Tuesday, March 10, 2009

மும்பை தீவிரவாத தாக்குதலால் இந்தோ - பாகிஸ்தான் வர்த்தகம் 60 சதவீதம் வரை பாதிக்கும்

மும்பையில் கடந்த நவம்பர் மாதம் 26 ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலை அடுத்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே நடந்து வரும் பனிப்போரை அடுத்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே நடந்து வந்த வர்த்தகம் பெரிதாக பாதிக்கப்பட்டிருக்கிறது. வரும் 2009 - 10 நிதி ஆண்டில் இரு நாட்டு வர்த்தகம் 60 சதவீதம் வரை பாதிக்க கூடும் என்று இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு ( எஃப் ஐ சி சி ஐ ) தெரிவிக்கிறது. பாகிஸ்தானுடன் வர்த்தகம் செய்ய இந்திய தொழில் அதிபர்கள் அச்சப்படுகிறார்கள் என அது தெரிவித்திருக்கிறது. பாகிஸ்தானுடன் தற்போது 2 பில்லியன் டாலருக்கும் ( ரூ.10,200 கோடி ) அதிகமான தொகைக்கு வர்த்தகம் செய்து கொண்டிருக்கும் இந்திய தொழில் அதிபர்கள், இந்த நிதி ஆண்டின் இறுதியில் 900 மில்லியன் டாலருக்கும் ( ரூ.4,590 கோடி ) குறைவான தொகைக்கே வர்த்தகம் செய்திருப்பார்கள் என்கிறது எஃப்.ஐ.சி.சி.ஐ. வர்த்தகம் தொடர்பாக பாகிஸ்தானில் உள்ள இறக்குமதியாளர்களுடன் ஒப்பந்தம் செய்ய இந்திய ஏற்றுமதியாளர்கள் பாகிஸ்தான் செல்லவே பயப்படுகிறார்கள் என்கிறது அது. பாகிஸ்தானுக்கு நேரடியாக செல்லாமல் துபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகள் வழியாக அங்குள்ள இறக்குமதியாளர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளவும் சில ஏற்றுமதியாளர்கள் முயற்சி செய்கின்றனர். இந்தியாவில் இருந்து டெக்ஸ்டைல், ரெடிமேட் ஆடைகள்,டெக்ஸ்டைல் மெஷின்கள், காட்டன், விவசாய பொருட்கள், ஸ்டீல், கெமிக்கல் போன்ற பொருட்கள் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி ஆகின்றன.

நன்றி : தினமலர்


No comments: