Wednesday, March 4, 2009

ஜெனிவா மோட்டார் ஷோவில் டாடாவின் ' நானோ யூரோப்பா ' கார் அறிமுகம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், அதன் மிக மலிவு விலை காரான ' நானோ ' வை 2008ல் புதுடில்லியில் நடந்த ஆட்டோ ஷோவிலேயே அறிமுகப்படுத்தி விட்டது. வர்த்தக ரீதியாகவும் அது, வரும் 23ம் தேதி டாடா டீலர்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில், ஜெனிவாவில் நடக்கும் மோட்டார் ஷோவில், ஐரோப்பிய கார் பிரியர்களுக்காக சில கூடுதல் வசதிகளுடன் கூடிய அதன் ' நானோ யூரோப்பா 'காரை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் சர்வதேச அளவிலான கார் பிரியர்களின் கவனத்தை கவர்ந்திருக்கும் டாடா மோட்டார்ஸ், குறிப்பிட்ட சில சர்வதேச சந்தைகளில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் ' நானோ யூரோப்பா ' வை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறது. இது குறித்து டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா பேசியபோது, நாங்கள், வளர்ந்த நாடுகளிலும் டாடா நானோ காரை அறிமுகப்படுத்துவதில் ஆர்வமாக இருக்கிறோம். இந்தியாவில் ' டாடா நானோ 'என்ற பெயரில் இருக்கும் அந்த கார் அங்கு ' டாடா நானோ யூரோப்பா ' என்ற பெயரில் இருக்கும். இன்னும் இரண்டு வருடங்களில் இது அவர்கள் சந்தைகளில் இருக்கும் என்றார். நானோ வை விட நானோ யூரோப்பா சில மாறுதல்களை கொண்டிருக்கும். நானோ யூரோப்பா 2.25 மீட்டர் வீல்பேஸ் கொண்டதாகவும் 3 சிலிண்டர் ஸ்போர்ட்டி அலுமினியம் எம்பிஎஃப்ஐ இஞ்சினையும் கொண்டதாக இருக்கும்.5 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனும் பவர் ஸ்டியரிங்கையும் கொண்டதாக இருக்கும். பெட்ரோல் இஞ்சின் காரான நானோ யூரோப்பா, அதிக மைலேஜ் கொடுக்க கூடியதாகவும், குறைவான கார்பன் - டையாக்ஸைடை வெளியிடக்கூடியதாகவும் இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: