Tuesday, March 10, 2009

ராமலிங்க ராஜூவை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்தது சி.பி.ஐ

சுமார் ரூ.7,800 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு சஞ்சலகுடா சிறையில் இருக்கும் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜூவையும் மற்ற நான்கு பேரையும் இன்று விசாரணைக்காக சி.பி.ஐ. தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்தது. ராமலிங்க ராஜூவை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க கோர்ட்டில் பெறப்பட்ட கடிதத்துடன் இன்று காலை 9.30 மணிக்கு சஞ்சலகுடா சிறைக்கு சென்ற சி.பி.ஐ., குழுவினர், அவர்கள் ஐந்து பேரையும் விசாரணைக்காக அங்கிருந்து அழைத்து சென்றனர். சத்யம் கம்ப்யூட்டர்ஸில் நடந்த நிதி மோசடி குறித்து விசாரித்து வரும் ஐதராபாத் 14 வது கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்டிரேட், இவர்கள் ஐந்து பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.,க்கு அனுமதி அளித்திருந்தார். இதுவரை ஆந்திர பிரதேச சி.ஐ.டி., போலீசாரின் விசாரணையில் இருந்த இவர்கள் ஐந்து பேரும் இனிமேல் சி.பி.ஐ.,யின் விசாரணைக்கு சென்றுள்ளனர். சத்யம் கம்ப்யூட்டர்ஸின் நிறுவன தலைவர் ராமலிங்க ராஜூ, அவரது சகோதரர் ராம ராஜூ, முன்னாள் நிதி அதிகாரி வட்லமணி ஸ்ரீநிவாஸ்,மற்றும் சத்யத்தின் ஆடிட் நிறுவனமான பிரைஸ்வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்ட பங்குதாரர்கள் கோபாலகிருஷ்ணன் மற்றும் தல்லுரி ஸ்ரீநிவாஸ் ஆகிய 5 பேரும் வரும் 17ம் தேதி வரை சி.பி.ஐ., காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவார்கள்.
நன்றி தினமலர்


No comments: