
நவம்பர் 8ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 8.90 சதவீதமாக குறைந்திருக்கிறது. இது, இதற்கு முந்தைய வாரத்தில் 8.98 சதவீதமாக இருந்தது. மொத்த விற்பனை விலை அட்டவணை அடிப்படையில் கணக்கிடப்படும் இந்தியாவின் பணவீக்க விகிதம், ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் கணிப்பான 8.99 சதவீதத்தை விட குறைந்திருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு இதே காலத்தில் பணவீக்கம் 3.20 சதவீதமாகத்தான் இருந்தது. கடந்த வாரத்தை விட 0.08 சதவீதம் குறைந்ததற்கு காரணம் எரிபொருள் விலை குறைந்திருப்பதுதான் என்கிறார்கள். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இப்போது பேரலுக்கு 54 டாலருக்கும் குறைவாகத்தான்
இருக்கிறது.நன்றி : தினமலர்
No comments:
Post a Comment