இந்திய அரசியலில் தனிக்கட்சி ஆட்சி என்பது முடிந்துவிட்டது. கூட்டணி ஆட்சியே கோலோச்சுகிறது. சுதந்திரம் வாங்கித் தந்ததாகக் கூறும் காங்கிரஸ் கட்சியாகவே இருந்தாலும், பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க.வாக இருந்தாலும் சரி, அவை கூட்டணி இல்லாமல் வெற்றிபெற முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது.
நேற்றுமுதல் பகைவர்களாக இருந்தவர்கள் இன்று முதல் நண்பர்களாக மாறுவதும், இன்று நண்பர்களாக இருப்பவர்கள் நாளை எதிரிகளாக ஆவதும் சாதாரண குடிமக்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், அரசியல்வாதிகளுக்கு இது வாடிக்கையாகிவிட்டது.
இந்தச் சந்தர்ப்பவாதத்துக்கு ஒரு தத்துவ விளக்கமும் கூறுகின்றனர். "அரசியலில் நிரந்தரமான நண்பர்களும் இல்லை; நிரந்தரமான பகைவர்களும் இல்லை' என்னே அருமையான கொள்கை விளக்கம், பாருங்கள்!
நல்லவர்கள் அரசியலுக்கு வராமல் ஒதுங்கி ஓடும் காரணம் புரிகிறதா? கடந்த காலங்களில் ஆட்சிபுரிந்த காங்கிரஸ் மீதும், பாஜக மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து போனார்கள். அவர்களுக்கு ஒரு மூன்றாவது அணி தேவைப்பட்டபோது, அந்தச் சூழ்நிலையை இடதுசாரிகள் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டனர். அப்போது அவர்கள் காங்கிரஸ் கட்சிக்குத் துணையாக நின்றனர். மதவாதக் கட்சியான பாஜக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது எனக் காரணம் கூறினர்.
காலம் கடந்து அவர்கள் மூன்றாவது அணியை உருவாக்கியபோது மக்கள் நிராகரித்து விட்டனர். காங்கிரஸ் கட்சிக்குக் கடைசிவரை முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்த இடதுசாரிகளின் அரசியல் மீது அவர்களுக்கு நம்பிக்கை வரவில்லை.
மாநிலங்களிலும் இதுதான் நிலைமை; தமிழ்நாட்டில் ஒவ்வொரு தேர்தலிலும் மாறிமாறி திமுக அல்லது அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரிகளின் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? மத்தியில் மூன்றாவது அணியின் தேவையை உணர்ந்தவர்கள் மாநில அரசியலுக்கு மூன்றாவது அணி தேவையில்லை என்று முடிவு செய்துவிட்டதுதான் மிகப்பெரிய வேடிக்கை!
கடந்த மக்களவைத் தேர்தலின்போது ஈழத்தமிழர் பிரச்னை உச்சகட்டத்தில் இருந்தது. கடைசிநாள் வரை பதவிசுகத்தை அனுபவித்த பாட்டாளி மக்கள் கட்சி, உறவை முறித்துக் கொண்டு அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து கொண்டதை மக்கள் எப்படி ஏற்பார்கள்? விடுதலைப்புலிகளை ஆதரித்துக்கொண்டிருக்கும் மதிமுகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியும் எதிர்மாறான கொள்கைகளைக் கொண்ட அதிமுகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டன.
தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தபடி அமையாத நிலையில் அதிமுகவுடன் கூட்டணி முடிந்துவிட்டது என பாமக மற்றும் இடதுசாரிக் கட்சிகள் ஒருதரப்பாக அறிவித்தன. இதற்கு முன் நடந்த இடைத்தேர்தலில் பாமகவைத் தொடர்ந்து அதிமுகவும் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தன. இடதுசாரிகள் தனியாக நின்று படுதோல்வியடைந்தனர். ஆனால், பாடம் கற்றனரா என்பது தெரியவில்லை.
இப்போது திருச்செந்தூர், வந்தவாசி (தனி) சட்டப்பேரவை இடைத் தேர்தலில் அதிமுக நிற்பதாக அறிவித்தவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அவசரம் அவசரமாக அதன் தலைவரைச் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியினர் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, அவர்கள் மேடையில் பேசப் போவதில்லை என்றும் தனியாகவே கூட்டம் போட்டு ஆதரவு தேடப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.
"ஈழத் தமிழர் பிரச்னையில் எங்கள் கோரிக்கையை மத்திய அரசு கேட்கவில்லை' என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் திமுக , காங்கிரசின் உறவை உதறித்தள்ள முன்வரவில்லை. அப்படி ஒரு நிலை உருவானால், அந்தக் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க அதிமுக காத்துக்கொண்டிருக்கிறது. இதுதான் இங்கே அரசியல் கட்சிகளின் கூட்டணிக் கொள்கை.
தமிழகத்தில் மறுபடியும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர், வந்தவாசி (தனி) ஆகிய இரண்டு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 23-ம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் தெரிந்துவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வந்தவாசி (தனி) தொகுதிக்கு அந்தத் தொகுதி திமுக உறுப்பினராக இருந்த ஜெயராமன் மறைவு காரணமாக அத் தொகுதியில் தேர்தல் நடைபெறுகிறது. திருச்செந்தூர் தொகுதியில் அத் தொகுதி அதிமுக உறுப்பினராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் அந்தப் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்துவிட்டார். இதனால் இந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
திருச்செந்தூர் தொகுதியில் 25 பேரும், வந்தவாசி (தனி) தொகுதியில் 14 பேரும் போட்டியிடுகின்றனர். இதில் திமுக, அதிமுக, தேமுதிக ஆகிய மூன்று கட்சிகளும் மோதுவதால் மும்முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் என்றாலே ஒரு பரபரப்புதான். இப்போது ஆட்சியில் இருக்கும் ஆளும் கட்சியின் மதிப்பீடு அந்தத் தேர்தல் மூலம் கணிக்கப்படும். அத்துடன் வரப்போகும் தேர்தலுக்கான முன்னோட்டமாகவும் இது அமையும் என்பதால் இந்த முடிவுகள் மக்களால் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளும் கட்சி எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று எண்ணுவதும், அதனை எதிர்க்கட்சிகள் எப்படியாவது முறியடித்துவிட வேண்டும் என்று திட்டமிடுவதும் இயல்பு. இதனால்தான் இடைத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது. லஞ்சமும் ஊழலும் தலைவிரித்து ஆடுகிறது.
இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிப்பதைத் தடுக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், வீடுகளுக்குப் பால், பத்திரிகை வினியோகம் செய்பவர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுவர் என்றும், மேலும் சுயஉதவிக்குழுக்கள் மூலம் பணம் பட்டுவாடா நடைபெறாமல் தடுக்க அவர்கள் மீது கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தமிழகத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியுள்ளார்.
தேர்தல் நேரங்களில் வாக்குச் சேகரிக்க வரும் வேட்பாளர்களிடம், "எங்கள் தெருவுக்குக் குடிநீர் வசதி வேண்டும்; சாலை வசதி தேவை' என்று கோரிக்கைகளை முன்னிறுத்துவார்கள். ஆனால், இப்போது மக்கள் பணம்கேட்க ஆரம்பித்து விட்டார்கள் என்றும் அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
இதற்குக் காரணம் என்ன? அரசியல் கட்சிகள் தானே! அவர்கள் மீது இதுவரை ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதா? பெயருக்கு வழக்குகள் போடுவார்கள். அது அடுத்த தேர்தல்வரை தொடரும். அவர்கள் ஆளும் கட்சியானால், அந்த வழக்குகள் கிடப்பில் போடப்படும் அல்லது திரும்பப் பெறப்படும்.
வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட வேட்பாளரை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தால் அதன் தீர்ப்பு வரவும், அடுத்த தேர்தல் வரவும் சரியாக இருக்கும். "வெற்றி பெற்றது செல்லாது' என்று அறிவிக்கப்பட்ட தகுதியிழந்த அந்த உறுப்பினர், முழுபதவிக்காலப் பயனையும் அனுபவித்து விட்டே வெளியேறுகிறார். அவர் இதுவரை பெற்ற ஊதியம் மற்றும் சலுகைகளைப் பறிமுதல் செய்ய சட்டத்தில் இடம் இருக்கிறதா? இத்தனை காலம் வழக்காடியவர் பெறப்போகும் பயன்என்ன?
""அரசியல் கட்சிகள் பணம் கொடுத்தால் வாக்காளர்கள் வாங்கக்கூடாது'' என்னும் பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை. எந்தக் கொள்கையும் இல்லாமல் கூட்டணி அமைத்துக் கொண்டு வெற்றிபெற்று பதவிக்காவும், பணத்துக்காகவும் அலையும் அவர்களிடம், ""வாங்கியது வரை ஆதாயம்'' என்றே மக்கள் நினைக்கின்றனர்.
"உங்களுக்காக உழைக்க எங்களுக்கு உத்தரவிடுங்கள்' என்பது கேட்பதற்கு நன்றாக இருக்கிறதே தவிர நடைமுறையில் நன்றாக இல்லையே! மக்கள் சேவைக்காகவே பதவிகளைத் துச்சமாகத் தூக்கி எறிந்த தூய தலைவர்களை நாடு மறந்துவிட்டது. இப்போது, "மக்கள் சேவையே மகேசன் சேவை' என்று கூறினால் ஏற்கப்படுமா?
இந்த இடைத்தேர்தல் வெற்றி தோல்வியால் எவ்விதப் பயனும் ஏற்படப் போவதில்லை. தேசத்தின் பணம் விரயம் செய்யப்படுகிறது.
ஆந்திரத்தின் முன்னாள் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியின் மனைவி விஜயலட்சுமி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
அதுபோல பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற கட்சிக்கே அந்த இடத்தை அளித்து விடுவதற்கான தேர்தல் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.
""இந்தியா ஒரு பெரிய நாடாக இருப்பதில் ஒரு விசேஷம் இருக்கிறது. கோல்கத்தாவுக்குப் போய் கம்யூனிசத்தை ஆதரித்தும், அலாகாபாத்துக்குப் போய் முதலாளித்துவத்தை ஆதரித்தும், காரைக்குடிக்குப்போய் வகுப்புவாதத்தை ஆதரித்தும் பேச முடிகிறதல்லவா?'' என்று கவிஞர் கண்ணதாசன் இந்திய அரசியலின் முரண்பாட்டைக் கேலி செய்தார். கொள்கையை மறந்த கூட்டணிகளுக்கு இது ஓர் எச்சரிக்கையாகும்.
கட்டுரையாளர் : உதயை மு. வீரையன்
நன்றி : தினமணி
Monday, December 14, 2009
தண்ணீரை சுத்தப்படுத்தும் சாதனம்: டாடா நிறுவனம் அறிமுகம்
குடி தண்ணீரை வடிகட்டும் சாதனத்தை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. சுத்தமான குடிதண்ணீர் கிடைப்பது அரிதாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு டாடா நிறுவனம் 'ஸ்வாச்' என்ற பெயரில் தண்ணீரை வடிகட்டும் சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே பிலிப்ஸ், இந்துஸ்தான் லீவர், எம்.என்.சி.,போன்ற நிறுவனங்கள் தண்ணீர் வடிகட்டும் சாதனத்தை அறிமுகப்படுத்தி விட்டன.இந்த வரிசையில் தற்போது டாடாவும் இறங்கியுள்ளது. முதல் கட்டமாக மும்பை, உத்தரபிரசேதம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சுத்தமான குடிநீரை வழங்கும் 10 லட்சம் 'ஸ்வாச்' சாதனங்கள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆயிரம் ரூபாய் விலையுள்ள இந்த சாதனத்தை பயன்படுத்த மின்சாரம் தேவையில்லை. டாடா கன்சல்டன்சி நிறுவனமும், டாடா கெமிக்கல்ஸ் நிறுவனமும், டைட் டான் நிறுவனமும் ஒன்று சேர்ந்து ஸ்வாச் குடிநீர் சாதனத்தை வடிவமைத்துள்ளன. அரிசி தவிடு போன்ற பொருளால் நானோ தொழில் நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட வடிகட்டும் பொருள் மூன்றாயிரம் லிட்டர் தண்ணீரை வடிகட்டும் திறன் வாய்ந்தது. அதன் பிறகு இந்த வடிகட்டும் சாதனம் தண்ணீரை வடிகட்டுவதை நிறுத்தி விடும். பிறகு வேறு ஒரு பில்டரை மாற்றி கொள்ளலாம். 'ஸ்வாச்' தண்ணீர் சுத்தப்படுத்தும் சாதனத்தின் ஆயுட்காலம் ஐந்து முதல் ஆறாண்டு காலம். மஞ்சள்காமாலை, டைபாய்டு, காலரா,போலியோ உள்ளிட்ட நோய்கள் தண்ணீர் மூலம் பரவுகின்றன. ஸ்வாச் தண்ணீர் வடிகட்டும் சாதனத்தின் மூலம் இந்த நோய்கள் பரவுவதை தடுக்க முடியும், என டாடா நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நன்றி : தினமலர்
விலை உயர்வுக்கு முன்பேர வர்த்தகம் காரணம் அல்ல
விலை உயர்வுக்கும் முன்பேர வர்த்தகத்துக்கும் தொடர்பில்லை என்று என்.சி.டி.இ.எக்ஸ் முன்பேர நிறுவன நிர்வாகத் தலைவர் ஆர். ராமசேஷன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு உணவுப் பொருள்களான பருப்பு, சர்க்கரை ஆகியவற்றை முன்பேர வர்த்தகத்தில் ஈடுபடுத்த தடை விதித்தது. ஆனால் தடை விதிக்கப்பட்ட பிறகு இவற்றின் விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணமே தேவைக்கேற்ப உற்பத்தி இல்லாததுதான். வெளிநாடுகளில் முன்பேர வர்த்தகத்துக்கு ஒருபோதும் தடை விதிப்பது கிடையாது. அங்கு 100 ஆண்டுகளுக்கும் மேலாக முன்பேர வர்த்தக நடைமுறை உள்ளது. இத்தகைய சூழல் இந்தியாவில் உருவாக இன்னும் பல ஆண்டுகள் ஆகும். முன்பேர வர்த்தகம் தொடர்பான விழிப்புணர்வை தொடர்ந்து என்சிடிஇஎக்ஸ் ஈடுபட்டு வருகிறது. இதனால் முன்பேர வர்த்தகத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. முன்பேர வர்த்தகத்தால் நுகர்வோருக்கு மட்டு மின்றி விவசாயிகளுக்கும் கூடுதல் விலை கிடைக்கும் என்றும் ராமசேஷன் தெரிவித்தார்.என்சிடிஇஎக்ஸ் 2003ம் ஆண்டிலிருந்து முன்பேர வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. இதை கனரா வங்கி, கிரிசில், இஃப்கோ, நபார்டு, தேசிய பங்குச் சந்தை, எல்ஐசி, பஞ்சாப் நேஷனல் வங்கி, கோல்ட்மேன் சாஷ், இன்டர்நேஷனல் எக்ஸ்சேஞ்ச், ரேணுகா சுகர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தொடங்கியுள்ளன. இந்நிறுவனத்தில் 5 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிறுவனம் 39 வேளாண் உற்பத்தி பொருட்கள், 6 உலோகங்கள், 3 பாலிமர்கள், 4 எரிசக்தி பொருள்கள் உட்பட 59 பொருட்களின் முன்பேர வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. நாடு முழுவதும் 700 மையங்களில், இருபதாயிரம் டெர்மினல்களுடன் செயல்படுகிறது.
நன்றி : தினமலர்
Sunday, December 13, 2009
பயோகான் நிறுவனம் சாப்பிடக்கூடிய இன்சுலின் மருந்து தயாரிக்கிறது
பெங்களூரைச் சேர்ந்த மருந்து நிறுவனமான பயோகான், சாப்பிடக் கூடிய இன்சுலின் மருந்துப் பொருள் தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.இதற்கான நடவடிக்கைகள் இடையூறு இல்லாமல் நடைபெறுமானால் 2011ம் ஆண்டு தொடக்கத்தில் இந்த இன்சுலின் மருந்து அறிமுகப்படுத்தப்படும் என்று பயோகான் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கிரண் மசூம்தார் தெரிவித்தார். புதிய மருந்துக்கு இன்-105 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான சோதனை மற்றும் ஆய்வுகள் மூன்றாவது கட்டத்தை அடைந்துள்ளதாக அவர் மேலும் கூறினார். நாடு முழுவதுமாக 15 ஆராய்ச்சி மையங்களில் இந்த மருந்து ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் இந்த மருந்தை தயாரித்து சந்தைப்படுத்துவற்கான ஒப்புதல் மற்றும் உரிமம் போன்றவற்றைப் பெறுவதற்கான நடவடிக்கைகளில் இந்நிறுவனம் இறங்கியுள்ளது.
நன்றி :தினமலர்
Labels:
தகவல்,
மருத்துவம்
Saturday, December 12, 2009
வாய்மூடி மெüனிகளாக...
கடலைவிடப் பெரிது "கருணை' மனம் என்பர். இந்த அவசர உலகில் சுயநலம், லாப நோக்கு, நமக்கென்ன வந்தது என்ற ஒருமுகச் சிந்தனை... போன்றவை நாலாபக்கமும் பரவிக் கிடப்பதை நாம் கவலையுடன் உற்றுநோக்க வேண்டியுள்ளது.
நவநாகரிகச் சிந்தனையில் சிக்கியுள்ள இன்றைய மனிதர்கள் பலர், தங்கள் கண்முன் நடக்கும் எந்தச் சம்பவங்களையும் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. "நமக்கேன் வம்பு' என்ற மனப்பான்மையில் அவரவர் வேலையைப் பார்த்துவிட்டுச் செல்லும் வழக்கம் இன்றைய சூழலில் அதிகரித்து வருகிறது.
தள்ளாத வயதிலும், முக்கியப் பணி நிமித்தமாக அவசரமாகப் பஸ்ஸில் ஏறும் வயோதிகர்கள்கூட சிறப்புக் கட்டண பஸ்ஸô, எல்.எஸ்.எஸ். பஸ்ஸô, சாதாரண பஸ்ஸô என பார்த்துத்தான் ஏறவேண்டும் என்று நடத்துநர்கள், ஓட்டுநர்கள் நினைக்கின்றனர்.
அப்படியே ஒருவர் அவசரத்தில் பஸ்ஸில் ஏறிவிட்டால் அந்தப் பயணிக்கு ஒருசில நடத்துநர்களால் கொடுக்கப்படும் "அர்ச்சனை' சொல்லில் அடங்காது. அந்தப் பயணியைக் குறிப்பிட்ட பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிடுவதற்குப் பதிலாக வேறொரு நிறுத்தத்தில் வேண்டுமென்றே இறக்கிவிடும் செயல்களையும் நாம் பார்க்க முடிகிறது.
ஒரு பயணிக்கு இப்படி நேர்ந்துவிட்டதே என நினைத்துத் திரைப்படங்களில் வேண்டுமானால் "ஹீரோ' தட்டிக்கேட்பதை ஆவலோடு நாம் எதிர்பார்ப்போம்; ஏற்றுக்கொள்வோம். ஆனால், இதுபோன்ற உண்மைக் காட்சியை பஸ்ஸில் நேரடியாகப் பார்க்கும் பயணிகளில் ஒருவருக்குக்கூடத் தட்டிக்கேட்கும் மனப்பான்மை இல்லாமல் வாய்மூடி மெüனிகளாகிவிடுகின்றனர்.
பயணிகளிடம் அன்பும், பரிவும் காட்டுவேன் என அவர்கள் (ஓட்டுநர், நடத்துநர்) பணியில் சேர்ந்தபோது எடுத்துக்கொண்ட உறுதிமொழி எங்கே போனது?
"வருமானம் ஈட்டிவந்த குடும்பத் தலைவர் திடீரென மரணமடைய நேரிடுகிறது. 3 பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு 35 வயதே ஆன அவரது மனைவி, அரசின் சமூகநலப் பாதுகாப்புத் திட்டத்தில் உதவித் தொகைக்காக விண்ணப்பித்து காத்துக்கிடக்கிறார்.
அவருக்குச் சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் இருந்து அழைப்பு வருகிறது. உங்களுக்கான உதவித்தொகை ரூ.10,000}க்கான காசோலை தயாராக உள்ளது. ரூ.3 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் காசோலையைப் பெற்றுக்கொள்ளலாம் என அரசு ஊழியர் ஒருவர் அந்த பெண்ணிடம் "பேரம்' பேசுகிறார். அந்தப் பெண்மணி லஞ்ச ஒழிப்பு போலீஸôரைநாடி தனது உரிமையைப் (உதவித்தொகையை) பெற்றுக்கொண்டார்' என்று பத்திரிகைச் செய்தி தெரிவிக்கிறது.
இச்சம்பவத்தில், வாழவேண்டிய வயதில் கணவனை இழந்து, 3 பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு சமுதாயத்தில் போராட வேண்டிய பெண்ணுக்கு, ஆறுதலாக அரசு அளிக்கும் உதவித்தொகைக்குகூட ஈவுஇரக்கமே இல்லாமல் லஞ்சம் கேட்கும் அதிகாரியின் மனப்போக்கை நாம் என்னவென்று சொல்வது!
கணவனை இழந்து மனம் நொந்து தவிக்கும் இதுபோன்ற ஒரு பெண்ணிடம் இதயமே இல்லாமல் கொள்ளையடிக்கும் இதுபோன்ற ஒருசில அதிகாரிகளின் "ஈரமில்லா' எண்ணங்களை எப்படி, யாரால் மாற்றுவது?
அண்மையில் மதுரையில் நடந்த சம்பவம் இது } ஒரு இளம் போலீஸ்காரர் மனைவி ஒருவர் தீயிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரைக் காப்பாற்றச் சென்றபோது அந்த போலீஸ்காரரும் தீக்காயமடைந்தார்.
இருவருமே ஒரு பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 30 சதவிகிதமே தீக்காயமடைந்த அந்தப் பெண், சுமார் 50 தினங்கள் வரை அந்த மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து உயிரிழந்தார். இதில், மனதைப் பதறவைக்கும் விஷயம் என்னவென்றால், மருந்து, மாத்திரை, சிகிச்சைக்கான கட்டணங்கள் முழுவதையும் வசூல் செய்த பின்னரே அந்தப் பெண் உயிரிழந்துவிட்டதாக உற வினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
மனிதநேயமற்ற இதுபோன்ற செயல் இப்பூவுலகில் வேறெங்கும் நடக்குமா என்பதை நாம் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை.
மரணப் படுக்கையில் உள்ள மனித உயிர்களுக்கு விலை வைத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உலையும் வைத்து பணம் சம்பாத்தியமே ஒரே குறிக்கோள் என்ற நோக்கத்தில் பயணிக்கும் ஒருசில மருத்துவமனைகளின் போக்கால் ஏற்படும் விபரீதத்தை நாம் நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை.
பார்ப்பதற்கே அருவெறுப்பான தோற்றத்துடன், ஈ மொய்க்கும் நிலையில் இருந்த தொழுநோயாளிகளையும் தனது கருணைக் கண்ணால் உற்றுநோக்கி, அவர்களிடத்தில் மனதை மட்டும் பார்த்துப் பேசி, அரவணைத்து, தாய்மை போற்றிய அன்னை தெரஸô வாழ்ந்ததும் இப்பூவுலகில்தானே.
கடவுளுக்கு இணையாக மதிக்கப்படும் மருத்துவ உலகமே இப்படித் திசைமாறிச் செல்லத் தொடங்கியுள்ள இந்த பேராபத்து எங்கு போய் முடியும்?
துளியும் கருணையில்லாத கல் நெஞ்சக்காரர்களின் இது போன்ற தவறுகள், சமுதாயத்தில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது சமூக ஆர்வலர்களின் கவலை.
எனவே, இதுபோன்ற மனிதர்களின் தவறுகள் உரிய நேரத்தில் தண்டிக்கப்படவேண்டும். ஆனால், பணபலம், அதிகாரபலம் உள்ளிட்டவற்றால் அவர்கள் காப்பற்றப்பட்டுவிடுவது சமுதாயத்தின் சாபக்கேடே.
இதனால், கோபம் கொள்ளும் சமூக அக்கறையுள்ள சிந்தனையாளர்கள் கிளர்ந்தெழ வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதுபோன்ற கிளர்ச்சிகளை ஆரம்பத்திலேயே தடுக்க ஆட்சியாளர்கள் முன்வரவேண்டும். இல்லையென்றால் வழக்கம்போல் "தும்பை விட்டு வாலைப் பிடித்த' கதையாகிவிடும்.
கட்டுரையாளர் : கொ.காளீஸ்வரன்

கட்டுரை,
மனிதநேயம்
கேள்வி கேட்பார் இல்லையா?
பொது மக்களுக்கு ஏற்படும் குறைபாடுகள் ஒன்று சட்டத்தின் தவறான விதிமுறைகளால் இருக்கலாம் அல்லது அரசு நிர்வாகத்தில் நிலவும் காலதாமதம், அலட்சியப் போக்கு, ஊழல் போன்றவற்றால் மக்கள் அவதியுறலாம்.
சட்டத்தின் குறைபாடுகளை நீக்குவதற்கான அதிகாரம் நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றங்களுக்கு இருக்கிறது. நிர்வாகத்தின் சீர்கேடுகளால் நடைபெறும் அநீதிகளைக் களையவும், அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டங்களைக் கண்காணித்து மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் மக்கள் பிரதிநிதிகள் செயல்பட வேண்டும்.
அன்றாட வாழ்வில் நாட்டு மக்களுக்கு ஏற்படும் பல்வேறு குறைகளை நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்து தக்க நடவடிக்கைகளை எடுக்க நாடாளுமன்ற முறையில் உள்ள வாய்ப்பு
களில் மிக முக்கியமானது கேள்வி நேரம்.
கேள்வி நேரம் என்பது இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தில் 18-ம் நூற்றாண்டில் தொடங்கியது.
இங்கிலாந்து நாடாளுமன்ற முறையைப் பின்பற்றும் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முதல் ஒரு மணி நேரம் கேள்வி நேரமாக ஒதுக்கப்படுகிறது. அதிகபட்சமாக இரு அவைகளிலும் நேரிடை பதிலுக்காக தலா இருபது கேள்விகள் எடுத்துக்கொள்ளப்படும். ஒவ்வொரு நாளும் குறிப்பிடப்பட்ட துறையின் அமைச்சர் நேரிடையாக அவையில் பதிலளிப்பதற்காக நட்சத்திரக் குறியிடப்பட்ட இருபது கேள்விகள் குலுக்கல் முறையில் முன்னதாகவே தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அவையின் விதிமுறைப்படி ஓர் உறுப்பினருக்கு ஒரு நட்சத்திரக் குறியிட்ட கேள்விக்கு மேல் ஒரு நாளைக்குத் தரப்படுவதில்லை.
ஒரே கேள்வியைக் கேட்பவர்கள் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இருந்தால் குலுக்கல் முறையில் இருவர் தேர்ந்தெடுக்கப்படுவர். அவையில் நேரிடையாகப் பதிலளிக்கப்படாமல் இரு அவைகளிலும் தனித்தனியாக ஒவ்வொரு நாளும் இருநூறு கேள்விகளுக்கு எழுத்து மூலமாகப் பதில் தரப்பட்டு அவையின் முன் வைக்கப்படும். இந்த முறையால், இரு அவைகளிலும் சேர்ந்து நாள் ஒன்றுக்கு 440 கேள்வி-பதில்கள் மூலம் அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தும் வாய்ப்பு மக்கள் பிரதிநிதிகளுக்குக் கிடைக்கிறது.
545 உறுப்பினர்களையுடைய மக்களவையின் கேள்வி நேரத்தில், இருபது கேள்விகளுக்கு மட்டுமே நேரடி பதில் ஒரு மணி நேரத்தில் கிடைக்கும் என்பதால் அத்தகைய வாய்ப்பு மிக அரியதாகத்தான் ஓர் உறுப்பினருக்கு அமையும். திங்கள் முதல் வெள்ளி வரை, வாரத்தில் அமைச்சரகத் துறைகள் அனைத்தும் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. உறுப்பினர் எழுப்பும் கேள்வி அந்த பிரச்னைக்குரிய அமைச்சரைக் குறிப்பிட்டு நேரிடையாக அனுப்பப்படுகிறது. கேள்விக்குரிய நாளுக்கு ஐந்து நாள் முன்னதாகவும், 21 நாள்களுக்குள்ளாகவும் உறுப்பினர் தமது கேள்வியை அனுப்ப வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளின் விவரம் அச்சிடப்பட்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் ஐந்தாறு நாள்களுக்கு முன்னதாக அனுப்பப்பட்டுவிடும். ஆக, தன்னுடைய கேள்வி வரும் நாளன்று குறிப்பிட்ட உறுப்பினர் அந்தக் கேள்விக்குரிய பிரச்னைகளைத் துணைக் கேள்விகள் மூலம் கேட்பதற்கான விவரங்களைச் சேகரித்து வைத்து, குறிப்பிட்ட அமைச்சரின் துறை நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்த ஆயத்தமாக இருக்க வேண்டும்.
இந்திய நாடாளுமன்ற மக்களவையில் கடந்த காலத்தில் இருபது கேள்விகளில் நான்கு அல்லது ஐந்து கேள்விகளுக்கு மட்டுமே பதில் பெறப்பட்டு அதற்குள் கேள்வி நேரம் முடிந்துவிடும்.
இங்கிலாந்து மக்களவையில் கேள்வி-பதில்கள் மிக விரைவாகவும், சுருக்கமாகவும் இருக்கும். உதாரணமாக, 30-11-2009 திங்கள்கிழமை ஒரு மணி நேரத்தில் 19 கேள்விகளுக்குப் பதில்கள் தரப்பட்டன.
அதே 30-11-2009 திங்கள்கிழமை நடைபெற்ற இந்திய மக்களவைக் கூட்டத்தின் கேள்வி நேரத்தில் ஒரு புதிய சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அன்றைய தினம் கேட்கப்படவிருந்த இருபது கேள்விகளுக்குத் தொடர்புடைய 38 உறுப்பினர்களில் 4 பேர் மட்டுமே வருகை தந்து தம்முடைய கேள்விகளைக் கேட்டனர். மீதமிருந்த கேள்விகளுக்கு உரிய 34 உறுப்பினர்கள் கேள்வி நேரத்தில் அவையில் இல்லாத காரணத்தால் அரை மணி நேரத்தில் கேள்வி நேரம் முடிவு பெற்று அவை நண்பகல் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதுவரை நடைபெற்ற மக்களவைக் கூட்டங்களில் குறிப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள் பெரும்பாலான கேள்விகள் பதில் தரப்படாமல் விடப்பட்டிருக்குமே தவிர, 26 நிமிடத்துக்குள் கேள்வி நேரம் முற்றுப் பெற்றது கிடையாது. ஒதுக்கப்பட்ட ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகக் கேள்வி கேட்ட உறுப்பினர்கள் அவையில் இல்லாததால், அவை ஒத்திவைக்கப்பட்டது என்பது இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு வேதனையான சாதனை ஆகும்.
கேள்விகள் கேட்டுவிட்டுக் குறிப்பிட்ட தருணத்தில் அவையில் இல்லாத 34 பேர்களில் கட்சிவாரியாகப் பார்த்தால் காங்கிரஸ் (12), பா.ஜ.க. (7), ஜே.டி.யு. (3), சிவசேனா (3), சி.பி.எம். (2), சி.பி.ஐ. (2) மற்றும் ஓர் உறுப்பினர் மட்டும் வராத கட்சிகள் சமாஜ்வாதி, கே.சி.எம்., ஏ.எம்.எம்.ஐ., பிஜு ஜனதாதள், சுயேச்சை ஆகியோர் அடங்கும். ஆக, ஆளுங்கட்சியினர் கேள்வி நேரத்தில் அலட்சியமாக இருப்பதைவிட, கேள்வி கேட்ட எதிர்க்கட்சியினர் பலர் மக்களுக்குப் பணியாற்றத் தமக்குக் கிடைத்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தத் தவறியது கண்டனத்துக்குரியதாகும்.
மக்களவையில் இப்படி என்றால், மாநிலங்களவையிலும் இந்த நோய் வேகமாகப் பரவி வருகிறது. 2-12-2009 அன்று மாநிலங்களவையில் கேள்வி கேட்ட 5 உறுப்பினர்கள் வரவில்லை. மேலும் 8-12-2009 அன்று கேள்வி கேட்ட 7 உறுப்பினர்கள் அவையில் இல்லாத காரணத்தால் அந்தக் கேள்விகளுக்கு நேரிடையான பதில்கள் அவையில் தரப்படவில்லை.
சென்ற 14-வது மக்களவையின் ஐந்தாண்டு காலத்தில் மொத்தம் 89,000 கேள்விகள் கேட்கப்பட்டதாகத் தெரிகிறது. 14-வது மக்களவையின் ஐந்தாண்டு காலத்தில் 56 உறுப்பினர்கள் எத்தகைய கேள்வியையும் கேட்கவில்லை என்று ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது. அவர்களில் முக்கியமானவர்கள் தேவ கவுடா, மம்தா பானர்ஜி, அஜீத் சிங், உமர் அப்துல்லா, கல்யாண் சிங், ஜெகதீஷ் டைட்லர், தர்மேந்திரா, கோவிந்தா போன்ற கட்சித் தலைவர்கள் பலரும், திரையுலகப் பிரமுகர்களும் ஒரு கேள்விகூட கேட்டதில்லை. மேலும், 67 உறுப்பினர்கள் அந்த ஐந்தாண்டு காலத்தில் பத்துக் கேள்விகள் அல்லது அதற்கும் குறைவாகக் கேட்டிருக்கிறார்கள். மொத்த உறுப்பினர்களில் 23 சதவிகிதம் பேர் கேள்வி கேட்கும் பழக்கம் இல்லாதவர்களாக இருந்தனர்.
சென்ற மக்களவையில் சிவசேனா கட்சி உறுப்பினர்கள் ஆனந்தராவ் வித்தோபா அட்சுல் 1,255 கேள்விகளையும், சிவாஜி அதல்ராவ் பாட்டில் 1,251 கேள்விகளையும் கேட்டு முதல் இரண்டு இடங்களைப் பெற்றிருந்தனர். இதை வைத்து, அகில இந்திய அரசியலில் சிவசேனா உறுப்பினர்களுக்கு இருந்த அக்கறை மற்ற கட்சியினருக்கு இல்லாது போயிற்று என்று கூற முடியுமா?
30-11-2009 அன்று கேள்வி கேட்டு அவைக்கு வராத உறுப்பினர்கள் பற்றி அந்தந்தக் கட்சித் தலைவர்களுக்குக் கடிதம் எழுதப்போவதாக அவைத்தலைவர் மீரா குமார் அறிவித்துள்ளார். அவையின் நடவடிக்கைகளுக்காக நிமிடம் ஒன்றுக்கு ரூ.26,000 அரசாங்கப்பணம் செலவிடப்படுகிறது. அன்று கேள்வி கேட்டு வராத உறுப்பினர்களால் அவையின் நடவடிக்கை அரை மணி நேரம் ஒத்திப்போடப்பட்டு வீணான செலவு ரூ. 7.8 லட்சம் ஆகும். இது அரசாங்கப்பணம் என்றாலும் மக்களின் வரிப்பணம்.
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வியின் விளைவாகத்தான் ஹரிதாஸ் முந்த்ரா என்பவருக்கு இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து தவறான முறையில் நிதியுதவி அளிக்கப்பட்டதென்று உறுப்பினர் பெரோஸ் காந்தி (இந்திரா காந்தியின் கணவர்) 1958-ல் மக்களவையில் தீர்மானம் கொண்டுவந்ததன் பேரில், பம்பாய் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எம்.சி.சாக்லா தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அக்குழு அளித்த அறிக்கையின்படி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் நிதிக்கு முந்த்ரா உதவியிருப்பதாகவும், அதன்பேரில், அவருடைய பங்குகளை மிக அதிகமான விலைக்கு வாங்க நிதியமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி உத்தரவின்படி இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் முன்வந்ததும் தெரியவந்தது. இது, அரசாங்க அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திய ஊழல் விவகாரம் என்று சாக்லா குழு தீர்மானித்தது. அதன் பிறகு, நிதியமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி பதவியிலிருந்து வெளியேறினார்.
1973 ஆகஸ்டு 15-ல் கல்வியமைச்சர் நூருல் ஹாசன் முயற்சியால் சுதந்திர இந்தியாவின் முதல் 25 ஆண்டுகள் பற்றிய ஒரு வரலாற்றைத் தொகுத்து காலப்பெட்டகத்தில் வைத்து தில்லி செங்கோட்டை அருகில் ஆழப் புதைத்தார்கள். விஞ்ஞான முறையால் அப்பெட்டகத்தை ஐயாயிரம் ஆண்டுகளுக்குப்பின் வருபவர்களால் தாம் திறந்து பார்க்க முடியும் என்று கூறப்பட்டது. ஆயினும், பெட்டகத்தில் வைக்கப்பட்ட வரலாற்றில் பல தவறான, தாறுமாறான விவரங்கள் இருப்பதாக ஒரு கேள்வி 1973 நவம்பரில் மக்களவையில் வந்தது. அதற்கு, பெட்டகத்திலுள்ள வரலாறு மிகவும் ரகசியமானது, அது ஐயாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகுதான் பார்க்கப்பட வேண்டும் என்று கல்வியமைச்சர் பதிலளித்தார்.
ஆயினும், 1977 மார்ச்சில் மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா அரசாங்கம் அமைந்ததும், அந்தக் காலப்பெட்டகம் தோண்டியெடுக்கப்பட்டு, அதிலிருந்த வரலாற்றுக் குறிப்புகள் தவறானவை என்று நிரூபணமானது. இதில் எனக்கும் பங்கு உண்டு.
சிறுபொறி, பெரும் தீயாக மாறக்கூடும். அதைப்போல், ஒரு சிறிய கேள்வி பெரிய வரலாற்றுத் திருப்பத்தை உண்டாக்கக்கூடும். ஆக, கேள்வி நேரத்தை எந்த வகையிலும் ஒதுக்கி வைப்பது அல்லது அலட்சியம் செய்வது, நாட்டு மக்களுக்கும், நாடாளுமன்றத்துக்கும் இழைக்கப்படும் மாபெரும் துரோகமாகும்.
கட்டுரையாளர் : இரா.செழியன்

மும்பை தாக்குதல் : தாஜ் ஹோட்டலுக்கு ரூ.114 கோடி இழப்பு
மும்பை தாக்குதல் காரணமாக அதிகம் பாதிப்புக்கு உள்ளான தாஜ் ஹோட்டலுக்கு ரூ.114 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்த தாஜ் ஹோட்டல் பொது மேலாளர் வித்யாதர் வைத்யா, இது திட்டவட்டமான இழப்பு தொகை இல்லை எனவும், இன்னும் இழப்பின் மதிப்பு குறித்த ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இழப்பை ஆய்வு செய்து, சரி செய்ய டாடா குரூப்ஸ் நிறுவனத்தின் ஹோட்டல் துறை முன்வந்துள்ளது. தாஜ் ஹோட்டலின் 6 வது மாடியில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான தாஜ் நினைவுச் சின்னம் முற்றிலும் சேதமடைந்திருப்பதாக தாஜ் பொது மேலாளர் தெரிவித்துள்ளார். மேலும் 12வது மாடியில் உள்ள தாஜ் மஹால் மாதிரி வடிவம், 2 உணவகங்கள் ஆகியனவும் சேதமடைந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கான சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நன்றி : தினமலர்
Subscribe to:
Posts (Atom)