நன்றி : தினமலர்
Wednesday, March 4, 2009
இன்னும் சில விமானங்களை ஒத்திக்கு கொடுக்க ஜெட் ஏர்வேஸ் திட்டம்
இன்னும் கொஞ்சம் விமானங்களை வெளிநாட்டு விமான கம்பெனிகளிடம் ஒத்திக்கு கொடுக்கலாமா என்பது பற்றி ஜெட் ஏர்வேஸ் யோசித்தி வருகிறது. ஏற்கனவே துர்கிஷ் ஏர்லைன்ஸ் மற்றும் கல்ஃப் ஏர் ஆகிய நிறுவனங்களுக்கு கொடுத்திருந்த விமானங்களின் ஒத்தி காலம் முடிந்தும் கூட, அதனை இன்னும் இரண்டு வருடங்களுக்கு ஜெட் ஏர்வேஸ் நீட்டிப்பு செய்திருக்கிறது. இது குறித்து ஜெட் ஏர்வேஸின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவிக்கையில், துர்க்கிஷ் ஏர்லைன்ஸ்ஸூக்கு நாங்கள் கொடுத்திருந்த மூன்று ' பி777-300 இஆர் ' ரக விமானங்களின் வெட் லீஸ் காலத்தில் ஆறு மாதங்கள் முடிந்ததும், அதனை இன்னும் 25 மாதங்களுக்கு டிரை லீசுக்கு கொடுத்திருக்கிறோம் என்றார். அதேபோல கல்ஃப் ஏர் நிறுவனத்திற்கு 36 மாத டிரை லீசுக்கு கொடுத்திருந்த நான்கு ' பி777 - 400 இஆர் ' விமானங்களின் குத்தகை காலம் முடிந்து விட்டதால், அது இன்னும் ஆறு மாத கால வெட் லீசுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்றார். தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மூன்று வெளிநாட்டு விமான சேவையை நடத்தி வருகிறது. இரண்டு சேவைகள் மும்பை - லண்டனுக்கும், ஒரு சேவை டில்லி - லண்டனுக்கும் நடத்தப்படுகிறது. வரும் ஜூலையில் இருந்து இன்னும் ஒரு வெளிநாட்டு விமான சேவையை அது துவங்க இருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment