காரின் வெளிப்பகுதி, உட்பகுதி அழகான, எடுப்பான தோற்றத்தை கொண்டது. 4.4 மீட்டர் அகலம், 2,520 மி.மீட்டர் அகலம் கொண்ட சக்கரங்களால் கார் பெரிய அளவில் காணப்படுகிறது. முன்பக்கம் 3 பாரல்ட் ஹெட் லாம்புகள் உள்ளன. கார் கதவின் வெளிப்புற கைப்பிடி மீது பூசப்பட்டிருக்கும் குரோமியம், அதற்கு மேலும் சிறப்பை அளிக்கிறது.
பின்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய மோனேவிதிக் ஆங்குலர் வடிவிலான விளக்குகள், பின்னால் வரும் வாகனங்கள் பார்த்தவுடன் தெரிந்து கொள்ளும் வகையில் சிறப்பாக உள்ளன. அதனுடைய டிரங்க் 460 லிட்டர் கொள்ளளவு உடையது, நீண்ட தூர பயணத்துக்கும் ஏற்றது.
மற்ற கார்களை விட, மான்ஸா ரக கார் ஓட்டுபவர்களுக்கும், உடன் பயணம் செய்பவர்களுக்கும் மனநிறைவை தரும். பின்புறம் உள்ள இருக்கைகளும் அவற்றின் நடுவில் இருக்கும் கை வைத்துக் கொள்ளும் இடம், வீட்டில் அமர்ந்திருப்பது போல் இருக்கும்.
டில்ட் அட்ஜஸ்டபிள் பவர் ஸ்டீயரிங் மற்றும் ஓட்டுனர் இருக்கை, மின்னியல் தொழில்நுட்பத்தால் இயங்கக்கூடிய வெளிப்புற ரேர்வியூ மிரர்களும் உள்ளன. கொலப்ஸிபிள் ஸ்டீரிங் காலம், ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், டியூவல் ஃபிராண்ட் ஏர் பேக்ஸ் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் உண்டு. டாக்கோ மீட்டரில் சிவப்பு கோடு இருப்பதற்கு பதிலாக இன்ஜின் க்ரிடிகல் 'ஆர்பிஎம்'ஐத் தாண்டும்போது இண்டிகேட்டர் முள் சிவப்பாக மாறிவிடும். இன்ஜின்,சென்ட்ரல் லாக்கிங் பியூச்சர் ஆகியவை மேலும் பாதுகாப்பு அளிக்கின்றன.
ஏ.ஆர்.ஏ.ஐ., ஆல் சான்றளிக்கப்பட்ட குவாட்ரஜெட் டீஸல் ஒரு லிட்டருக்கு 21.02 கி.மீ., தூரம் கொடுக்கிறது. சபீர் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 14.5 கி.மீ தூரம் கொடுக்கிறது. மான்ஸா ரக காருக்கு இரண்டு ஆண்டு அல்லது 75 ஆயிரம் கி.மீ., உத்தரவாதம் தரப்படுகிறது. ஏழு நிறங்களில் வெளிவந்துள்ளது. 401 நகரங்களில் தற்போது விறுவிறுப்பான விற்பனையில் உள்ளன.
டாடா கார் ஷோ ரூம்களில் விற்பனையில் உள்ளன. பெட்ரோல் காரின் விலை 4.64 லட்சம் ரூபாய். டீஸல் காரின் விலை 6.56 லட்சம் ரூபாய். இப்போதுள்ள டாடா இன்டிகோ கார் ரகங்கள் இண்டிகோ சிஎஸ், எக்ஸல், மரினா போன்ற கார்களும் விற்பனையில் உள்ளன. டாடா இன்டிகோ வகை கார்கள் 3.73 லட்சம் ரூபாயில் இருந்து 6.56 லட்சம் ரூபாய் வரை உள்ளன.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment