Monday, August 10, 2009

25 வருடங்களில் 81 லட்சம் கார்கள் : மாருதி சுசுகி சாதனை

25 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்கு வந்தபோது 800 கார்களை தயாரித்து, தனது பயணத்தை துவங்கிய மாருதி சுசுகி நிறுவனம் இதுவரை 81 லட்சம் கார்களை தயாரித்து விற்றிருக்கிறது; மற்றும் ஏற்றுமதி செய்திருக்கிறது. இப்போது இந்தியாவின் மிகப்பெரிய பயணிகள் கார் தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் மாருதி சுசுகி, 1983ம் வருடம் டிசம்பர் 14ம் தேதி அதன் முதல் தொழிற்சாலையை குர்காவ்ன் நகரில் நிறுவியது. அதன் பின மனேசர் நகரிலும் ஒரு தொழிற்சாலையை நிறுவி, அங்கேயும் தயாரிப்பை துவங்கிய அந்த நிறுவனம், இந்த வருடம் ஜூலை 31 ம் தேதியுடன் முடிந்த காலத்தில் மொத்தமாக 81,05,228 கார்களை தயாரித்திருக்கிறது. குர்காவ்ன் மற்றும் மனேசர் தொழிற்சாலையில் இருந்து வெளியிடப்பட்ட 14 மாடல் கார்களின் மொத்த தயாரிப்பு எண்ணிக்கைதான் இது. மாருதி சுசுகி இதுவரை வெளியிட்ட 14 மாடல்களில், ' மாருதி 800 ' மட்டுமே 27 லட்சம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அந்த 27 லட்சம் கார்களில் 25 லட்சம் கார்கள் இந்திய சந்தையில் விற்பனை ஆகி இருக்கிறது. மீதி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டிருக்கிறது. இந்த சாதனை குறித்து கருத்து தெரிவித்த மாருதி சுசுகி இந்தியாவின் சேர்மன் ஆர்.சி.பார்கவா, இந்தியாவின் ஆட்டோமொபைல் இன்டஸ்டிரியை நவீனமயமாக்கும் நோக்கத்தில்தான் நாங்கள் 25 வருடங்களுக்கு முன் இந்தியாவுக்கு வந்தோம். அதை நிறைவேற்றியதுடன், பல புதிய சாதனைகளையும் நிகழ்த்தியிருக்கிறோம் என்றார்.
நன்றி : தினமலர்


No comments: