி
ஆஸ்திரேலியாவில் கல்வி கற்க விருப்பப்பட்டு விசாவுக்கு மனு தாக்கல் செய்பவர்களுக்கு இனி அவ்வளவு ஈசியாக விசா கிடைத்து விடாது. ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்கள் பல, வருமானத்துக்காக மானாவரியாக வெளிநாட்டு மாணவர்களை சேர்த்து வருவது குறித்து புகார் எழுந்தது. இதன் எதிரொலியாக ஆஸ்திரேலிய குடியுரிமை ஆணையம் புது முயற்சியில் இறங்கியுள்ளது. விசாவுக்கு தாக்கல் செய்யும் மாணவர்கள் டேடா ஸ்டிரிக்டாக செக் செய்யப்படவிருப்பதாக ஆஸி., குடியுரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனால் ஸ்டூடன்ட் விசாவில் வந்து விட்டு, திறன்சாரா தொழிலாளர்களாக ஆஸியில் பணிபுரிவோரின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும் என நம்புவதாக அந்த ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த ஆஸி., குடியுரிமை அமைச்சர் கிரிஸ் இவான்ஸ் : 2008-2009 கல்வி ஆண்டில் மாணவர்கள் விசாவுக்கான விண்ணப்பங்கள் 20 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். சுமார் 3லட்சத்து 62 ஆயிரத்து 193 விண்ணப்பங்கள் வந்ததாகவும், அவற்றில் 28,000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். தற்போது விசா விண்ணப்ப செக்கிங்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் அமெரிக்க குடியுரிமை அலுவலகம் பின்பற்றும் விதிமுறைகளை பின்பற்றி கெடுபிடியாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தற்போதைய நடைமுறைப்படி விசாவுக்கு அப்ளை செய்பவர்களின் நிதி நிலை ஆராயப்பட்டு அதன் அடிப்படையில் விசா அளிக்கப்படும் என்றார். தற்போதைய நிலவரப்படி ஆஸி., யில் 97,000 இந்திய மாணவர்கள் கல்வி பயில்வதாகவும், அவர்களில் பலர் நிதிப்பற்றாக்குறை காரணமாக பார்ட் டைம் வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதாக தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment