தற்போதைய காலச்சூழ்நிலையில், வாகனங்கள் பல்வேறு பாதிப்புக்குள்ளாகும் நிலை உள்ளது.
மனிதனுக்கு இரு கண் போன்றது, வாகனங்களுக்கு ஹெட்லைட் விளக்குகள். இரவுப்பொழுதில் எதிர்வரும் வாகனங்களை கடந்து செல்ல தரமான ஹெட்லைட் அவசியம். சரியான முறையில் அவை இருந்தால் தான் விபத்துக்களை தவிர்க்க முடியும். டூ வீலரானாலும், காரானாலும் ஹெட்லைட்டை அவ்வப்போது பராமரித்துக் கொள்ள வேண்டும். எதிர்பாராத விபத்து, விஷமிகளின் தாக்குதல் போன்றவற்றால் முதலில் உடைவது ஹெட்லைட் விளக்குகளே.
ஹெட்லைட்டுகள் புதிய வடிவில் தற்போது வந்துள்ளன. அதன் மேல் உள்ள கண்ணாடி பாகம் வாகனங்களுக்கு தகுந்த அமைப்பில் வட்ட வடிவிலும், சதுர வடிவிலும் விற்பனையில் உள்ளன.
சென்னை, டில்லி, பெங்களூரு நகரங்களில் இருந்தும், உத்தர்காண்ட் மாநிலத்தில் இருந்தும் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. டூ வீலரை பொறுத்தமட்டில் 250 ரூபாய் முதல் 400 ரூபாய் வரையில் உள்ளன. அவை தவிர குறைந்த விலை ஹெட்லைட் தயாரிப்புகளும் சந்தையில் உள்ளன. 35 வாட்ஸ் திறன் கொண்ட பிலிப்ஸ் பல்புகள் 120 ரூபாயிலும், கேலஜன் லைட்டுகள் 100 ரூபாயிலும் உள்ளன. டூ வீலர் ஓட்டிகள் அதிகம் இவற்றை வாங்குகின்றனர்.
கார், சுமோ போன்றவற்றுக்கான அதிகம் வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் 300 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை உள்ளது. லூமாக்ஸ், ஆட்டோபால், ஃபியாம் போன்ற நிறுவனங்களின் ஹெட்லைட்டுகள் காருக்கு பயன்படுத்தப்படுகின்றன. பெங்களூரு, டில்லி போன்ற நகரங்களில் தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன.
கார், சுமோ போன்றவற்றுகான ஹெட்லைட்டுகள் 160 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை உள்ளது. அம்பாஸிட்டர்களுக்கு 140 ரூபாயிலும் உள்ளன. இதற்கென உள்ள 90 வாட்ஸ் திறனுடைய பல்புகள் 150 முதல் 200 ரூபாய் வரையில் உள்ளது.
சேலம் மோட்டார் ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனையாளர் ஆனந்தகுமார் கூறுகையில், ''கார், டூ வீலர், 407 போன்ற வாகனங்களுக்கான ஹெட்லைட் மற்றும் அதற்குரிய பல்புகள் விற்பனையில் உள்ளன. டில்லி, பெங்களூரு போன்ற நகரங்களில் இருந்து விற்பனைக்கு வருகிறது. கம்பெனி கார்களுக்கு தகுந்தவாறு தரமான வடிவமைப்பில் உள்ளன. 100 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை காருக்கு ஏற்றாற்போல் ஹெட்லைட் வாங்க முடியும்,'' என்றார்.
நன்றி : தினமலர்
1 comment:
Good blog
Post a Comment