Friday, April 17, 2009

மாதம் குறைந்தது ரூ.100 முதலீடு செய்யும் எஸ்.ஐ.பி.திட்டம் : ஸ்டேட் பேங்க் அறிமுகப்படுத்துகிறது

சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்று சொல்லப்படும் எஸ்.ஐ.பி., திட்டத்தில், மாதம் குறைந்தது ரூ.100 செலுத்தக்கூடிய புதிய எஸ்.ஐ.பி., திட்டம் ஒன்றை பாரத ஸ்டேட் வங்கி அறிமுகப்படுத்துகிறது. இப்போது ஒரு எஸ்.ஐ.பி.திட்டத்தில் சேர வேண்டும் என்றால், குறைந்தது ரூ.500 செலுத்த வேண்டும் என்று இருக்கும் விதிமுறையை தளர்த்தி, மாற்றி குறைந்தது ரூ.100 கூட கட்டினால் போதும் என்று அது, புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துகிறது. குறைந்த வருவாய் உள்ள ரூரல் மற்றும் செமி அர்பன் ஏரியா மக்களுக்காக அறிமுகப்படுத்தும் இந்த திட்டத்திற்கு ' எஸ்.பி.ஐ.சோட்டா எஸ்.ஐ.பி. ' என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஏற்கனவே இருக்கும் எஸ்.ஐ.பி.திட்டங்களில் சேருபவர்கள் பான்கார்டு வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. புதிதாக அறிமுகம் செய்யும் சோட்டா எஸ்.ஐ.பி. பிளானில் சேருபவர் களுக்கு பான் கார்டு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று அறிவிக்க கோரி, மத்திய அரசிடம் ஸ்டேட் பேங்க் அனுமதி கேட்டிருக்கிறது. அவ்வாறு பான்கார்டு தேவையில்லை என்ற அனுமதியை மத்திய அரசு அளித்து விட்டால், இந்த திட்டத்தில் ஒரு வருடத்தில் 10 லட்சம் வரை முதலீட்டாளர்கள் சேருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் தலைவர் பாத் தெரிவித்தார். இந்த திட்டத்தில் சேருபவர்கள் குறைந்தது ஐந்து வருடங்களுக்கு தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும் என்ற ' லாக் இன் பீரியட் ' இருக்கிறது.
நன்றி : தினமலர்


3 comments:

நாமக்கல் சிபி said...

சனங்க கோவனத்துல 10 பைசா தங்கப்பிடாது! அதையும் தூக்கி ஷேர் மார்க்ட்லே போட்டு வையின்னு சொல்றாங்க!

அப்புறமா அது திவால் ஆயிடுச்சு, இது திவால் ஆயிடுச்சுன்னு சொல்லி கோவணத்தையும் உருவிடணும்! அப்படித்தானே!

Tech Shankar said...

ஆவ்வ்வ்வ்.....

இங்கே அன்றாடம் காய்ச்சி பிரச்சினையே பெரிசா கீது. இதிலே கோவணத்திலே காசு இருக்காக்கும்.

நாங்கள் எல்லாம் மிலேனியம் பாய்ஸ்

//சனங்க கோவனத்துல 10 பைசா தங்கப்பிடாது! அதையும் தூக்கி ஷேர் மார்க்ட்லே போட்டு வையின்னு சொல்றாங்க!

அப்புறமா அது திவால் ஆயிடுச்சு, இது திவால் ஆயிடுச்சுன்னு சொல்லி கோவணத்தையும் உருவிடணும்! அப்படித்தானே!

Tech Shankar said...

: கோவணம் போட்டால் தானெ உருவரதுக்கு
இது millennium boys