நன்றி : தினமலர்
Friday, September 4, 2009
சர்க்கரை விலை உயர்வை தடுக்க நடவடிக்கை
சர்க்கரை விலை உயர்வை தடுக்கும் விதமாக தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக 20.45 லட்சம் டன் சர்க்கரை ஒதுக்கி வைக்க மத்திய அரசு முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இனி வரும் மாதங்கள் அதிகம் பண்டிகைகள் நிறைந்த மாதங்கள் என்பதால், சர்க்கரையின் தேவை அதிகம் ஏற்படும். கரும்பை விட கோதுமை உள்ளிட்டவைகளுக்கு அதிக கொள்முதல் விலை கொடுக்கப் படுவதால், விவசாயிகள் அதிகமாக கரும்பு பயிரிடுவதை நிறுத்தி உள்ளனர். இதனால் இந்தியாவில் சர்க்கரை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கியூபா உள்ளிட்ட வெளிநாடுகளிடம் இருந்து சர்க்கரை இறக்குமதி செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. இதனால், சர்க்கரை விலை அதிகளவு உயர வாய்ப்புள்ளது. இதனை தடுக்கும் விதமாக மத்திய அரசு விற்பனைக்காக செப்டம்பர் மாதத்திற்கு 20.45 லட்சம் டன் சர்க்கரை ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் 18.34 லட்சம் டன் வெளி சந்தையிலும், 2.11 லட்சம் டன் ரேஷன் கடைகளிலும் விற்பனை செய்யப் படும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment