Wednesday, August 20, 2008

பங்கு சந்தையில் முன்னேற்றம்

கடந்த ஐந்து நாட்களாக சரிவில் இருந்த பங்கு சந்தையில் இன்று முன்னேற்றம் ஏற்பட்டது. சென்செக்ஸ் 134 புள்ளிகளும் நிப்டி 47 புள்ளிகளும் உயர்ந்திருந்தன. மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே உயர்ந்து கொண்டிருந்த சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 134.50 புள்ளிகள் ( 0.92 சதவீதம் ) உயர்ந்து 14,678.23 புள்ளிகளில் முடிந்தது. அதே போல் தேசிய பங்கு சந்தையிலும் நிப்டி 47.50 புள்ளிகள் ( 1.09 சதவீதம் ) உயர்ந்து 4,415.75 புள்ளிகளில் முடிந்தது. கேப்பிட்டல் குட்ஸ், பார்மா, ரியல் எஸ்டேட், பவர் மற்றும் மெட்டல் பங்குகள் முன்னேற்றம் கண்டன. ஐரோப்பிய மற்றும் ஆசிய பங்கு சந்தையில் நிலவிய ஏற்ற நிலையும் இந்திய பங்கு சந்தையில் முன்னேற்றத்தை கொண்டு வந்தது. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் பெருமளவில் வாங்கப்பட்டன. மும்பை பங்கு சந்தையில் மிட்கேப் 1.04 சதவீதமும் ஸ்மால்கேப் 0.76 சதவீதமும் உயர்ந்திருந்தது. நன்றி : தினமலர்


No comments: