சிறிய கார்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படுகிறது. சிறிய கார் என்பது 4,100 மி.மீ., முதல் 4,450 மி.மீ., வரை நீளம் கொண்டதாக இருக்க வேண்டும், பெட்ரோலில் ஓடும் காராக இருந்தால், 1200 சிசி திறன் கொண்டதாகவும், டீஸலில் ஓடும் கார் 1500 சிசி திறன் கொண்டதாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு ஒரு வரையறை வகுத்துள்ளது. இந்திய ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் சங்கமும் அரசுக்கு சில யோசனையை கூறியுள்ளது. காரின் நீளத்தை அடிப்படையாக கொண்டே சிறிய காரை வரையறுக்க வேண்டும், இன்ஜின் அளவை கருத்தில் கொள்ள கூடாது என்று அந்த சங்கம் கூறியுள்ளது.
இதற்கு டொயோட்டோ மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. டொயோட்டோ நிறுவனம், இந்தியாவில் சிறிய கார் தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.3,800 கோடி முதலீடும் செய்ய உள்ளது. இந்நிறுவனம் சார்பில், சிறிய கார் வரையறை குறித்து, பிரதமரின் முதன்மை செயலாளர் டி.கே.ஏ. நாயரிடம் ஒரு மனு அளிக்கப்பட்டுள்ளது. இதில் 'எங்களது கொள்கையே, சிறியதில் துவக்கி பெரியதாக முடிக்க வேண்டும் என்பது தான். இந்தியாவில் சிறிய கார் உற்பத்திய பெரிய அளவில் மேற்கொள்ள வேண்டும் என எண்ணம் கொண்டுள்ளோம். ஆனால், சிறிய கார் என்ற வரையறையை நீக்க வேண்டும்,'' என்று இந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, சிறிய கார் என்பதை, செயல்பாட்டின் மூலமே வரையறை செய்ய வேண்டும், நீளத்தை அடிப்படையாக கொண்டு வரையறை செய்ய கூடாது என்று ஹோண்டா நிறுவனம் கூறியுள்ளது. இது குறித்து ஹோண்டா நிறுவன தரப்பில் கூறும் போது,'இந்தியாவில், 2011-12ம் ஆண்டில் சிறிய காரை அறிமுகப்படுத்த இருக்கிறோம். இந்திய அரசின் சிறிய கார் வரையறைக்கு உட்பட்டதாகவே அந்த கார் அமையும். இருந்தாலும், உலக ஆட்டோமொபைல் தரத்தை பின்பற்றினால், உலகளவில், கார் உற்பத்தி மையமாக இந்தியா திகழ ஒரு வாய்ப்பாக அமையும்,'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்
1 comment:
Very good and interesting article.
But the length aspect of the car seems to have some discrepancy - length 4100 mm to 4450 mm works out to 13.5 feet to 14.5 feet roughly. Many of the cars - that I see on road these days normally are about 10 feet only. Can you please re-check on this aspect?
Post a Comment