Wednesday, March 4, 2009

கச்சா எண்ணெய்யின் விலை குறைவால் இறக்குமதி பில்தொகை 67 சதவீதம் குறைந்தது

இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை கொண்டிருக்கும் இந்தியன் ஆயில் கார்பரேஷன், மாதா மாதம் இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் பில்தொகை இப்போது 67 சதவீதம் குறைந்து 1.5 பில்லியன் டாலருக்கு வந்திருக்கிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்து போனதையடுத்து இறக்குமதி பில் தொகையும் குறைந்திருக்கிறது. கடந்த வருடம் ஜூலையில் பேரல் ஒன்றுக்கு 140 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை, இப்போது 40 டாலரை ஒட்டித்தான் இருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி பில் தொகையும் வெகுவாக குறைந்து விட்டது. புதுடில்லியில் நடந்த ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய இந்தியன் ஆயில் கார்பரேஷனின் இயக்குநர் ( நிதி ) நரசிம்மன் இதனை தெரிவித்தார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பேரலுக்கு 140 டாலராக இருந்தபோது 4.5 பில்லியன் டாலராக இருந்த இந்தியாவின் இறக்குமதி பில் தொகை, இப்போது 1.5 பில்லியன் டாலராக குறைந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: