நன்றி : தினமலர்
Saturday, December 12, 2009
மும்பை தாக்குதல் : தாஜ் ஹோட்டலுக்கு ரூ.114 கோடி இழப்பு
மும்பை தாக்குதல் காரணமாக அதிகம் பாதிப்புக்கு உள்ளான தாஜ் ஹோட்டலுக்கு ரூ.114 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்த தாஜ் ஹோட்டல் பொது மேலாளர் வித்யாதர் வைத்யா, இது திட்டவட்டமான இழப்பு தொகை இல்லை எனவும், இன்னும் இழப்பின் மதிப்பு குறித்த ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இழப்பை ஆய்வு செய்து, சரி செய்ய டாடா குரூப்ஸ் நிறுவனத்தின் ஹோட்டல் துறை முன்வந்துள்ளது. தாஜ் ஹோட்டலின் 6 வது மாடியில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான தாஜ் நினைவுச் சின்னம் முற்றிலும் சேதமடைந்திருப்பதாக தாஜ் பொது மேலாளர் தெரிவித்துள்ளார். மேலும் 12வது மாடியில் உள்ள தாஜ் மஹால் மாதிரி வடிவம், 2 உணவகங்கள் ஆகியனவும் சேதமடைந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கான சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment