நன்றி : தினமலர்
Monday, October 19, 2009
டாலரின் மதிப்பு உயர்வால், கச்சா எண்ணெய் விலையில் சரிவு
டாலரின் மதிப்பு மீண்டும் உயர்ந்து வருவதன் காரணமாக கச்சா எண்ணெய் விலையில் சரிவினை கண்டு வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இன்று ஆசிய சந்தையில் டாலரின் மதிப்பு மீண்டும் எழுச்சி பெற்றது. இதனால், கச்சா எண்ணெய் விலை சரிய தொடங்கியது. கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அதிகரித்ததை போல கடந்த வெள்ளி கிழமை கச்சா எண்ணெய் விலை 78.53 அமெரிக்க டாலராக உயர்வினை கண்டது. இது இன்று 78.41 அமெரிக்க டாலராக சரிவினை கண்டது. இன்று காலை ஆசிய சந்தையில், நவம்பர் டெலிவரிக்கான , நியூயார்க் மெயின் கான்ட்ராக்ட், லைட் ஸ்வீட் கச்சா எண்ணெய் விலை, பேரல் ஒன்றிற்கு 12 சென்ட்டுகள் குறைந்து 78.41 அமெரிக்க டாலராக உள்ளது. டிசம்பர் டெலிவரிக்கான பிரண்ட் நார்த் ஸீ கச்சா எண்ணெய் விலை 14 சென்ட்டுகள் குறைந்து 76.85 அமெரிக்க டாலராக உள்ளது.
Labels:
கச்சா எண்ணெய் விலை,
தகவல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment