Tuesday, March 10, 2009

அடுத்த வருடம் வரை இந்திய சந்தையில் இருந்து விலகி இருக்கப்போகும் அந்நிய முதலீட்டாளர்கள்

இந்திய பங்கு சந்தையில் பெருமளவு பணத்தை முதலீடு செய்யும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ( எஃப் ஐ ஐ ) அடுத்த வருடம் வரை அதிலிருந்து விலகியேதான் இருப்பார்கள் என்கின்றனர் சர்வதேச நிபுணர்கள். கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் லேமன் பிரதர்ஸ் நிறுவனம் வீழ்ச்சி அடைந்ததில் இருந்து, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள், இந்திய சந்தையில் அவர்கள் வைத்திருந்த பங்குகளை விற்க ஆரம்பித்தனர். அந்த நிலை இன்றும் தொடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த வருடம் முழுவதும் அதே போன் முதலீட்டை திரும்ப பெற்றுக்கொண்டுதான் இருப்பார்கள் என்கிறார்கள். சர்வதேச அளவில் பொருளாதார நிலை அடுத்த வருடத்தில் மாறிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போதுதான் இந்தியாவிலும் எஃப்.ஐ.ஐ.,களின் முதலீடு மீண்டும் குவிய ஆரம்பிக்கும் என்கிறார் மூடி'ஸ் எக்கனாமி டாட் காமின் பொருளாதார நிபுணர் ஷெர்மான் ஷான். அடுத்த நிதி ஆண்டின் கடைசி காலாண்டில்தான் இந்தியாவின் நிலையிலும் மாற்றம் இருக்கும் என்கிறார் அவர். இதே கருத்தைத்தான் இன்னொரு பொருளாதார நிபுணரான ஜேம்ஸ் மிக் கார்மக்கும் தெரிவிக்கிறார். இந்திய பங்கு சந்தையில் இருந்து, கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து இதுவரை அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் எடுத்து சென்ற தொகை 8,333 மில்லியன் டாலர்கள். அதாவது சுமார் 42,500 கோடி ரூபாய்.
நன்றி :தினமலர்


No comments: