இரு சக்கர வாகனங்களில் ,மொபட் விற்பனை அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில் மொபட் விற்பனை ஒரு லட்சத்து 28 ஆயிரம் மொபட் வாகனங்கள் விற்பனை ஆயின. கடந்தாண்டு இதே காலாண்டில், விற்பனை ஆனது ஒரு லட்சத்து ஆறாயிரம்; 20 சதவீதம் அளவுக்கு விற்பனை அதிகரித்துள்ளது. இந்தியாவில் மோட்டார் பைக் விற்பனையும் 12 சதவீதம் அதிகரித்துள்ளது.இது குறித்து, டி.வி.எஸ்., விற்பனை பிரிவு தலைவர் எச்.எஸ்.கோயின்டி கூறுகையில், கிராமங்கள் மறறும் சிறு நகரங்களில் தான் அதிக அளவில் மொபட் வாங்குகின்றனர். கடந்த எட்டு ஆண்டுகளில் இவற்றின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எங்கள் மொபட் வாங்குபவர்களில் எந்த மாற்றமும் இல்லை. இந்த மொபட்கள் அதிக சரக்குகள் ஏற்றிச்செல்லவும், கிராம பகுதி செயல்பாட்டுக்கும் அதிகம் பயன்படுத்தபடுகின்றன. சிலர் இந்த மொபட் மலிவு விலையில் கிடைப்பதாலும், இயக்குவதற்கு சுலபமாக இருப்பதாலும் இரண்டாவது பைக்காக வாங்கி பயன்படுத்துகின்றனர்' என்றார்.
மொபட் உற்பத்தியில் டி.வி.எஸ்., கைனடிக் ஆகிய இரு பெரிய கம்பெனிகள் மட்டுமே உள்ளன. அதில் கைனடிக்கின் லுனா மொபட் உற்பத்தியை நிறுத்தி விட்டது. டி.வி.எஸ்.,ன் எக்செல் சூப்பர் மட்டுமே தற்போது நிலையான மொபட்டாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, ஆண்டு வளர்ச்சியில் மொபட் விற்பனை 7 முதல் 8 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
நன்றி : தினமலர்

No comments:
Post a Comment