நன்றி : தினமலர்
Thursday, October 15, 2009
விப்ரோ தலைவர் அஜீம் பிரேம்ஜி பெயரில் தனியார் பல்கலைகழகம்
விப்ரோ தலைவர் அஜீம் பிரேம்ஜி பெயரில் பல்கலைகழகம் ஒன்று உருவாக உள்ளது. கர்நாடகத்தின் முதல் தனியார் பல்கலைக் கழகம் என்ற பெருமையை இந்த பல்கலை கழகம் பெறுகிறது. அரசின் கட்டுப்பாடு இல்லாமல் எந்த பல்கலைக் கழகமும் அமைக்க முடியது என்ற நிலையில் நீண்ட முயற்சிக்கு பிறகு இந்த பல்கலைகழகம் உருவாகப் படுகிறது. தனியார் கல்வி அமைப்பு என்றாலும், அரசின் கட்டுப்பாட்டுன் தான் இந்த பல்கலைகழகம் இயக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளின் ஆசிரியைகளுக்கு சிறப்பான பயிற்சி அளிப்பதை முக்கிய இலக்காகக் கொண்டு இயங்கும் இந்த பல்கலைக் கழகம், கல்வியியல் பட்டப் படிப்புகள், தொழில் நுடபத் துறைப் படிப்புகள் உள்ளிட்டவற்றை கற்று தர உள்ளது. அஜீம் பிரேம்ஜி பல்கலைகழக குறித்த அதிகாரப் பூர்வ தகவல்கள் விரைவில் வெளிவரும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment