நன்றி : தினமலர்
Monday, August 10, 2009
ஐரோப்பிய நாடுகளில் கார்களுக்கான டிமாண்ட் குறையும் அபாயம் : மாருதி, ஹூண்டாய் பாதிக்கும்
பழைய கார்களை தூர எறிந்து விட்டு புதிய கார்களை வாங்குபவர்களுக்கு கொடுத்து வந்த உதவி தொகையை பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் நிறுத்தி விட்டதால் அந்நாடுகளில் புதிய கார்களுக்கான டிமாண்ட் குறைந்து விடும் அபாயம் இருக்கிறது. எனவே இந்தியாவின் மிகப்பெரிய கார் கம்பெனிகளான மாருதி சுசுகி மற்றும் ஹூண்டாய் பெரும் பாதிப்பிற்குள்ளாகும் என்று தெரிகிறது. பழைய மற்றும் அதிகம் புகையை கக்கும் கார்களை தூக்கி எறிந்து விட்டு புதிய மற்றும் அதிகம் புகையை கக்காத, அதிகம் மைல் போக்கூடிய கார்களை வாங்குபவர்களுக்கு பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் ஊக்க தொகை கொடுக்கப்பட்டு வந்தது. அரசாங்கம் கொடுக்கும் இந்த ஊக்க தொகை நாட்டுக்கு நாடு வேறுபடும். பிரிட்டனில் 1999 ஆகஸ்டுக்கு முன் வாங்கிய கார்களை தூர எறிபவர்களுக்கு 2,000 பவுண்ட்கள் ( சுமார் ரூ.1,60,000 ) ஊக்க தொகை கொடுத்தார்கள். இப்போது ஜெர்மனி, பிரான்ஸ், இத்தால், ருமேனியா, ஸ்பெயின், போர்ச்சுக்கல், சைப்ரஸ் மற்றும் லக்ஸம்பர்க் ஆகிய நாடுகள் ஊக்க தொகை கொடுப்பதை நிறுத்தி விட்டன. பிரிட்டன் மட்டும் இன்னமும் கொடுத்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் இருந்து மாருதி சுசுகியும் ஹூண்டாயும் அதிக அளவில் சிறிய கார்களை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ஹூண்டாய் நிறுவனம் 66,500 கார்களை அங்கு ஏற்றுமதி செய்திருக்கிறது. இது, கடந்த வருட முதல் காலாண்டை விட 26.54 சதவீதம் அதிகம். ஐ 10 மற்றும் ஐ 20 கார்கள் அங்குதான் அதிகம் ஏற்றுமதி ஆகிறது. ஊக்க தொகை நிறுத்தப்பட்டிருப்பதால் இவைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இன்னும் ஒரு காலாண்டுக்கு ஏற்கனவே ஆர்டர்கள் வந்து விட்டதாங் பாதிப்பில்லை என்றும் அதற்கு அடுத்த இரண்டு காலாண்டுகளில் தான் பாதிப்பு ஏற்படும் என்றும் எதிர்பார்ப்பதாக ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியாவின் சீனியர் வைஸ் பிரசிடென்ட் அர்விந்த் சேக்ஸானா தெரிவித்தார்.மாருதி சுசுகி நிறுவனம் கடந்த வருட முதல் காலாண்டை விட இந்த வருட முதல் காலாண்டில் இரண்டு மடங்கு கார்களை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment