Wednesday, August 20, 2008

கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது : பேரலுக்கு 114 டாலர்

சர்வதேச சந்தையில் சில தினங்களாக இறங்கி வந்த கச்சா எண்ணெய் விலை இன்று சிறிது உயர்ந்து பேரலுக்கு 114 டாலராக இருக்கிறது. அமெரிக்காவின் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை இன்று பேரலுக்கு 114.03 டாலராக இருக்கிறது. லண்டனின் பிரன்ட் நார்த்ஸீ குரூட் ஆயில் விலை பேரலுக்கு 112.93 டாலராக இருக்கிறது. அமெரிக்காவின் டாலர் மதிப்பு குறைந்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாக சொல்கிறார்கள். டாலரில் முதலீடு செய்தவர்கள் இப்போது எண்ணெய்யில் முதலீடு செய்ய வந்ததால் எண்ணெய் விலை உயர்ந்து விட்டது என்கிறார்கள். ஜூலை 11ம் தேதி பேரலுக்கு 147 டாலர் வரை உயர்ந்திருந்த கச்சா எண்ணெய் விலை 111 டாலர் வரை குறைந்திருந்தது. இப்போது 114 டாலருக்கு உயர்ந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: