Wednesday, March 11, 2009

மற்ற கம்பெனிகளை வாங்குவதற்காக முதலீடு செய்வதை ஐ.பி.எம்.நிறுத்தவில்லை

சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டிருந்தாலும், பிரபல ஐ.டி.நிறுவனமான ஐ.பி.எம்., மற்ற கம்பெனிகளை வாங்குவதற்காக செய்யும் முதலீட்டை குறைக்கவில்லை. ஐ.பி.எம்.மின் தலைமை அதிகாரி சாமுவேல் பால்மிசனோ, அதன் பங்குதாரர்களுக்கு எழுதிய கடிதத்தில், சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலையிலும் நாங்கள் வித்தியாசமான அணுகுமுறையை கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறார். நாங்கள் பின்நோக்கி பார்ப்பது இல்லை. எப்போதுமே முன்நோக்கி தான் பார்க்கிறோம். தொடர்ந்து ஆர் அண்ட் டி சென்டர்களை நிறுவுவதிலும், மற்ற கம்பெனிகளை வாங்குவதிலும், வளர்ச்சி திட்டங்களில் ஈடுபடுவதிலும் முதலீடு செய்து கொண்டுதான் இருக்கிறோம். இந்த இக்கட்டான வேளையிலும் நாங்கள் ஊழியர்களை குறைக்கவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். சமீபத்தில்தான் ஐ.பி.எம். நிறுவனம், நிதி மோசடியில் சிக்கியிருக்கும் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்திருந்தது. சத்யம் கம்ப்யூட்டர்ஸூம் அதன் 51 சதவீத பங்குகளை விற்கும் ஏற்பாட்டில் தீவிரமாக இறங்கியிருக்கிறது.
நன்றி : தினமலர்


நிதி விவகாரங்களில் இந்தியாவின் நம்பர் ஒன் நம்பகமான நிறுவனம் டாடா குரூப் தான்

நிதி விவகாரங்களை பொறுத்தவரை இந்தியாவின் நம்பகமான கம்பெனி என்ற வரிசையயில் டாடா குரூப் தான் முதல் இடத்தில் வருகிறது. இந்திய முதலீட்டாளர்களிடையே இந்தியாவின் முதல் 10 நம்பகமான கார்பரேட் நிறுவனம் எவைகள் என்று எடுத்த கருத்து கணிப்பில் இது தெரிய வந்திருக்கிறது.ரத்தன் டாடாவுக்கு சொந்தமான டாடா குரூப்பிற்கு அடுத்தபடியாக இன்போசிஸ், ஹெச்.டி.எப்.சி.குரூப், எல் அண்ட் டி, ஆதித்த பிர்லா ஆகியவை வருகின்றன. சத்யம் கம்ப்யூட்டரில் நடந்ததாக நம்பப்படும் ரூ.7,800 கோடி அளவிலான நிதி மோசடியை அடுத்து, ஈக்குவட்டி மாஸ்டர் என்ற ஈக்குவட்டி ரிசர்ச் நிறுவனம், நிதி விவகாரத்தில் இந்தியாவின் நம்பகமான கம்பெனி எது என்று கருத்து கணிப்பு நடத்தியது. சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் நடந்த நிதி மோசடி ஜனவரி மாதத்தில் வெளியே தெரிய வந்ததில் இருந்து மற்ற நிறுவனங்களின் நிதி அறிக்கை மீது முதலீட்டாளர்கள் எந்த அளவுக்கு நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்று அந்த நிறுவனம் கருத்து கணிப்பு எடுத்தது. அதில் முதல் இடத்தில் டாடா குரூப்தான் வருகிறது. முகேஷ் அம்பானியின் நிறுவனம் ஒன்பதாகவும் அணில் அம்பானியின் நிறுவனம் பத்தாகவும் வந்திருக்கிறது. பார்தி ஏர்டெல், சுந்தரம்/டி.வி.எஸ் குரூப், மற்றும் ஐசிஐசிஐ பேங்க் ஆகியளை முறையே ஆறு, ஏழு மற்றும் எட்டாவது இடத்தில் இருக்கிறது.
நன்றி : தினமலர்


மரணத்தை நெருங்கினார் ஜேடி கூடி : நண்பர்கள், குடும்பத்தினர் மத்தியில் சாக விருப்பம்

பிரிட்டனில் நடந்த டெலிவிஷன் ஷோ ஒன்றில், இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியை இனவெறியுடன் திட்டியதாக குற்றம் சாட்டப்பட்டவர் பிரிட்டிஷ் நடிகை ஜேடி கூடி. கருப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர் லண்டனில் உள்ள ராயல் மார்ஸ்டன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நோய் முற்றி உடல் முழுவதும் பரவி விட்டதால் அவருக்கு அளிக்கப்பட்ட சீமோதெரபியால் பயனில்லாமல் போய்விட்டது. எனவே இனிமேல் அவர் பிழைக்க மாட்டார் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர். இப்போது மரணத்தை நெருங்கி விட்ட ஜேடி கூடி, நான் ஆஸ்பத்திரி படுக்கையில் சாக விரும்பவில்லை; எனது வீட்டில் அதுவும் எங்கள் வீட்டுக்கு பின்பக்கம் இருக்கும் புல்வெளியை பார்த்தபடி, குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் சாகவே விரும்புகிறேன் என்று சொன்னதால், ஆஸ்பத்திரியில் இருந்து அப்ஷயர் என்ற இடத்தில் இருக்கும் அவரது வீட்டுக்கு கூட்டி செல்லப்பட்டார். அவரது கண்பார்வை முற்றிலும் பாதிக்கப்பட்டிருப்பதால், இனிமேல் பார்வை தெரிய வாய்ப்பில்லை என்று டாக்டர்கள் சொல்லி விட்டதால், அவரது இரண்டு குழந்தைகளை அவரால் கண்டுகொள்ள முடியவில்லை. வரும் ஞாயிறு அன்று தான் இவருக்கும் ஜேக் என்பவருக்கும் ஆஸ்பத்திரி வளாகத்தில் இருக்கும் சர்ச்சில் திருமணம் நடப்பதாக இருந்தது. ஜேடி கூடியின் கடைசி ஆசையாகவும் அது இருந்தது. ஆனால் அதற்குள் இவர் வீட்டுக்கு எடுத்து வரப்பட்டு விட்டார். ஞாயிறு வரை இவர் உயிருடன் இருப்பாரா, இவருக்கும் ஜேக் க்கும் திருமணம் நடக்குமா என்று தெரியவில்லை. இவரது திருமணத்திற்கு ஷில்பா ஷெட்டியை ஜேடி கூடி அழைத்திருந்தார். ஆனால் திருமணத்திற்கு வரமுடியாது என்று ஷில்பா சொல்லி விட்டார். இப்போது எனது சவ அடக்கத்திற்காகவாவது வாருங்கள் என்று ஷில்பா ஷெட்டி யை ஜேடி கூடி அழைத்திருக்கிறார்.
நன்றி : தினமலர்


நார்வேயின் பிரபல வங்கி மும்பையில் பிரதிநிதி அலுவலகம் திறந்தது

நார்வேயை சேர்ந்த பிரபல வங்கி ' டெப் நார் ' மும்பையில் பிரதிநிதி அலுவலகம் ஒன்றை திறந்திருக்கிறது. இது தான் அந்த வங்கிக்கு இந்தியாவில் இருக்கும் ஒரே பிரதிநிதி அலுவலகம். ஆசியாவிலேயே கூட அதற்கு இருக்கும் இரண்டாவது அலுவலகம் இதுதான். ஆசியாவில் இன்னொரு அலுவலகம் சிங்கப்பூரில் இருக்கிறது.தற்சமயம் அதற்கு 18 நாடுகளில் அலுவலகங்கள் இருக்கின்றன. சர்வதேச அளவிலான அதன் வளர்ச்சி திட்டங்களில் ஒன்றாக மும்பையில் அலுவலகம் திறக்கப்பட்டிருப்பதாக ' டெப் நோர் ' குரூப்பின் தலைமை அதிகாரி ரூனே பெர்கே தெரிவித்தார். இந்திய ஷிப்பிங், எனர்ஜி துறையில் இருக்கும் நிறுவனங்களுக்கும், இந்தியாவில் இருக்கும் நார்வேயை சேர்ந்த கம்பெனிகளுக்கும் மும்பை அலுவலகம் சேவை செய்யும் என்று அவர் தெரிவித்தார். ஏற்கனவே நாங்கள் இந்தியாவை சேர்ந்த ஷிப்பிங், ஆஃப்ஷோர், லாஜிஸ்டிக், மற்றும் எனர்ஜி துறை சம்பந்தமான நிறுவனங்களுக்கு சேவை செய்து கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் இங்கு எங்களுக்கு அலுவலகம் இல்லாமல் இருந்ததால் அவர்களுக்கு சேவை செய்வதில் நிறைய சிரமங்கள் இருந்தன. அதுனால்தான் இங்கு அலுவலகம் திறந்தோம். மற்ற வெளிநாட்டு வங்கிகளை விட, அதிகமான இந்திய ஷிப்பிங் கம்பெனிகளுக்கு நாங்கள்தான் சேவை அளித்து வருகிறோம். இந்தியாவில் இருக்கும் பெரிய ஷிப்பிங் கம்பெனிகளில் 5 முதல் 8 கம்பெனிகள் வரை எங்களது வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள் என்றார் ரூனே.
நன்றி : தினமலர்


Tuesday, March 10, 2009

மும்பை தீவிரவாத தாக்குதலால் இந்தோ - பாகிஸ்தான் வர்த்தகம் 60 சதவீதம் வரை பாதிக்கும்

மும்பையில் கடந்த நவம்பர் மாதம் 26 ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலை அடுத்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே நடந்து வரும் பனிப்போரை அடுத்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே நடந்து வந்த வர்த்தகம் பெரிதாக பாதிக்கப்பட்டிருக்கிறது. வரும் 2009 - 10 நிதி ஆண்டில் இரு நாட்டு வர்த்தகம் 60 சதவீதம் வரை பாதிக்க கூடும் என்று இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு ( எஃப் ஐ சி சி ஐ ) தெரிவிக்கிறது. பாகிஸ்தானுடன் வர்த்தகம் செய்ய இந்திய தொழில் அதிபர்கள் அச்சப்படுகிறார்கள் என அது தெரிவித்திருக்கிறது. பாகிஸ்தானுடன் தற்போது 2 பில்லியன் டாலருக்கும் ( ரூ.10,200 கோடி ) அதிகமான தொகைக்கு வர்த்தகம் செய்து கொண்டிருக்கும் இந்திய தொழில் அதிபர்கள், இந்த நிதி ஆண்டின் இறுதியில் 900 மில்லியன் டாலருக்கும் ( ரூ.4,590 கோடி ) குறைவான தொகைக்கே வர்த்தகம் செய்திருப்பார்கள் என்கிறது எஃப்.ஐ.சி.சி.ஐ. வர்த்தகம் தொடர்பாக பாகிஸ்தானில் உள்ள இறக்குமதியாளர்களுடன் ஒப்பந்தம் செய்ய இந்திய ஏற்றுமதியாளர்கள் பாகிஸ்தான் செல்லவே பயப்படுகிறார்கள் என்கிறது அது. பாகிஸ்தானுக்கு நேரடியாக செல்லாமல் துபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகள் வழியாக அங்குள்ள இறக்குமதியாளர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளவும் சில ஏற்றுமதியாளர்கள் முயற்சி செய்கின்றனர். இந்தியாவில் இருந்து டெக்ஸ்டைல், ரெடிமேட் ஆடைகள்,டெக்ஸ்டைல் மெஷின்கள், காட்டன், விவசாய பொருட்கள், ஸ்டீல், கெமிக்கல் போன்ற பொருட்கள் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி ஆகின்றன.

நன்றி : தினமலர்


ராமலிங்க ராஜூவை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்தது சி.பி.ஐ

சுமார் ரூ.7,800 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு சஞ்சலகுடா சிறையில் இருக்கும் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜூவையும் மற்ற நான்கு பேரையும் இன்று விசாரணைக்காக சி.பி.ஐ. தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்தது. ராமலிங்க ராஜூவை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க கோர்ட்டில் பெறப்பட்ட கடிதத்துடன் இன்று காலை 9.30 மணிக்கு சஞ்சலகுடா சிறைக்கு சென்ற சி.பி.ஐ., குழுவினர், அவர்கள் ஐந்து பேரையும் விசாரணைக்காக அங்கிருந்து அழைத்து சென்றனர். சத்யம் கம்ப்யூட்டர்ஸில் நடந்த நிதி மோசடி குறித்து விசாரித்து வரும் ஐதராபாத் 14 வது கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்டிரேட், இவர்கள் ஐந்து பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.,க்கு அனுமதி அளித்திருந்தார். இதுவரை ஆந்திர பிரதேச சி.ஐ.டி., போலீசாரின் விசாரணையில் இருந்த இவர்கள் ஐந்து பேரும் இனிமேல் சி.பி.ஐ.,யின் விசாரணைக்கு சென்றுள்ளனர். சத்யம் கம்ப்யூட்டர்ஸின் நிறுவன தலைவர் ராமலிங்க ராஜூ, அவரது சகோதரர் ராம ராஜூ, முன்னாள் நிதி அதிகாரி வட்லமணி ஸ்ரீநிவாஸ்,மற்றும் சத்யத்தின் ஆடிட் நிறுவனமான பிரைஸ்வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்ட பங்குதாரர்கள் கோபாலகிருஷ்ணன் மற்றும் தல்லுரி ஸ்ரீநிவாஸ் ஆகிய 5 பேரும் வரும் 17ம் தேதி வரை சி.பி.ஐ., காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவார்கள்.
நன்றி தினமலர்


டெர்மினேஷன் சார்ஜஸ் 33 சதவீதம் குறைக்கப்பட்டதால் மொபைல் பில் குறையும்

ஒரு நெட்வொர்க் ஆப்பரேட்டர், இன்னொறு நெட்வொர்க் ஆப்பரேட்டருக்கு விதிக்கும் டெர்மினேஷன் சார்ஜஸை, தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டராய், 33 சதவீதம் குறைத்திருக்கிறது. ஒவ்வொரு லோக்கல் காலுக்கும் விதிக்கப்பட்டு வந்த டெர்மினேஷன் சார்ஜஸ் 30 பைசாவில் இருந்து 20 பைசாவாக குறைக்கப்பட்டிருக்கிறது. புதிய ஆப்பரேட்டர்களான டேட்டாகாம், யூனிடெக், சியாம் - சிஸ்டமா, மற்றும் லூப் டெலிகாம் ஆகியவை நிமிடத்திற்கு டெர்மினேஷன் சார்ஜஸாக 10 பைசா தான் வசூலிக்கின்றன. ஆனால் ஏற்கனவே இருக்கும் ஜி.எஸ்.எம்.ஆப்பரேட்டர்கள், டிராயின் இந்த கட்டண குறைப்பை எதிர்க்கின்றன. காரணம் என்னவென்றால் அவர்களுக்கு வருமானம் குறைந்து விடும் என்று நினைப்பதால்தான்.இந்தியாவுக்குள் செய்யும் கால் களுக்கு டெர்மினேஷன் சார்ஜஸை குறைத்த டிராய், வெளிநாட்டு கால் களுக்கான டெர்மினேஷன் சார்ஜஸை நிமிடத்திற்கு 30 பைசாவில் இருந்து 40 பைசாவாக உயர்த்தியிருக்கிறது. எனவே வெளிநாட்டு கால்களுக்கான கட்டணம் உயரும்.
நன்றி : தினமலர்