பழைய கார்கள் விற்பனையில் ஜெனரல் மோட்டார்ஸ் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளது. தனது நிறுவனத்தின் கார்களின் செகண்ட் ஹேண்ட் சேஸ்சை 15 மடங்கு அதிகரிக்க முடிவு செய்துள்ளது ஜெனரல் மோட்டார்ஸ் . நாடு முழுவதும் செகண்ட் ஹேண்ட் கார்கள் விற்பனைக்காக 17 அவட்லெட்கள் திறந்துள்ளது ஜெனரல் மோட்டார்ஸ். இந்த ஆண்டு முடிவுக்குள் இந்த எண்ணிக்கையை 50ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இது குறித்த பேட்டியளித்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கார்ல் ஸ்லிம் : செகண்ட் ஹேண்ட் கார் விற்பனை மார்ச் மாதம் துவக்கப்பட்டது. இதுவரை 100 கார்கள் விற்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் தற்பேததைய நிலவரப்படி 203 டீலர்கள் இருக்கின்றனர். டீலர்கள் எண்ணிக்கையை 2009ம் ஆண்டுக்குள் 260ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment