தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையை மத்திய அரசு கொள்கையளவில் ஏற்றுக் கொண்டதையடுத்து நாட்டின் பிற பகுதிகளிலும் தனிமாநிலக் கோரிக்கைகள் எழுந்துள்ளன. வன்முறை மூலம் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இந்திய அரசுக்கு இந்த மொழிதான் புரிகிறது.
இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தைப் பிரித்து புந்தேல்கண்ட், பஸ்சிமாஞ்சல் (மேற்கு உத்தரப் பிரதேசம்) மாநிலங்களை உருவாக்க வேண்டும் என்று அம் மாநில முதல்வர் மாயாவதி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தார். இப்போது உ.பி.யின் கிழக்குப் பகுதிகளைப் பிரித்து பூர்வாஞ்சல் மாநிலத்தை அமைப்பதற்கான அரசியல் சட்ட நடைமுறைகளை விரைவுபடுத்துமாறு பிரதமருக்கு அவர் எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
மேற்கு வங்கத்தைப் பிரித்து கூர்க்கா தனிமாநிலம் அமைக்க வேண்டுமென்று பாஜகவும், கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சாவும் கோரிக்கை எழுப்பியுள்ளன. இது 102 ஆண்டுகாலக் கோரிக்கையாம். எல்லைப் பகுதியின் காவலர்களாக இருக்கும் அவர்கள் உணர்வுரீதியாகவும், புவியியல் ரீதியாகவும் மேற்குவங்க மாநிலத்தின் மற்ற பகுதியிலிருந்து தனிமைப்பட்டுக் கிடக்கின்றனராம்.
மகாராஷ்டிர மாநிலத்தில் விதர்ப்பா தனிமாநிலக் கோரிக்கையும் எழுந்துள்ளது. மகாராஷ்டிர பாஜகவின் இந்தக் கோரிக்கையை அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா எதிர்க்கிறது. விதர்ப்பா தனி மாநிலக் கோரிக்கையை எழுப்புபவர்கள் ஒருங்கிணைந்த மகாராஷ்டிரத்துக்காக உயிர் நீத்த 105 தியாகிகளின் கனவுகளைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று அது கூறுகிறது.
இதேபோல போடோ மக்கள் முன்னணி உறுப்பினர் பிஸ்வமூர்த்தி, "போடோலேண்ட்' அமைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்திலேயே கோரியுள்ளார். அசாம் மாநிலத்தைப் பிரிக்க வேண்டும் என்பது அவரது கோரிக்கை.
பிகார் மாநிலத்தைப் பிரித்து, "மிதிலாஞ்சல்' மாநிலமும், குஜராத் மாநிலத்தைப் பிரித்து, "சௌராஷ்டிரா' மாநிலமும் அமைக்க வேண்டும்; உ.பி.யின் கிழக்குப் பகுதியையும் பிகாரின் சில பகுதிகளையும் பிரித்து "போஜ்புர்' மாநிலமும் அமைக்க வேண்டும் என இது தொடர்கிறது.
2000-ல் பிகாரிலிருந்து "ஜார்க்கண்ட்' மாநிலமும், உ.பி.யிலிருந்து "உத்தரகண்ட்' மாநிலமும், மத்தியப் பிரதேசத்திலிருந்து "சத்தீஸ்கர்' மாநிலமும் பிரிக்கப்பட்டன. இப்போது தெலங்கானா அமையுமானால் இது இந்தியாவின் 29-வது மாநிலமாகும்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் ஒரு புதிய குரல் கேட்கிறது. தமிழகத்தை இரண்டாகப் பிரித்தால் நல்லது. சிறிய மாநிலமாக இருந்தால் வளர்ச்சியிருக்கும்; நிர்வாகமும் எளிதாக இருக்கும். ஆனால் தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்பது பாமகவின் முன்னுரிமைக் கோரிக்கை அல்ல என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதனை வேறு சிலரும் வரவேற்றுள்ளனர்.
ஆனால் தமிழக முதல்வர் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. ""அப்படிப்பட்ட கருத்து திமுகவிலும் இல்லை; தமிழ்நாட்டு மக்களுக்கும் இல்லை'' என்று கூறியுள்ளார்.
தமிழகத்தை இரண்டாகப் பிரிப்பது போன்ற யோசனைகள் மிகவும் ஆபத்தானவை மட்டுமல்ல, அபத்தமானவை. இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று தொடங்கும்போதே, "ஏன் இதனை சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என மூன்றாகப் பிரிக்கக் கூடாதா?' என்ற அடுத்த கேள்வியும் எழும். அத்துடன் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டதன் நோக்கமும் நீர்த்துப் போகும்.
அந்தக் காலத்தில் தமிழகம் பல நாடுகளாக இருந்தது என்பது உண்மைதான். சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்பவை முடியுடை மூவேந்தர்களால் ஆளப்பட்டன. அத்துடன் பல்லவர்கள் காஞ்சிபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு கி.மு. 300 முதல் 600-ம் ஆண்டு வரை அரசாட்சி செய்திருக்கின்றனர். பல்லவர்களை வென்று காஞ்சியைக் கைப்பற்றி சாளுக்கியர்களும் சிலகாலம் ஆட்சி செய்துள்ளனர்.
இதுதவிர, தொண்டை நாடு, கொங்கு நாடுகளும் இருந்தன. மூவேந்தருக்குக் கட்டுப்பட்டும், கட்டுப்படாமலும் குன்றுதோறும் கோட்டைகளைக் கட்டிக்கொண்டு பல சிற்றரசர்கள் தனியாகவே ஆண்டுவந்தனர். மேலும் தமிழ்நாட்டில் பல ஊர்களே நாடு என்ற பெயரில் வழங்கின. ஒரத்த நாடு, பாப்பா நாடு, பைங்கா நாடு, வள நாடு எனக் கூறலாம். இந்த ஊர்களே ஒரு நாடாக பல பண்ணையார்களால் ஆளப்பட்டுள்ளன. இன்றும் அவ்வூர்களில் அவர்களின் வம்சாவளியினர் இருக்கின்றனர். இவையெல்லாம் கடந்த கால வரலாறு.
நாடு விடுதலை பெற்றதும், மாநில வரையறை பற்றிய கேள்வி எழுந்தது. பிரதமர் நேருவின் தட்சிணப் பிரதேசத் திட்டம் ஏற்கப்படாததால் மொழிவழியாக மாநிலங்களைப் பிரித்து அமைப்பதற்காக "மாநிலப் புனரமைப்புக் குழு' நியமிக்கப்பட்டது. அதன் பரிந்துரை செயல்படுத்தப்பட்டது.
அப்போது சென்னை மாகாணம் என்பது திராவிட நாடாக-பல மொழிகள் பேசும் மாநிலமாக இருந்தது. 1953-ல் சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரம் முதலில் பிரிந்தது. 1956-ல் மலபார் மாவட்டம் பிரிந்து கேரளத்தில் இணைந்தது. தென் கன்னட மாவட்டம் பிரிக்கப்பட்டு கர்நாடகத்துடன் சேர்ந்தது. மீதம் இருந்ததே தமிழ்நாடானது.
கடந்த காலங்களில் தமிழ்நாட்டின் வடக்கு எல்லையாக வேங்கட மலையும், தெற்கு எல்லையாக குமரியாறும், கிழக்கும், மேற்கும் கடலாகவும் இருந்தன என்று தமிழக வரலாறு கூறுகிறது. இதனையே, "வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து' என பண்டைய புலவர்களும் பாடியுள்ளனர்.
ஆனால் மொழிவழி மாநிலப் பிரிவினையின்போது தமிழகத்தின் பல பகுதிகள் பறிபோய்விட்டன. தமிழகத்தின் வட எல்லையான வேங்கடம், சித்தூர் முதலிய பகுதிகள் ஆந்திரத்துக்கும், தேவிகுளம், பீர்மேடு முதலிய தமிழ்ப்பகுதிகள் கேரளத்துக்கும், கோலார் தங்கவயல் முதலிய தமிழ்நிலம் கர் நாடகத்துக்கும் எடுத்துத் தரப்பட்டபோது இதுபற்றி இங்கே யாரும் கவலைப்படவில்லை.
தமிழ்நாட்டில் இருந்த பெரிய கட்சிகள் எல்லாம் கண்டும், காணாமல் இருந்தபோது, தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி.யும், அவர் கட்சியினருமே குரல் கொடுத்தனர். எல்லைப் போராட்டங்களை எடுத்து நடத்தினர். வடஎல்லை பாதுகாப்புக் குழுவின் செயலாளராக இருந்த கே. விநாயகம், சித்தூர் மாவட்டத்தில் வாழ்ந்த 4 லட்சம் தமிழர்களுக்காகப் பாடுபட்ட மங்கலக்கிழார் இவர்களைத் தமிழக வரலாறு மறக்காது.
எனவே இழந்த மண்ணை மீட்காவிட்டாலும், இருக்கும் மண்ணையாவது இழந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும். மாநிலத்தைக் கூறுபோடுவதைவிட அதன் முன்னேற்றத்துக்காக உழைப்பதே பெருமையாகும்.
தமிழ்நாட்டில் நிர்வாகம் எளிதாக இருக்க வேண்டுமானால் அரசுத் துறைகள் எல்லாம் மாநிலம் முழுவதும் பரவலாக்கப்பட வேண்டும். எல்லாவற்றையும் தலைநகரிலேயே தேக்கி வைப்பது கடந்த காலங்களில் தேவையாக இருக்கலாம்; இனித் தேவை இல்லை. நாட்டின் கடைகோடியில் இருக்கும் ஒருவர் எல்லாவற்றுக்கும் அரசுத்துறையை நாடி சென்னைக்கு மூட்டை கட்டிக் கொண்டு வர வேண்டும் என்பது என்ன நியாயம்?
தொழில் துறையை கோவை அல்லது திருப்பூருக்கும், வேளாண்மைத்துறையை தஞ்சாவூர் அல்லது திருச்சிக்கும் மாற்றவேண்டும். இது தவிர மதுரை, நெல்லை, சேலம் முதலிய புறநகரங்களுக்கும் பிற துறைகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.அதிகாரங்கள் ஓர் இடத்தில் குவிவது ஆபத்தாகும்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டின் தலைநகர் மாநிலத்தின் மையப்பகுதியாகிய திருச்சியில் இருக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தார். ஆனால் அதற்கான முயற்சிகளை அவர் மேற்கொள்ள விடாமல் அதிகாரிகளே தடுத்து விட்டனர் என்று அப்போது கூறப்பட்டது. தலைநகரை மாற்றுவதற்குப் பதிலாகத் துறைகளை மாற்றுவது எளிதாகும்.
இன்றைய அறிவியல் உலகில் அமைச்சர்கள் எங்கு வேண்டுமானாலும் இருந்து கொண்டு நிர்வாகத்தை நடத்த முடியும். "விடியோ கான்பரன்ஸ்' முறை இப்போதே செயல்பாட்டில் இருக்கிறது; மனம் வைத்தால் மார்க்கமா இல்லை?
அழகிய தேன்கூட்டைக் கல்வீசிக் கலைப்பதா? அவை கொட்ட வரும்போது எட்டி எட்டி ஓடுவதா? தெலங்கானா பிரச்னையைத் தொட்டுவிட்டு மத்திய அரசு செய்வது அறியாமல் திகைத்து நிற்பது போதாதா? சும்மா கிடக்கும் சங்கை ஊதிக் கெடுக்க வேண்டாம்.
கட்டுரையாளர் :உதயை மு. வீரையன்
நன்றி : தினமணி
Saturday, December 26, 2009
Friday, December 25, 2009
புவிவெப்பம் தணிக்காத உச்சி மாநாடு
கோபன்ஹேகன் நகரில் கடந்த சில நாள்களாக பரபரப்புடன் நடைபெற்று வந்த தட்பவெட்பம் குறித்த சர்வதேச உச்சி மாநாடு "ஒருவிதமாக' முடிவுக்கு வந்துவிட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அக்கறை மிகுந்த ஆர்வலர்கள், அமைப்புகள், இதழியலாளர்கள் என்று பல தரப்பினரும் இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது என்று சலிப்பு மேலிடக் கூறியுள்ளனர்.
இந்தப் பூமண்டலம் மனித சமுதாயத்துக்கு இயற்கை அளித்த ஒப்பில்லாத வரம். மனித குல நாகரிக வளர்ச்சி பெருமைக்குரிய எல்லைகளைத் தொட்டு நின்றது. இயற்கையின் விநோதங்களை மனிதன் தனது அறிவாற்றலால், ஆராய்ச்சியால் கண்டறிந்து அதை சமூக வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் பயன்படுத்தி வந்துள்ளான். அந்த வகையில் 19-ம் நூற்றாண்டில் நீராவி என்ஜின் கண்டுபிடிக்கப்பட்டது. உலகில் தொழிற்புரட்சிக்கு வழிவகுத்தது. ஆனால் அந்தத் தொழிற்புரட்சி உலகந்தழுவிய அளவில் இயந்திர உற்பத்திக்குப் பெரிதும் பயன்படுத்தப்பட நேரிட்டபோது, சுற்றுச் சூழல் தூய்மைக்குக் கேடு நிகழ்ந்தது; பூமிக்கு மேலான வளிமண்டலம் மாசுபடலாயிற்று.
உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு மின் உற்பத்தி அடித்தளமாக அமைந்தது என்றால், அந்த மின்சாரத்தை உற்பத்தி செய்ய பூமிக்கு அடியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலக்கரியை எரியூட்டிப் பயன்படுத்துவது அவசியமானது. உலக நாடுகள் அனைத்தையும், ஒவ்வொரு நாட்டின் நகரங்கள் - கிராமங்களையும் இணைத்து மக்கள் தொடர்புக்கும், வர்த்தகத்திற்கும் பெரிதும் உதவிய போக்குவரத்து சாதனங்கள் பல்கிப் பெருகின என்றால், அவற்றோடு சேர்ந்து பூமிக்கும், கடலுக்கும் அடியிலிருந்து எடுக்கப்பட்ட திரவ எரிபொருளான பெட்ரோலியப் பொருள்கள் பெருமளவுக்குப் பயன்படுத்தப்பட நேரிட்டது. இவை - நிலக்கரியும், பெட்ரோலியப் பொருள்களும் - சேர்ந்து எழுப்பும் புகை மண்டலம், காற்று வெளியைக் கரியமில வாயுவால் மாசுபடுத்தியது. இதர தொழில்களில் பயன்படுத்தப்பட்ட ராசயனக் கழிவுகளும் இந்த மாசுப்பெருக்கத்தின் பரிமாணத்தை மேலும் பெருக்கின. இவை இயற்கை நிகழ்வுகளின் மீதும் தாக்கத்தைச் செலுத்தலாயின. கூடவே, காடுகள் அழிக்கப்பட்டதும், பல்லாயிரக்கணக்கான நூற்றாண்டு காலமாக இயற்கை சேமித்து வைத்த வளங்கள் அனைத்தும் வேகவேகமாகப் பயன்பாட்டுக்கு உள்படுத்தப்பட்டதும், அந்த வளங்களை மீண்டும் பெருக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படாததும், பாரதூரமான விளைவுகளுக்கு இட்டுச் சென்றன. உயிரினங்களின் வாழ்க்கைக்குத் தேவையான சுத்தமான காற்று, நீர், அனைத்தும் மாசுபட்டன; மறுபக்கம் இயற்கைச் சீற்றங்கள் பேரிடர்களாக விடியலாயின. வளர்ச்சியும், முன்னேற்றமும் தொழிற்புரட்சி தந்த வரம் என்றால், சுற்றுச்சூழல் பாதிப்பு அதனால் விளைந்த சாபக் கேடகாக உடன் வந்தது.
இந்தச் சுற்றுச்சூழல் பாதிப்பின் ஒரு முக்கிய வெளிப்பாடு புவி வெப்பம் உயர்வும், அதன் தொடர்ச்சியாகக் கடல் நீரும் வெப்பமடைந்து கடல்மட்டம் உயரும் ஆபத்துமாக எதிர்நின்றது. பூமியின் காற்று மண்டலத்துக்குக் கவசமாக அமைந்துள்ள ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து, மனித குலத்துக்குப் பேரபாயத்தை விளைவிக்கும் சூழல் அச்சுறுத்தியது. பருவமழை உள்ளிட்ட இயற்கையின் தொடர் நிகழ்வுகளில் பாதகமான மாற்றங்கள் தென்படலாயின. இவற்றை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உலகளாவிய முறையில் மேற்கொள்ளப்படாவிட்டால், மனித சமுதாயம் ஒரு பேரழிவை எதிர்கொள்வது தவிர்க்க முடியாததாகிவிடும் என்ற கவலை எழுந்தது.
ஐக்கிய நாடுகள் சபை 1972-ல் இதுகுறித்த ஒரு சர்வதேச மாநாட்டைக் கூட்டி, அதில் மனித சமுதாயத்தின் சுற்றுப்புறச் சூழல் தொடர்பான ஒரு பிரகடனத்தை மேற்கொண்டது. இம்மாநாடு ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெற்றது. இதையடுத்து ஐ.நா. முயற்சியில் 1989, 1991-ம் ஆண்டுகளில் சுற்றுச்சூழலும் வளர்ச்சியும் குறித்த பொதுப்பேரவைத் தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன. கடல் மட்டம் உயர்வதனால் பாதிப்புக்குள்ளாகக் கூடிய தாழ்நிலைத் தீவுகள், கடலோரப் பகுதிகள் குறித்தும் ஐ.நா. தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுச் செயல்திட்டங்களும் உருவாக்கப்பட்டன. ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்காக 1985-ல் வியன்னாவிலும், 1987-ல் மாண்ட்ரீலிலும் சர்வதேசக் கோட்பாடுகள் நிறைவேற்றப்பபட்டன. தட்பவெட்பம் தொடர்பான உலக இரண்டாவது மாநாடு 1990-ல் நடைபெற்றது. இவற்றின் முத்தாய்ப்பாகத் தட்பவெட்பம் குறித்த வரையறைக் கோட்பாடு ஒன்றை ஐ.நா. 1992 மே 9 அன்று நியுயார்க் நகரில் ஏற்று வெளியிட்டது.
1992-ம் ஆண்டின் இந்த ஐ.நா. கோட்பாடு ஒரு மிக முக்கியமான பாகுபாட்டை அங்கீகரித்தது. புவிவெப்பம் அதிகரிப்பின் பாதிப்புகள் உலக நாடுகள் அனைத்துக்குமான அச்சுறுத்தலே என்றாலும், இந்தப் புவி வெப்பத்துக்குப் பிரதான பொறுப்பு பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த நாடுகள்தான்; வளரும் நாடுகள் தத்தம் பொருளாதார வளர்ச்சியிலும் அக்கறை கொள்ள வேண்டியவையாக இருப்பதனால், அவை புவிவெப்பத்துக்குக் காரணமான கரியமில வாயு வெளியேற்றத்தைத் தவிர்ப்பதோ, கட்டுப்படுத்துவதோ அவற்றின் மக்கள் நலன்களுக்கு உகந்ததாக அமையாது; என்று இந்தக் கோட்பாடு வளர்ச்சியடைந்த நாடுகள், வளரும் நாடுகள் என்று உலக நாடுகளைப் பாகுபடுத்தி, கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துகிற கடமையை வளர்ச்சியடைந்த நாடுகளின் மீதே சுமத்தியது. இந்தக் கோட்பாட்டில் இணைக்கப்பட்ட இரண்டு பட்டியல்களில் ஒன்றில் 36 நாடுகள் இடபெற்றன. இவை கரியமில வாயு வெளியேற்றத்தைக் கணிசமாகக் குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டன. இந்த 36 நாடுகளிலிருந்து 24 நாடுகளைத் தனியே பிரித்தெடுத்து - இவை பெரிதும் வளர்ச்சியடைந்து வசதி பெற்ற நாடுகளாக இருந்தமையால் - வளரும் நாடுகளுக்கு புவிவெப்ப உயர்வு காரணமாக நேரிடும் பாதிப்புகளை எதிர்கொள்ள நிதி உதவிகளும் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த 1992-ன் ஐ.நா. கோட்பாடு, உறுப்பு நாடுகள் அனைத்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டபோதிலும், இது ஒரு குறிக்கோள் என்ற அளவில் மட்டுமே அமைந்தது. இதில் வரையறுக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்ற வளர்ச்சியடைந்த நாடுகள் மீது ஐ.நா. எவ்வித சட்டரீதியான நெருக்குதலையும் கொடுக்க இயலாது.
எனினும், இந்த ஐ.நா. கோட்பாடு அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளுக்கும், மாநாடுகளுக்கும் அடிப்படையாக அமைந்தது. புவிவெப்ப அதிகரிப்பால் கூடுதலாகவும், உடனடியாகவும் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய கவலைக்குரிய நிலைமையில் உள்ள நாடுகளாக, சிறு தீவு நாடுகள்; தாழ்நிலைக் கடலோர நாடுகள்; சதுப்பு நிலம், காடுகள் நிறைந்த நாடுகள்; இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் நிலையில் உள்ள நாடுகள்; வறட்சி - பாலை நில பாதிப்புகளைக் கொண்ட நாடுகள்; நகர்ப்புற சுற்றுச்சூழல் மாசு விகிதம் உயர்வாக உள்ள நாடுகள்; எளிதில் பாதிப்புக்கு இலக்காகும் சுற்றுச்சூழல் அமைந்த நாடுகள்; எரிபொருள்களை (நிலக்கரி, எண்ணெய்) எடுத்து ஏற்றுமதி செய்வதை மட்டுமே நம்பி நிற்கும் நாடுகள், சிறு நிலப்பகுதியை மட்டுமே உள்ளடக்கிய இடைநிற்கும் நாடுகள் என்று 9 வகையாக இந்தக் கோட்பாடு வரையறுத்தது; வளர்ச்சியடைந்த நாடுகள் இந்த வகை நாடுகள் மீது அக்கறை செலுத்தி உதவிட வேண்டும் என்று அது சுட்டிக்காட்டியது.
ஒரு நல்லெண்ண சமிக்ஞையாக மட்டுமே அமைந்த இந்த ஐ.நா. கோட்பாட்டுக்கு, வரையறுக்கப்பட்ட இலக்குகளுடன் கூடிய சட்டரீதியான நிர்பந்தத்தை உள்ளடக்கிய ஓர் உடன்பாடாகச் செயல்வடிவம் கொடுக்கிற முன்னேற்றம் 1997-ல் நிகழ்ந்தது. ஜப்பானின் கியோட்டா நகரில் ஐரோப்பிய யூனியனும், 37 வளர்ச்சியடைந்த நாடுகளும் சேர்ந்து 1997 டிசம்பர் 11 அன்று மேற்கொண்ட இந்த ஒப்பந்தம்தான் கியோட்டோ உடன்பாடு என்று அழைக்கப்படுகிறது. 2008 முதல் 2012 வரையிலான ஐந்தாண்டுகளுக்கு, வளர்ச்சியடைந்த ஒவ்வொரு நாடும் எந்த அளவுக்குப் பசுங்கூட வாயுக்கள் (கரியமில வாயு) வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும் என்று இந்த உடன்பாடு வரையறுத்தது. 150 ஆண்டுகளுக்கும் மேலான தொழில் வளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுப் பலன் அனுபவித்து வரும் வளர்ச்சியடைந்த நாடுகளே, புவி வெப்பத் தணிப்புக்கான சுமையை ஏற்க வேண்டும் என்பது கியோட்டோ உடன்பாட்டின் மையக் கோட்பாடு. இதுவே பொதுவான - ஆனால் பாகுபடுத்தப்பட்ட - பொறுப்புகள் என்று அறியப்பட்டது. இந்த கியோட்டோ உடன்பாட்டை அமெரிக்கா இன்றளவும் ஏற்க மறுத்து வந்துள்ளது மட்டுமன்றி, இதைத் தகர்த்தெறிவதற்கும் தற்போது நடந்து முடிந்துள்ள கோபன்ஹேகன் மாநாட்டில் விடாப்பிடியான முயற்சியை மேற்கொண்டது.
இந்தப் பின்புலத்தில்தான் கோபன்ஹேகன் உச்சிமாநாடு சர்வதேச ரீதியில் பெரிய எதிர்பார்ப்புகளை எழுப்பியிருந்தது. இதற்கு முன்னோடியாக அமெரிக்காவும், வளர்ச்சியடைந்த நாடுகள் சிலவும் சேர்ந்து, கோபன்ஹேகனில் ஒரு சர்வதேச ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான முன்னோட்டப் பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டிருந்தன.
சுற்றுச்சூழலில் அக்கறை கொண்ட தன்னார்வ அமைப்புகள் பலவும், கோபன்ஹேகனில் குழுமி, ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு, "பூமண்டலம் காப்போம்; புவிவெப்பம் தணிக்க ஒப்பந்தம் நிறைவேற்று' என்று முழங்கவும் செய்தன.
இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்காவை ஒரு சர்வதேச உடன்பாட்டை ஏற்றுச் செயல்படுத்த இசைய வைக்க வேண்டும் என்று, ஐரோப்பிய வளர்ச்சியடைந்த நாடுகள் உள்ளிட்டு ஒருமுகமான நிர்பந்தம் செலுத்தப்பட்டது. ஆனால் உச்சிமாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவோ, சட்டரீதியான கட்டுப்பாட்டை விதிக்கும் எந்த ஒப்பந்தத்தையும் ஏற்க மறுத்தார்.
தனிநபர் சராசரிக் கணக்கில், இந்தியாவைப்போல் 20 மடங்கு அதிக அளவில் கரியமில வாயுவை வெளியேற்றி வரும் அமெரிக்கா, தனக்கென்று எந்தப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளாமல், வளரும் நாடுகள் - குறிப்பாக சீனாவும் இந்தியாவும் - கரியமில வாயு குறைப்பு இலக்குகளை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியது; அது மட்டுமல்ல, வளரும் நாடுகளின் இந்த நடவடிக்கைகள் சர்வதேசக் கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்று வாதிட்டது.
வளரும் நாடுகள் ஜி - 77 என்ற பெயரில் தங்களுக்கிடையிலான சர்வதேச ஒத்துழைப்பை அண்மைக் காலங்களில் மேற்கொண்டு வந்துள்ளன.
சர்வதேச நிதி நெருக்கடியின்போது, வளர்ச்சியடைந்த நாடுகளின் நிர்பந்தங்களை எதிர்கொள்ள இந்த ஜி-77 நாடுகளின் ஒத்துழைப்புப் பெரிது பயன்பட்டது. கோபன்ஹேகன் உச்சிமாநாட்டில், அமெரிக்காவையும், வளர்ச்சியடைந்த இதர நாடுகளையும் ஒன்றிணைந்து நிர்பந்திக்க இந்த ஒற்றுமையை வளர்த்தெடுத்துச் செல்ல வேண்டிய கடமையை இன்றைய இந்திய ஆட்சியாளர்கள் முழுமையாக நிறைவேற்ற முற்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது. ஜி-77 நாடுகளுடன் சேர்ந்து கொண்டே சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், பிரேசில், தென்ஆப்பிரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நான்கு நாடுகள் தனியாக அமெரிக்காவுடன் கருத்தொற்றுமையை எட்ட முயற்சித்தன; இது வளரும் நாடுகளின் ஒற்றுமையை ஊனப்படுத்துவதாக அமைந்தது.
கியோட்டோ உடன்பாட்டுக்கு வேட்டு வைக்கிற அமெரிக்க முயற்சி வெற்றி பெறவில்லை என்பது, 2010-ம் ஆண்டில் சர்வதேச உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சியை மீண்டும் தொடர்ந்து மேற்கொள்ள ஒரு வாயில் திறக்கப்பட்டுள்ளது என்பதுமே, கோபன்ஹேகன் உச்சி மாநாட்டில் 26 நாடுகள் இணைந்து ஏற்றுள்ள உடன்பாட்டின் சாதகமான அம்சங்கள். இந்த உடன்பாட்டை "கவனத்தில் கொள்வதாக' மட்டுமே உச்சி மாநாட்டில் பதிவானது.
இதில் அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ள (கரியமில வாயு குறைப்புக்கான) பொறுப்பு என்பது, வளரும் நாடுகளான இந்தியா - சீனாவோ, இதர வளர்ச்சியடைந்த நாடுகளான ஐரோப்பிய யூனியன் - ஜப்பானோ ஏற்றுக்கொண்ட அளவை விடக் குறைவே என்பது ஒரு நியாயமற்ற அளவுகோல். கரியமில வாயு குறைப்பு நடவடிக்கைகள் மீதான சர்வதேசக் கண்காணிப்பு என்பதற்குப் பதிலாக, சுயவிருப்பத்தின் பேரில் சர்வதேச சமூகத்திற்கு அறிக்கை அனுப்பி வெளிப்படையாக நடவடிக்கை மேற்கொள்வதாக இந்தியா இசைந்துள்ளது.
பாதிப்புக்கு இலாக்காகக் கூடிய நாடுகளுக்கு நிதி உதவியாக 2010 - 2012-ல் 3000 கோடி டாலரும், 2020-க்குள் 10000 கோடி டாலரும் திரட்டி உதவுவதாகப் பணக்கார நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. ஆனால், கடல்கோளுக்கு இலக்காகும் அழிவின் விளிம்பைத் தொட்டு நிற்கிற துவாலு என்ற குட்டித் தீவு நாடு ""30 வெள்ளிக் காசுக்கு எங்கள் எதிர்காலத்தையே காவு கேட்பதா?'' என்று வெளிப்படுத்திய குமுறல்தான் கோபன்ஹேகன் உச்சி மாநாட்டுக்குப் பின் எதிரொலித்து நிற்கிறது!
கட்டுரையாளர் : உ .ரா. வரதராசன்

Labels:
கட்டுரை,
சுற்றுச்சூழல்,
புவி வெப்பம்
வகுபடாத காலத்தை வகுத்த பெருமகன்!
""நீங்கள் என்னை விட்டு விலகி இருக்கும்போது விண்ணரசை விட்டு விலகியிருக்கிறீர்கள்; எனக்குப் பக்கத்திலிருக்கும்போதோ நெருப்புக்குப் பக்கத்தில் இருக்கிறீர்கள்''.
இது 2000 ஆண்டுகளுக்கு முன் நம்முடைய ஊருக்கு வந்த தாமசின் நற்செய்தியில் காணப்படும் இயேசுவின் ஒப்பற்ற வைரவரிகள். இயேசு பேசியதெல்லாமே கவிதைதான்.
யார் யார்க்கும் விண்ணரசை அடைவதுதானே நோக்கம். இயேசு நம் பக்கத்திலேதானே இருக்கிறார்; அவரை விட்டு விலகினால்தானே விண்ணரசு விலகிப் போகும். பக்கத்திலேயே இருப்போம் என்று ஒருவன் இந்த வசதியான முடிவுக்கு வந்தால், அவனை இயேசு எச்சரிக்கிறார்: ""எனக்குப் பக்கத்திலிருக்கும்போது நெருப்புக்குப் பக்கத்திலிருக்கிறீர்கள்''.
பிறந்தபடியே சாவதற்கு இயேசு தேவையில்லை. மாற்றமுறுவதற்கும், மாசுகள் நீங்கப் பெறுவதற்குமே இயேசு தேவை. மாசுகள் நீங்கப் பெறுவது எளிதில்லை. பாடுகளை ஏற்க வேண்டும். இயேசுவைத் தொட்டுக் கொண்டு திரிவதனால் மட்டுமே விண்ணரசு கிட்டி விடாது.
முதலில் மாற்றத்தை விரும்ப வேண்டும்; அது பாடுகளின் வழியாக அன்றி வெறும் வழிபாடுகளின் வழியாக வராது என்பதையும் தேர்ந்து தெளிந்து விட வேண்டும். அந்தக் குறைந்த அளவு அறிவாவது இருந்தால்தான் இயேசுவால் உதவ முடியும்.
"கேட்கச் செவியுள்ளவர்கள் கேட்கட்டும்' என்று இயேசு சொல்வார். எல்லாருக்கும்தான் காது இருக்கிறது; நுண்மையான ஒலிகளைக் கேட்கும் ஆற்றல் கூட அக் காதுகளுக்கு இருக்கிறது. இருந்தும் என்ன பயன்? மாற்றத்துக்கான மனவிருப்பம் பெறாதவனுடைய காதுகள் கேட்டும் கேளாத்தகையவையே. அவனுக்கு இயேசு பேசுவது காதில் விழாதே. மாறாக செவிடனுக்கும் இயேசு பேசுவது கேட்கும், அவன் மனம் திரும்ப விருப்பமுடையவனாக இருந்தால்.
கேட்கச் செவியுள்ளவர்களுக்கு இயேசு சொல்கிறார்: ""உங்களை நான் இளைப்பாற்றுகிறேன்; என் நுகத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்; என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிது; நான் கனிவும் மனத்தாழ்ச்சியும் உடையவன். (மத்: 11 : 28)
வாழ்க்கை எளிதானதில்லை; சிக்கலானது; அந்தச் சிக்கலை அவிழ்க்க முயன்று மேலும் மேலும் சிக்கலாக்கிக் கொள்வதுதான் மனித இயல்பு. அந்த முயற்சியில் அவர்கள் களைத்தும் போய்விடுகிறார்கள். அவர்களுக்கு இளைப்பாறுதல் தருவதாக உறுதி அளிக்கிறார் இறைமகன் இயேசு. ஆயினும் எந்தப் பாடும் இல்லாமல் உய்வு கிட்ட முடியாதே; பிற நுகத்தடிகளைப் போலன்றி அழுத்தாத நுகத்தடியை நான் உங்களுக்குத் தருகிறேன் என்கிறார்.
வாய்மையே வடிவானவர் இயேசு. என்னைப் பின்பற்றினாலே போதும்; உடனடியாக விடுதலை கிடைக்கும் என்று அவர் சொல்லவில்லை. கழுத்துப் புண்ணாகும் அளவுக்குக் கடினமான நுகத்தடிகளை விட்டுவிட்டு, அழுத்தாத என் நுகத்தடிகளை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றுதான் அழைக்கிறார். ஆனால் நுகத்தடி இல்லாமல் விண்ணரசு வேண்டும் என்பார்க்கு இயேசுவிடம் விடை இல்லை. உயர்நிலை எய்துவது மனித முயற்சி சார்ந்ததுதான். பாடுகள் தவிர்க்க இயலாதவை; ஆனால் குறைவான பாடுகளில் நிறைவான வாழ்வை இறைமகன் இயேசுவால் பெற்றுத்தர முடியும்.
வாழ்வின் கடைசிக்கட்டத்தில் தன்னுடைய போதனைகளையெல்லாம் சுருக்கி ஒரு கட்டளை பிறப்பிக்கிறார்; அதைப் புதிய கட்டளை என்று இயேசுவே சொல்கிறார். இயேசுவின் நுகத்தடி எளிதானது என்பதற்கும் பின்பற்றத் தகுந்தது என்பதற்கும், ஆனால் யாரும் பின்பற்றுவதில்லை என்பதற்கும் அந்தக் கட்டளையே சான்று.
""ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியதுபோல நீங்களும் பிறரிடம் அன்பு செலுத்துங்கள்.'' (யோவான் 13 : 34)
தான் வாழ்ந்து காட்டிவிட்டுப் பிறரைப் பின்பற்றச் சொல்கிறார் இயேசு. இயேசு வெறுப்பையே அறியாதவர்; அன்புதான் அவருடைய வாழ்க்கை; அன்புதான் அவருடைய வாழ்வின் செய்தி.
இரவு உண்பதற்கு ஒருவருக்குத்தான் உணவிருக்கிறது. அதை வெளிக்காட்டாமல், கணவனை உண்ணச் செய்துவிட்டுத் தான் பசி பொறுத்துத் துயிலச் செல்கிறாள் ஒரு மாதரசி.
இருக்கின்ற காசில் ஒருவர்தான் வண்டியில் செல்லலாம். "உன்னால் நடக்க முடியாது; நீ வண்டியில் செல்; நான் நடந்து வருகிறேன்' என்று சிரமத்தைத் தான் மேற்கொள்கிறான் ஒரு பெருங்கணவன்.
நீ பாதி; நான் பாதி சாப்பிடலாம்; உனக்கு மட்டும்தான் வயிறு இருக்கிறதோ என்று கணவன் மனைவியையோ, மனைவி கணவனையோ கேட்டால் அது சட்டப்படி உரிமைக் கொள்கைதான்; ஆனால் வறண்ட கொள்கை; ஆனால் இயேசுவின் கொள்கை ஈரமான கொள்கை. எல்லாரும் உரிமைக் கொள்கையைப் போதிக்கிறார்கள். அது கழுத்தைப் புண்ணாக்கும் நுகத்தடி. இயேசு அன்புக் கொள்கையைப் போதித்தார்; அது அழுத்தாத நுகத்தடி.
ஆனாலும் இவ்வளவு எளிய இயேசுவின் போதனையைப் பின்பற்றி மண்ணிலே ஏன் விண்ணைக் காண முடியவில்லை என்றால் அன்பு செய்வது எளிதானதில்லை. அதற்குத் தன்னை இழக்க வேண்டும். அதனால்தான் எனக்குப் பக்கத்திலிருக்கும்போது நெருப்புக்குப் பக்கத்திலிருக்கிறீர்கள் என்கிறார் இயேசு.
கணவனுக்கும் மனைவிக்கும் சரியாக வரவில்லை என்றால் திருமணத்தை முறித்துவிடு என்று ஏதோ பட்டத்தின் வாலை அறுத்துவிடு என்று சொல்வதுபோல் மிக எளிதாகச் சொல்வான் மோயீசன். அவன் கடவுளிடமிருந்து கட்டளை பெற்றவன்; ஆகவே அவன் பேசியதெல்லாமே வேதம்தான்.
நான் வேதத்தை நிறைவேற்றவே வந்தேன் என்று சொல்லிக்கொண்டே அதை மாற்றிப் புதிய வேதம் படைப்பார் அறிவர்க்கெல்லாம் அறிவரான இயேசு.
மிகவும் மனத்தாழ்ச்சி உடையவரான இயேசு அதுபோன்ற இடங்களில் மிகுந்த அதிகாரத்தோடு, "நான் உங்களுக்குச் சொல்கிறேன்' என்று அறுதியிட்டுப் பேசுவார்.
""அவளுடைய ஒழுக்கக் கேட்டிற்காக அல்லாமல், வேறு எக்காரணம் கொண்டும் தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் விபச்சாரம் செய்தவனாகிறான் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்'' (மத்: 19 : 19) என்று அதட்டிச் சொல்லுவார் மனித குலத்துக்கு உய்வு காட்ட வந்த இயேசு.
""அவர்கள் இருவரும் ஒரே உடலாய் இருப்பர்; இனி அவர்கள் இருவரல்ல; ஒரே உடல். கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்'' (மாற்கு 10 : 8)
மோயீசனையும் பழைய ஏற்பாட்டையும் இயேசு திட்டவட்டமாக மறுதலிக்கும் இடங்கள் பல; அதனால்தான் இயேசுவின் ஞானஉரைக்குப் புதிய ஏற்பாடு என்று பெயர்.
அறுத்துக் கொள்வதோ, அறுத்து விடுவதோ கழுத்தைப் புண்ணாக்கும் கடின நுகத்தடி; அது மோயீசனின் நுகத்தடி. ஓருடலாய் அன்பில் அழுந்தி வாழ்வது அழுத்தாத நுகத்தடி; அது இயேசுவின் நுகத்தடி.
""என்னை நோக்கி ஆண்டவரே, ஆண்டவரே என்று சொல்பவனெல்லாம் விண்ணரசு சேர மாட்டான்; என் தந்தையின் விருப்பப்படி நடப்பவனே சேர்வான்'' (மத் 7 : 21)
""மனிதர் தரும் பெருமை எனக்குத் தேவையில்லை; உங்களை எனக்குத் தெரியும்'' (யோவான் 5 : 41) என்று முகத்திலடித்தாற்போல் சொல்லி விடுகிறார். மனிதர்கள் ஒரு சிறு நன்மை கிடைத்தால் தங்களையே விற்றுக் கொள்ளும் தன்மை உடையவர்கள். இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற வந்த இயேசுவுக்கு, மனிதர்களின் பாராட்டும், பழிப்பும் ஒரு பொருட்டாக இருக்க முடியாது. ""நல்லன செய்தோர் வாழ்வு பெற உயிர்த்தெழுவர்; தீயன செய்தோர் தண்டனைத் தீர்ப்புப் பெற உயிர்த்தெழுவர்'' (யோவான் 5 : 29) என்று இயேசு நல்லதற்கும், கெட்டதற்கும் நம்மைப் பொறுப்பாக்குகிறார்.
மாந்தன் இயல்பிலேயே தன்னலமானவன்; தனக்கு நன்மை வருமென்றால் தயங்காமல் பிறர்க்குத் தீமை செய்வான். தீய மனிதர்களைப் பிரளயத்தாலும் பிறவகையாலும் அழித்து அழித்துக் களைத்துப்போன இறைவன் மனித குலத்துக்கு நல்லதையும், கெட்டதையும் பாகுபடுத்திச் சொல்லி, அவர்களை அறியாமையிலிருந்து விடுவித்து, அவர்களுக்கு விடுதலை தேடிக் கொடுக்கத் தன் மகன் இயேசுவை அனுப்பினான். உலகிலேயே அறிவான யூத இனம், ஒரு யூதப் பெண்ணான மேரியின் மகனை, பேரறிவின் இரட்சியை, பெருங் கருணையாளன் இயேசுவை அறிய மறுத்து அருங்குறி கேட்டது. கடைசியில் சிலுவையில் அறைந்து கொன்றது.
""நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். எவராவது உங்களை ஒரு கல் தொலைவு வரக் கட்டாயப்படுத்தினால், அவரோடு இரு கல் தொலைவு செல்லுங்கள்'' (மத் 6 : 39)
இயேசு தான் வாழ்நாளெல்லாம் போதித்ததற்குத் தானே இலக்கணமாய் வாழ்ந்து காட்டுகிறார். பகைவர்கள் விரும்பியவண்ணம் தன்னுடைய சிலுவையைத் தானே சுமந்து கொண்டு, அவர்கள் விரும்பிய தொலைவான மண்டைஓட்டு மலைக்கு நடக்கிறார். சிலுவையில் உயிர் நீப்பதற்கு முன், ""தந்தையே இவர்களை மன்னியுங்கள்; தாங்கள் செய்வது என்னவென்பதை அறியாமல் செய்கிறார்கள்''.
எந்தக் குற்றமும் செய்யாமல் சாகடிக்கப்படுகின்ற ஒருவன் சாகடித்தவர்களை மன்னிக்குமாறு இறைவனிடம் மன்றாடுவதைவிட ஒருவன் இறைமகன் என்பதற்கு என்ன அருங்குறி வேண்டும்? இன்றுவரை யூதர்கள் அதை உணரவில்லையே.
ஒரு கொலைக் கருவியான சிலுவை, இயேசு என்னும் புனித மகனைத் தாங்கியதால் உலகெங்கும் இரண்டாயிரம் ஆண்டுகளாக வணக்கத்திற்குரியதாகிவிட்டது!
ஒருமுறை கூட்டத்திலிருந்த பெண் ஒருத்தி இயேசுவைப் பார்த்துக் குரலெடுத்துக் கூவினாளாம்: ""உம்மைத் தாங்கிய வயிறும், நீர் பாலுண்ட முலைகளும் பேறு பெற்றவை'' (லூக்கா 11 : 27)
இயேசுவின் பிறப்பால் உலகம் பேறு பெற்றது. அவர் பிறப்புக்கு முந்தைய காலத்தை கிறிஸ்து பிறப்பதற்கு முன் (கி.மு.) என்றும், அவருக்குப் பிந்தைய காலத்தைக் கிறிஸ்துவுக்குப் பின் (கி.பி.) என்றும் அடையாளப்படுத்திப் பெருமைப்படுத்தியது உலகம்.
கட்டுரையாளர் : பழ. கருப்பையா

சமாளிப்பா? திறமையின்மையா?
கடந்த 13 நாள்களாக ஆந்திர மாநிலம் முழுவதுமே கொதித்துப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த நிலைமை மாறி, தெலங்கானா பகுதியில் உள்ள 10 மாவட்டங்களில் மட்டும் 48 மணி நேர பந்த் என்பதாக வரம்புக்குள் வந்துள்ளது வன்முறை.
வன்முறை வரம்பு கடந்ததற்கும், வரம்புக்குள் வந்ததற்கும் காரணம் மத்திய அரசின் நிலைப்பாடாக உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் வெளியிட்ட கருத்துதான். தெலங்கானா மாநிலம் அமைய நடவடிக்கை தொடங்கும் என்று அவர் அறிவித்தவுடன் ஆந்திர மாநிலம் முழுவதும் வன்முறை வெடித்தது. இப்போதைக்கு இல்லை என்று சொன்னதும் வன்முறையின் பரப்பளவு வரம்புக்குள் வந்துவிட்டது.
மத்திய அரசு எதற்காக அப்படியொரு அறிவிப்பை வெளியிடுவானேன், அவஸ்தைப் படுவானேன், இப்போது எதையெல்லாமோ நியாயப்படுத்தி, விஷயத்தைத் தள்ளிப்போடுவானேன்!
தெலங்கானா விவகாரத்தில் முதலில் எடுக்கப்பட்ட முடிவுக்கு உள்துறை அமைச்சர் ஒரு காரணத்தைச் சொல்கிறார். ஆந்திர மாநில முதல்வர் ரோசய்யா தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஏற்பட்ட கருத்தொற்றுமையின் அடிப்படையில்தான் தெலங்கானா அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இம்மாதம் 9-ம் தேதி அறிவித்தேன் என்கிறார். அப்படியானால், அவர் சொன்ன அடுத்த நாளே நூற்று இருபத்தைந்து எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ராஜிநாமா கடிதத்தை ஏன் கொடுத்தார்கள்? அதுவும், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ., எம்.பி.க்களே இத்தகைய முடிவை மேற்கொண்டதன் காரணம் என்ன? அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட்டிருந்தால் எதற்காக இந்தப் போராட்டங்களை இக்கட்சிகள் நடத்தின?
தெலங்கானா பகுதிக்கு உரிய முக்கியத்துவம் தரப்படும் என்று 20 ஆண்டுகளுக்கு முன்பே உறுதி அளிக்கப்பட்டு, தெலங்கானா போராட்டம் மறக்கப்பட்ட நிலையில் அதற்கு உயிர் கொடுத்து, பலமும் கொடுத்தது காங்கிரஸ் கட்சிதானே தவிர, சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி அல்ல.
அதிக முக்கியத்துவம் இல்லாமல், கெüரவத்துக்காக தனக்கென ஒரு கட்சி என்ற அளவில் அரசியல் நடத்திக் கொண்டிருந்த சந்திரசேகர ராவை, காங்கிரஸ் கூட்டணியில் சேர்த்துக் கொண்டு அதிக இடங்களில் போட்டியிட வைத்து, வெற்றி பெறவும் வைத்து, அவர்களைக் கோடிகோடியாய் பணம் சம்பாதிக்க விட்டு பெரிய ஆளாக்கிவிட்டவர் ஆந்திர மாநிலத்தின் மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டி. தெலங்கானா அமைப்போம் என்ற வாக்குறுதியும் கொடுத்து, அதை மத்திய கூட்டணி அரசின் குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் சேர்க்க வைத்தவரும் அவரே. அன்று செய்த அந்தத் தவறுக்காக இன்று ஆந்திரமே அமளிக்காடாகிவிட்டது.
இந்தியத் தேர்தல் முறையில், நேற்று முளைத்த கட்சிகூட தேசியக் கட்சியுடன் இணைந்து கூட்டணியில் போட்டியிட்டு, தன் சின்னத்துக்குக் கிடைக்கும் எல்லா கட்சியினரின் வாக்குகளையும் தனக்கானதாகக் காட்டி, அங்கீகாரம் பெற்ற கட்சியாக மாறுவதும், மார்தட்டிக் கொள்வதும் எல்லா மாநிலங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது. அதேபோன்றுதான், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதியும், கூட்டணி வாக்குகளை தனது வாக்குகளாகக் காட்டி, தன் கட்சிக்கு ஆதரவு இருப்பதாகவும், தெலங்கானாவுக்கு ஆதரவு இருப்பதாகவும் பேசியது. ஆனால், காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி, தெலுங்கு தேசக் கூட்டணியில் தேர்தலைச் சந்தித்தபோது படுதோல்வி அடைந்தது. ஹைதராபாத் மட்டுமே தெலங்கானா தலைநகரம் என்று சொல்லும் இக்கட்சி, மாநகராட்சித் தேர்தலில் அடைந்த படுதோல்வி, இந்தக் கருத்துக்கு ஆதரவு இல்லை என்பதை அம்பலப்படுத்தி, தலைக்குனிவை ஏற்படுத்தியது.
இழந்த கெüரவத்தை நிலைநிறுத்தத்தான் சந்திரசேகர ராவ் இத்தகைய போராட்டத்தை நடத்தினார் என்பதையும், இந்த வன்முறை திட்டமிட்ட சிலரின் நடவடிக்கையே என்றும், புரிந்துகொள்ள உள்துறை அமைச்சருக்கு அரசியல் அனுபவம் போதாதா, அல்லது உளவுத் துறையினர் சரியான தகவல்களைத் தரவில்லையா? தெலங்கானாவைப் பிரித்தால், ஆந்திரத்தில் ராயலசீமா கோரிக்கை எழும், பிற மாநிலங்களிலும் பிரச்னை எழும் என்பதே தெரியாமல், அறிவிப்புச் செய்தோம் என்று உள்துறை அமைச்சரோ அல்லது மத்திய அரசோ சொன்னால், அதைச் சமாளிப்பு என்று எடுத்துக்கொள்வதா அல்லது திறமையின்மை என்பதா? அல்லது எல்லாம் தெரிந்திருந்தும், நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முழுக்க எதிர்க்கட்சிகள் வேறு எதையாவது கத்திக்கொண்டிருக்கட்டுமே என்ற திட்டமிட்ட திசை திருப்பல்தானா! எப்படிப் புரிந்துகொள்வது?
இதனால் ஆந்திர மாநிலம், குறிப்பாக ஹைதராபாத் இழந்தவை எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் என்று நினைக்கும்போது, வேதனையாக இருக்கிறது. மருந்து உற்பத்தி, தகவல்தொழில்நுட்பம், சேவைத் தொழில்கள் இவற்றில் மட்டுமே ரூ. 1000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்தியாவிலிருந்தும் 25 வெளிநாடுகளிலிருந்தும் சுமார் 1000 பிரதிநிதிகள் பங்கேற்பதாக இருந்த சிஐஐ பங்குதாரர் மாநாடு, சென்னைக்கு மாற்றப்பட்டுவிட்டது. வழக்கமாக இந்த மாநாடு நடைபெறும்வேளையில் புதிய தொழில்ஒப்பந்தங்கள் சுமார் ரூ.10,000 கோடி அளவுக்கு ஆந்திர மாநிலத்துக்குக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இப்போதும்கூட, ஆற அமர விவாதித்து சுமுக முடிவு காணப்படும் என்று சொல்வதனால், புதிய முதலீட்டாளர்கள் ஹைதராபாதை கண்டுகொள்ளப் போவதில்லை.
இதன் விளைவால் ஏற்படும் நஷ்டம் ஆந்திர மாநிலத்துக்கு மட்டுமல்ல. ஆந்திர காங்கிரஸ் கட்சிக்கும் தான். உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்துத்தானே ஆக வேண்டும்.

இந்தியாஅரசு,
தெலங்கானா
Thursday, December 24, 2009
புதிய பாதையில் அத்வானி
ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) விரும்பியபடியே மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து எல்.கே.அத்வானி விலகிவிட்டார். ஆனால், இதன் மூலம் அத்வானியின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகிவிட்டது என்று அர்த்தம் கொள்ள முடியாது. ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., அத்வானி இணைந்து கட்சியை வலுப்படுத்த புதிய செயல்திட்டத்தை உருவாக்கியுள்ளனர். அதிகாரப் பங்கீட்டு அடிப்படையிலான இத்திட்டம் நல்ல திட்டம்தான்.
பாஜகவின் அடுத்த தலைவர் நிதின் கட்கரி என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் அறிவித்தபோது, அதை அத்வானி உள்ளிட்ட பலரும் ஏற்றுக்கொண்டனர். நிதின் கட்கரியைத் தேர்ந்தெடுத்ததில் தனக்கும் முக்கிய பங்கு உண்டு என்று அத்வானி கூறியிருந்தார். அதேபோல், அத்வானி தன்னை அணுகி, கட்சித் தலைவர் பதவியை ஏற்குமாறு கேட்டுக் கொண்டதாக நிதின் கட்கரியும் ஒப்புக்கொண்டிருந்தார். இதன் மூலம் தனக்கு அத்வானியின் ஆதரவு உள்ளது என்பதை மறைமுகமாக நிதின் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களாக யார் இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பதிலும் அத்வானிக்கு முக்கிய பங்கு இருந்தது. மக்களவையில் அத்வானிக்குப் பதிலாக எதிர்க்கட்சித் தலைவராக சுஷ்மா ஸ்வராஜும், மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக அருண் ஜேட்லியும் தொடர்ந்து நீடிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை சங்கப்பரிவாரங்களின் தலைவர்களும் ஏற்றுக்கொண்டுவிட்டனர்.
பாஜகவின் சட்டவிதிகள் திருத்தியமைக்கப்பட்டு, நாடாளுமன்றக் குழு தலைவர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு, அதன் தலைவராக எல்.கே.அத்வானி இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அத்வானியின் எதிர்ப்பாளர்களான மூத்த தலைவர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்தும் ஒன்றும் நடக்கவில்லை. ஏனெனில் இதற்கு ஆர்.எஸ்.எஸ். எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பதுதான்.
பாஜக நாடாளுமன்றக் குழு தலைவராக எல்.கே.அத்வானி தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இதில் அதீத ஆர்வம் காட்டவில்லை. கட்சியில் எந்தச் சலசலப்பும் இல்லாமல் வழிநடத்திச் செல்ல அவரால்தான் முடியும் என்று நினைத்திருக்கலாம்.
அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பராக் ஒபாமா, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஹிலாரி கிளின்டனுக்கு வெளியுறவு அமைச்சர் பதவி கொடுத்து அவரது ஆதரவை உறுதி செய்தது போலத்தான் இதுவும். இல்லையெனில் அத்வானியின் ஆதரவாளர்களான அடுத்த தலைமுறையினர் நிதின் கட்கரிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும்.
சோனியா காந்தி எம்.பி.யாவதற்கு முன்னதாகவே அதாவது 1998}ல் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் பதவியை அவருக்கு அளிப்பதற்காக காங்கிரஸ் கட்சி சட்டவிதிகளைத் திருத்தி அமைத்தது. அதன் பிறகுதான் சோனியா காந்தி, கட்சியில் முக்கியத்துவம் பெற்று அதிக சக்திவாய்ந்தவராக உருவானார். 1999, 2004, 2009 தேர்தல்களிலும் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் அளவுக்கு வலுப்பெற்றது.
இப்போது பாஜகவும் சட்டவிதிகளைத் திருத்தியமைத்து அத்வானிக்குப் புதிய பதவியைப் பெற்றுத் தந்துள்ளது. ஆனால், சோனியாவுக்கும் அத்வானிக்கும் வித்தியாசம் உள்ளது. சோனியா, ஆளும் காங்கிரஸ் அரசின் முக்கிய சக்தியாக இருந்து வருகிறார். அத்வானி, பாஜகவின் நம்பிக்கைக்குரிய ஆலோசகராகப் பார்க்கப்படுகிறார்.
புதிய பதவிக்கு வந்துள்ளதன் மூலம் அத்வானி அரசியலிலிருந்து ஓய்வுபெற்றுவிடுவார் என்று யாரும் கருத வேண்டாம். அதாவது பாஜக நாடாளுமன்றக் கட்சித் தலைவரானதன் மூலம் மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் எதிர்க்கட்சித் தலைவராக யாரை நியமிக்கலாம் என்று முடிவு செய்யும் அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல அவர்களை நீக்கவும் அவருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அவசரப்பட்டு அவர் எந்த முடிவும் எடுக்கமாட்டார் என்றாலும், முக்கிய முடிவுகள் எடுக்கும் விஷயத்தில் அத்வானியை கட்சி மேலிடம் ஒதுக்கிவிட முடியாது என்பதுதான் இதன் சாராம்சம்.
பாஜக நாடாளுமன்றக் கட்சித் தலைவராக அத்வானி இருப்பதால் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மாவுடன் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி இணைந்து செயல்பட வழிவகுக்கும். இருவருக்கும் காபினெட் அமைச்சருக்கு இணையான அந்தஸ்து, சலுகைகள் கிடைக்கும் என்றாலும், மரபின் அடிப்படையில் பார்த்தால் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியைவிட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி சற்று உயர்ந்ததுதான் என்று கூற வேண்டும்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் உள்ளவர்களுக்கு அரசு நிர்வாகத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து முக்கியப் பிரமுகர்கள் யாராவது வந்தால், இங்குள்ள எதிர்க்கட்சித் தலைவர்களையும் மரியாதை நிமித்தம் சந்திப்பதுண்டு. மேலும், அரசு ஏதாவது குழு நியமித்தால் அதில் எதிர்க்கட்சித் தலைவருக்கும் முக்கிய இடம் இருக்கும். முக்கிய நியமனங்களில் எதிர்க்கட்சித் தலைவரைக் குழுவில் சேர்க்காமல் எந்த முடிவையும் அரசால் எடுக்க முடியாது.
அத்வானியின் ஆதரவு இல்லாமல் சுஷ்மா ஸ்வராஜ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியிருக்க முடியாது. அதுமட்டுமல்ல; அப்பதவியில் அவர் தொடர்ந்து நீடிக்க வேண்டுமானாலும் அதற்கு அத்வானியின் ஆதரவு தேவை. எனினும் அத்வானிக்குப் பதிலாக சுஷ்மாவைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் கட்சிக்குள் நிலவிவரும் உட்பூசலுக்கு தீர்வு காண முடியாது.
முதலாவதாக, பாஜகவில் அடுத்த தலைவர் யார் என்கிற சர்ச்சை எழுந்தது. அதற்கு ஒருவழியாகத் தீர்வுகாணப்பட்டுவிட்டது. இரண்டாவதாக, பாஜகவின் அன்றாடச் செயல்பாடுகளில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலையீடு இருக்கக்கூடாது என்று கட்சியின் முக்கியத் தலைவர்கள் சிலர் கருத்துத் தெரிவித்தனர். பாஜகவின் முக்கியப் பதவியில் அத்வானி நீடிப்பது சங்கப்பரிவாரங்கள் தலையீட்டை எதிர்ப்பவர்களின் கரங்களை வலுப்படுத்தும்.
ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளரான நிதின் கட்கரி கட்சித் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பதவிக்கு ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர்களை அவர் நியமிக்கக்கூடும்.
அத்வானி உள்ளிட்ட முக்கிய தலைவர்களைப் பதவியிலிருந்து அகற்றும் அல்லது இடைநீக்கம் செய்யும் அதிகாரமும் அவருக்கு உள்ளது. ஆனாலும், சங்கப்பரிவாரங்கள் தங்கள் இஷ்டம்போல் செயல்பட முடியாது.
மூன்றாவதாக, பாஜகவின் நிலைப்பாடு என்ன? நாங்கள் மாறுபட்டவர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்ள பாஜக என்ன செய்யப்போகிறது? இளைய தலைமுறையினரின் வாக்குகளைப் பெற அக்கட்சி என்ன செய்யப்போகிறது? என்பது முக்கியமான விஷயமாகும்.
பாஜகவில் உள்கட்சிப் பூசல்கள் அதிகரித்து, அக்கட்சிக்குக் கெட்டபெயர் ஏற்பட்ட நேரத்தில் புதிய தலைவராக நிதின் கட்கரி பொறுப்பேற்றுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில் அக்கட்சி தோல்வியையே சந்தித்துள்ளது. விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் நாட்டில் தலைதூக்கிய போதிலும் ஆளும் காங்கிரஸ் கட்சியை திக்குமுக்காட வைக்கும் அளவுக்கு பாஜகவால் ஏதும் செய்ய முடியவில்லை.
சங்கப்பரிவாரங்களைத் திருப்திப்படுத்தி, எதிர்ப்பாளர்களைச் சமாளித்து கட்சியை நடத்திச் செல்லவேண்டிய பொறுப்பு, புதிய தலைவரான நிதின் கட்கரிக்கு உள்ளது. மாநில அளவில் தலைவராக அவர் பேசப்பட்டவர்தானே தவிர தேசிய அளவில் அவர் எந்தப் பொறுப்பையும் இதுவரை வகிக்கவில்லை.
நாகபுரியைச் சேர்ந்த நிதின் கட்கரிக்கு ஆர்.எஸ்.எஸ். பின்னணி இருக்கிறது. அதன் தலைவர் மோகன் பாகவத்துடன் சேர்ந்து பணியாற்றினாலும், அவருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகச் சொல்ல முடியாது. எனினும் 52 வயது இளைஞரான நிதின், பாஜகவுக்கும் சங்கப்பரிவாரங்களுக்கும் பாலமாக இருப்பார் எனத் தெரிகிறது. காங்கிரசில் ராகுல் காந்தி எப்படி இளைஞர் படையை வழிநடத்திச் செல்கிறாரோ அதேபோல நிதின் கட்கரியும் பாஜகவை வழிநடத்திச் செல்வார் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் உள்ளது.
பாஜகவில் அடல் பிகாரி வாஜ்பாய், எல்.கே.அத்வானி ஆகிய இருவரும் ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கு மேலாக கட்சியின் வளர்ச்சிக்குப் பாடுபட்டு வந்துள்ளனர். சில சமயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டபோதிலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் திறம்படச் செயலாற்றி வந்தனர். அவர்களின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது.
புதிய தலைவரான நிதின், கட்சியில் எந்தக் கோஷ்டியையும் சேராதவர். அது அவருக்குச் சாதகமான அம்சம். அவரது தலைமையில் பாஜக புதிய கட்டத்தில் அடியெடுத்து வைக்கிறது. வாஜ்பாய்க்கு அடுத்தபடியாக கட்சியில் சிறந்த பேச்சாளராக இருப்பவர் சுஷ்மா ஸ்வராஜ், அதேபோல அருண் ஜேட்லியும் புதிய உத்திகளுடன் செயல்படக்கூடிய திறன்பெற்றவர். இவர்களை அரவணைத்து நிதின் கட்கரி கட்சியை எப்படி கொண்டு செல்லப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கட்டுரையாளர் : நீரஜா சௌத்ரி

மின்சார சிக்கனம் கட்டாயமாக்கப்படுமா?
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்சாரப் பற்றாக்குறை காரணமாக தினமும் 2 மணி நேரம் மின்தடை நடைமுறையில் உள்ளது. மின்சாரப் பயன்பாட்டின் தேவைக்கும், மின்சார உற்பத்திக்கும் இடைவெளி அதிகமாக இருப்பதால் 2000 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை உள்ளது. இது 11 சதவீதப் பற்றாக்குறை என மின்வாரியம் கணக்கிட்டுள்ளது.
இதன் காரணமாக நிரந்தரமான மின்தடையை நாம் அனுபவித்து வருகிறோம். இன்றைய சூழலில் ஒரு யூனிட் மின்சாரத்தைச் சேமித்தால் 2 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ததற்கு ஈடாகக் கருதப்படுகிறது.
தற்போது ஏற்பட்டுள்ள மின்சாரப் பற்றாக்குறைக்கு உடனடியாகத் தீர்வு காண வாய்ப்பில்லை என மின்சார வாரியமே தெரிவிக்கிறது. தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய மின் உற்பத்தித் திட்டங்கள் மூலம் மின்சாரம் கிடைக்க மேலும் 5 ஆண்டுகள் ஆகலாம்.
தேவையான மின்சாரம், நீர்த்தேக்கங்கள், அனல் மின்நிலையங்கள், காற்றாலை, இயற்கை வாயு மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தி விகிதத்தைவிட பயன்பாடு அதிகமாக இருப்பதால் இந்தப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் மின்சாரத் தேவை அதிகரித்துவிட்டது. ஆண்டுக்கு சுமார் 50 ஆயிரம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. மேலும் விவசாயம், குடிசை வீடுகள், நெசவாளர்களுக்கு அரசு இலவச மின்சாரம் வழங்கி வருகிறது. எனவே, மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டிய நிர்பந்தம் உருவாகியுள்ளது.
அண்மையில் மின்வாரியம் மின்சார சிக்கன வாரவிழாவைக் கொண்டாடியது. இந்த விழாவில் மின்வாரிய ஊழியர்கள், தனியார் ஆலை, தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த பொறியாளர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். பொதுமக்கள் யாரும் பங்கேற்கவில்லை. காரணம் இவ்விழா குறித்து போதிய விளம்பரம் இல்லாததால் மின்சார சிக்கன வார விழா குறித்து மக்கள் அறிந்திருக்கவில்லை.
மின்சார சிக்கன வார விழாவை மின்சார வாரியம் மண்டலம், கோட்ட அளவில்தான் நடத்தியது. இந்த விழாவில் பேசிய மின்வாரிய அதிகாரிகள் மின்சார சிக்கனம் இல்லையெனில் எதிர்காலத்தில் மின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத அபாய நிலை இருப்பதைச் சுட்டிக்காட்டினர்.
சமூக அக்கறையுடன் மின்சார சிக்கனத்தை நாம் கடைப்பிடிக்க வேண்டும். எனவே அரசே மின்சார சிக்கனத்தைக் கட்டாயமாக்க வேண்டிய நிலை உள்ளது. மழைநீர் சேமிப்பைக் கட்டாயமாக்கிய அரசு, ஏன் மின்சார சிக்கனத்தைக் கட்டாயமாக்கக் கூடாது என்ற கேள்வியும் எழுகிறது.
பெரும்பாலான அரசு அலுவலகங்களில் மின்சாரம் சிக்கனமாகச் செலவழிக்கப்படுவதில்லை. ஏன் மின்வாரியப் பராமரிப்பில் உள்ள தெருவிளக்குகள்கூட உரிய நேரத்தில் அணைக்கப்படாததால், பகலில் பல மணி நேரம் மின்விளக்குகள் எரியும் நிலை உள்ளது.
இதனால், பெருமளவில் மின்சாரம் வீணாகச் செலவழிக்கப்படுகிறது என்பது உண்மை. எனவே மின்சார சிக்கனம் என்பது ஒரு சதவீதம்கூட நடைமுறையில் இல்லை என்பதை மறுக்க முடியாது.
மின்சாரம் வாழ்வில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
குறிப்பிட்ட சில மணி நேர மின்தடையைச் சமாளிப்பதற்குக்கூட இன்வெர்ட்டர், ஜெனரேட்டர் போன்ற சாதனங்களை நாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
வீடுகள், பங்களாக்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் அதிக அளவில் 40 வாட்ஸ் குழல் விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு மாற்றாக 13 முதல் 18 வாட்ஸ் சிஎப்எல் (இஞஙடஅஇப ஊகஞமதஉநஇஉசப கஅஙட) பல்புகளைப் பயன்படுத்தினால் குறைந்த மின்சாரச் செலவில் அதிக வெளிச்சம் பெறலாம்.
மின்சார சிக்கனத்தைக் கடைப்பிடிக்க இதுபோன்ற சிஎப்எல் பல்புகளை அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பயன்படுத்த அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.
புதிதாகக் கட்டப்படும் வீடுகளில் இதுபோன்ற மின்விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பிக்கலாம். அவ்வாறு மின்விளக்குகளை பொருத்தினால்தான் இணைப்பு வழங்க வேண்டும்.
பிரம்மாண்டமான அரசு விழாக்கள், அரசியல் கட்சியினர் நடத்துகின்ற விழாக்களுக்கு தேவையான மின்சாரம் குறிப்பிட்ட இணைப்பில் இருந்து கிடைக்காது என்பதால் உயர் மின்அழுத்த இணைப்பில் இருந்து கொக்கி போட்டு திருடப்படுவது வாடிக்கையாகிவிட்டது.
கடந்த 15 ஆண்டுகளில் தமிழகத்தில் தொலைநோக்கான மின்உற்பத்தித் திட்டங்கள் கொண்டுவரப்படாத காரணத்தால் உற்பத்தித் திறன் அதிகரிக்கவில்லை என்பதை மறுக்க முடியாது.
ஏற்கெனவே மின் இணைப்புகள் பெற்று மின்சாரத்தைப் பயன்படுத்தி வருவோர் இணைப்புகளில் உள்ள பழுதானவயர்கள் மூலம் மின்சாரம் கசிந்து வீணாவதை மின்சார வாரியம் கண்டறிந்து அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கலாம்.
சமூக அக்கறையுடன் அரசும் மக்களும் மின்சார சிக்கனத்தைக் கடைப்பிடிக்க முன்வந்தால் எதிர்காலத்தில் மின்தடையே இல்லை என்ற நிலையை உருவாக்க முடியும்.
கட்டுரையாளர் : சா. ஷேக் அப்துல்காதர்

தமிழில் டிஸ்கவரி சேனல்: பெண்கள், குழந்தைகள் ஆர்வம்
தமிழில் ஒளிபரப்பாகும் டிஸ்கவரி சேனலை பார்ப்பதில், பெண்களும், குழந்தைகளும் அதிகம் ஆர்வம் காட்டுவதால், 'டிவி' சீரியல்கள் பார்ப்பது குறைந்து வருகிறது. கலாசாரத்திற்கு எதிரான விஷயங்களை, சீரியலாக தயாரித்து சில 'டிவி' சேனல்கள் ஒளிபரப்புகின்றன. பணம் சம்பாதிப்பதை நோக்கமாக கொண்டு தயாரிக்கும் சீரியல்களை பார்க்கும் டீன்-ஏஜ் மாணவர்கள், குழந்தைகள், தவறான பாதைக்கு செல்லும் நிலை உள்ளது. சினிமாவை போல் 'டிவி' சீரியல்களுக்கு சென்சார் போர்டு இல்லாததால், வக்கிரம், குரூரம், ஆபாசம், வன்முறை என, கலாசார சீரழிவிற்கு வித்திடும் வகையில், சில சீரியல்கள் ஒளிபரப்பப்படுகின்றன. இது, சமூக நல ஆர்வலர்களுக்கு, பெரும் கவலையை அளித்து வருகிறது.கடந்த சில மாதங்களாக, டிஸ்கவரி சேனல் தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. பொது அறிவு சம்பந்தமான பூகோளம், விண்வெளி, மருத்துவம், வனவிலங்குகள், காட்டில் உள்ள அதிசயங்கள், பழங்கால மக்களின் வாழ்க்கை முறை என, உலகிலுள்ள அனைத்து அம்சங்களையும் கண்முன் நிறுத்துகிறது. நேரில் சென்று பார்க்க முடியாத பல இடங்களை, தத்ரூபமாக படமாக்கி, அரிய தகவல்களோடு அளிக்கின்றனர். ஆங்கிலத்தில் ஒளிபரப்பானவரை, மொழி புரியாததால், கிராமங்களில், தகவல் புரியாமல் வேறு சேனலை மக்கள் பார்த்து வந்தனர். தற்போது, சுவாரசியம் குறையாமல் வசனங்களும், தகவல்களும் தமிழில் தருவதால், அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் பார்க்க துவங்கியுள்ளனர். தங்களின் குழந்தைகளுக்கும் இச் சேனலை பார்க்க அறிவுறுத்துகின்றனர். சீரியல் பார்க்க நினைக்கும் பெற்றோரும், குழந்தைகளின் நச்சரிப்பதால் டிஸ்கவரி சேனல் பார்க்கத் துவங்கியுள்ளனர். முக்கியமாக, இரவு நேரங்களில், சுவாரசியம் மிகுந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனர். இதனால், தமிழில் ஒளிபரப்பாகும் டிஸ்கவரி சேனல் பார்க்கும் ஆர்வம், பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது.
நன்றி : தினமலர்
Labels:
தகவல்,
தொலைக்காட்சி
Subscribe to:
Posts (Atom)